வினைல்லித்தியம்
வினைல்லித்தியம் (Vinyllithium) என்பது LiC2H3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமலித்தியம் சேர்மமான இச்சேர்மம் நிறமற்று அல்லது வெண்மை நிறத்துடன், பிரதானமாக டெட்ரா ஐதரோபியூரானில் ஒரு கரைசலாக வினைல்லித்தியம் பெரும்பாலும் காணப்படுகிறது [1] தயாரிப்பு மற்றும் கட்டமைப்புஇலித்தியம் ஆலசன் பரிமாற்ற வினைகள் மூலமாக வினைல்லித்தியம் கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆலசன் இல்லாத வினை வகைகளில் டெட்ராவினைல்வெள்ளீயம் பியூட்டைல்லித்தியம் பயன்படுத்தப்படுகிறது.
எத்திலீனுடன் இலித்தியம் சேர்த்து வினைபுரியச் செய்தால் வினைல்லித்தியமும் இலித்தியம் ஐதரைடும் பிற கரிமலித்தியம் சேர்மங்களுடன் உருவாகின்றன.[1]. மற்ற கரிமலித்தியம் சேர்மங்கள் போலவே வினைல்லித்தியமும் டெட்ரா ஐதரோ பியூரானில் இருந்து கியூபேன் போன்ற கட்டமைப்பில் கொத்துச் சேர்மமாகப் படிகமாகிறது.[2] ![]() வினைகள்வினைல்சிலேன்கள், வினைல்குப்ரேட்டுகள்,வினைல்சிடானேன்கள் போன்றவை தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாக இருப்பதால், உலோக அடிப்படை வினையாக்கிகளில் வினைல் தொகுதிகளை நிறுவதலுக்கு வினைல்லித்தியம் பயன்படுகிறது [3] அல்லைலிக் ஆல்ககால்கள் தயாரிப்பில் கீட்டோன் சேர்மங்களுடன் வினைல்லித்தியத்தைப் பயன்படுத்துகிறார்கள். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia