வினோத் குமார்
வினோத் குமார் (பிறப்பு: 1, ஏப்ரல் , 1963) என்பவர் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத்தில் இவரது முதல் படமாக 1985 இல் ஏ. எல். அபையா நாயுடு தயாரித்த தவருமனே ஆகும். தெலுங்கு திரையுலகில், ராமோஜி ராவ் தயாரித்த மௌன போராட்டம் (1989) வழியாக அறிமுகமானார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரைப்படத் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இவரது சிறந்த படங்களாக: மௌனபோராட்டம் (1989 ), மாமகாரு (1991), கார்த்தவ்யம் (1991), பாரத் பந்த் (1991) போன்றவை ஆகும். இவருக்கு நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தென் பிராந்திய மொழிகளிலும் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 100 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் தமிழில் ஹீரோ (1994), கேம் (2002), ஜி (2005) போன்ற படங்களில் நடித்துள்ளார். விருதுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia