வின்சர் செனிக் மெக்கே (Winsor McCay, செப்டம்பர் 26, 1869 – சூலை 26, 1934) அமெரிக்க வரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர், இவருடைய லிட்டில் நெமோ (1905) மற்றும் அதன்பிறகு வந்த செர்ட்டீ தி டைனாசர் (1914) பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர். இவர் தன்னுடைய புனைப்பெயரான சைலாஸ் என்ற பெயரில் ட்ரீம் ஆப் தி ரேர்மிட் பியண்ட் வரைகதையை உருவாக்கியுள்ளார்.
இளமைக் காலம்
லிட்டில் ஸேம்மி ஸ்னீஸ்
வின்சர் செனிக் மெக்கே மிச்சிகனில் உள்ள ஸ்பிரிங்க் லேக் என்னும் பகுதியில் 1869-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் திகதி இராபர்ட் மெக்கேவுக்கும் ஜேனட் முர்ரே மெக்கேவிற்கும் மகனாகப் பிறந்தார். [1] இவர் கனடாவில் 1867-ம் ஆண்டு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழ்க்கை
1889-ம் ஆண்டு , மெக்கே சிகாகோவிற்கு படிப்பதற்காகச் சென்றார், போதிய அளவு பண்மில்லாததால் வேலை செய்ய நேர்ந்தது. இவர் தேசிய அச்சிடுதல் மற்றும் சித்திரம் செதுக்கும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார், அங்கு வட்டரங்கு மற்றும் திரைப்படத்திற்கானசுவரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஓஹியோ மாகாணத்திற்கு ஓவியராக பணிபுரிய டைம் மியூசியம் சென்றனர். இவருடைய தி செவன் ஏஜஸ் ஆப் மேன் கதையில் வரைந்த இரு படங்கள் அவரை பிரபலப் படுத்தியது.[2]
அதன் பிறகு அவர் வரைந்த பல ஓவியங்களும், வரைகதைகளும் மிகவும் பிரபலமானது.
கெரிட்டீ தி டைனாசர்
இவருடைய வரைகதைளுள், தி சிங்கிக் ஆப் லுசிதானியா, கப்பல் மீது ஏற்பட்ட தாக்குதலையும், முதலாம் உலகப்போருக்கு அமெரிக்கா பங்குபெற்றதிற்கு காரணமாக அமைந்தது.
இறப்பு
மெக்கே 1934-ம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ம் நாள் காலமாணார்.[3]
வரை கதைகள்
பெலிக்ஸ் பிட்டல் எழுதிய எ டேல் ஆப் தி ஜங்கிள் இம்ப்ஸ் (1903)