வியட்நாமிய இலக்கியம்வியட்நாமிய இலக்கியம் (Vietnamese literature) என்பது வியட்நாமியரால் படைக்கப்பட்ட வாய்மொழி, எழுத்துவழி இலக்கியத்தைக் குறிக்கும்.என்றாலும் இதில் பிரெஞ்சு, அமெரிக்க, ஆத்திரேலிய ஆங்கில வியட்நாமிய எழுத்துகளும் அடங்குவதுண்டு. பதினொறாம் நூற்றாண்டுக்கு முன் ஓராயிரம் ஆண்டுகள் சீனா வியட்நாமை ஆண்டதால் அப்போதைய வியட்நாமிய இலக்கியங்கள் செவ்வியல் சீன மொழியில் எழுதப்பட்டன. சூ நோம் (Chữ nôm) எனும் வியட்நாமிய எழுத்து பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இது உருமாற்றப்பட்ட சீன எழுத்துகளால் ஆயது. இதில் வியட்நாம் மொழியில் வியட்நாமியர் எழுத இசைவாக விளங்கியது.முதலில் இது சீன மொழியினும் இழிவாகக் கருதப்பட்டாலும் நாளடைவில் புகழ் பெறலானது. 18 ஆம் நூற்றாண்டில் பல வியட்நாமிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் தம் எழுத்தால் செழுமைப்படுத்தியதும் மிகவும் வளர்ந்து மறுமலர்ச்சியுற்றது. அலுவல்சார் ஆட்சி மொழியாகவும் மாறியது. சூ குவோசு இங்கு (Chữ quốc ngữ) எனும் வியட்நாமிய எழுத்து பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. என்றாலும் இது இருபதாம் நூற்றாண்டு வரை மக்களால் பரவலாக ஏற்கப்படவில்லை. கிறித்தவ இறையியக்கத்தினரிடம் மட்டுமே இருந்தது. பிரெஞ்சு இந்தோசீனாவில் பிரெஞ்சு ஆதிக்கவாதிகளால் இதைப் பயன்படுத்த ஆணையிட்டது. ஆனால் இருபதாம் நூற்ராண்டின் இடைப்பகுதிக்குள் அனைத்து இலக்கியங்களும் குவோசு இங்கு எழுத்தில் எழுதப்படலாயின. சீன மொழியில் இயற்றிய இலக்கியம்முதன்மைக்கட்டுரை: வியட்நாமில் சீன மொழி இலக்கியம் இப்போது கிடைக்கும் மிகப் பழைய வியட்நாம் எழுத்தாலர்களின் இலக்கியம் செவ்வியல் சீன மொழியில் அமைந்துள்ளது. வியட்நாம் வரலாறு குறித்த அனைத்து அரசு ஆவணங்களும் செவ்வியல் சீன மொழியிலேயே அமைந்துள்ளன. தொடக்க காலக் கவிதைகளும் செவ்வியல் சீனத்திலேயே உள்ளன.[1]இன்றைய வியட்நாமியருக்கு சீன எழுத்துகள் மட்டுமன்றி, இந்தச் சீன மொழி இலக்கியங்களும் குவோசு இங்கு எழுத்தில் நேரடியாக ஒலிபெயர்த்தாலும் கூட அவற்றின் சீனத்தொடரும் இலக்கணமும் புரியாதனவாகவே அமைகின்றன. பொதுமக்களுக்குப் புரிய இவற்றை வியட்நாமியப் பேச்சுமொழியில் மொழிபெயர்க்க வேண்டியனவாக உள்ளன. இவற்றில் வியட்நாம் அரசர்களின் ஆணைகளும் அரசர் வரலாறும் சீனாவில் இருந்தான வியட்நாமின் விடுதலை அறிவிப்பும் வியட்நாமியக் கவிதைகளும் அடங்கும். குறிப்பிடத்தக்க எழுத்துகளின் காலநிரல் பட்டியல் கீழ்வருமாறு:
வட்டார மொழி இலக்கியங்கள்சூ நோம் எழுத்தில் (Chữ nôm) (字喃)சீன எழுத்துருக்களைச் சார்ந்து வியட்நாமில் புதிதாக புனையப்பட்ட சூ நோம் எழுத்துமுறை 13 ஆம் நூற்றாண்டில் வியட்நாம் பேச்சு மொழியை எழுத உருவாக்கப்பட்ட எழுத்தமைப்பாகும். பெரும்பாலும் இந்த சூ நோம் எழுத்து நூல்கள் புத்திய சூ குவோசு இங்கூ எழுத்துமுறையில் ஒலிபெயர்க்கப்பட்டு இவை இக்கால வியட்நாமியரால் புரிந்துகொள்ளவும்படுகின்றன. என்றாலும், சூ நோம் எழுத்துமுறை செந்தரப்படுத்தப் படாததால், சில எழுத்துருக்களை பயன்படுத்தும்போது அவை எந்த சொல்லைக் குறிக்கின்றன என்பதில் மயக்கங்கள் நிலவுகின்றன. எனவே சூ நோமில் இருந்து சூகுவோசு இங்கூவுக்கு ஒலிபெயர்க்கப்படும்போது பல வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. சில மதிப்புமிக்க நூல்கள் சூ நோமில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் நிகுயேன் தூவின் திருயேன் கியேயு, தோன் தி தியேமின் அவளது நண்பர் தான் திரான் சோன் என்பவர் இயற்றிய செவ்வியல் சீனக் கவிதையின் சூநோம் மொழிபெயர்ப்பான சின் பூ நிகாம் கூசு (வார்ப்புரு:Vi-nom – போர்வீரனின் மனைவியின் வருத்தம்) எனும் கவிதையும் மிகவும் புகழ்வாய்ந்த கவிஞரான கோ சுவான் குவோங் என்பவ்ரின் கவிதைகளும் அடங்கும். சூ நோம் எழுத்தில் இயற்றப்பட்டுள்ள சில குறிப்பிடத்தக்க இலக்கியங்களாவன:
சூ குவோசு இங்கூ எழுத்தில் (Chữ quốc ngữ)சூ குவோசு இங்கூ எழுத்துமுறை 17 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டாலும் 20 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசு இவ்வெழுத்தைப் பிரெஞ்சு இந்தோசீனாவில் கட்டாயமாக்கும் வரை கிறித்தவ மரைவட்டத்திலேயே வழங்கிவந்த்து. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், இவ்வெழுத்தில் பல இதழ்கள் தொடங்கப்பட்டன. மக்களிடையே இவ்விதழ்களுக்கு பெரு வரவேற்பு இருந்த்தால் சூ குவோசு இங்கூ எழுத்துமுறை நாடு முழுதும் பரவலாகியது. இப்பரவலைப் பிரெஞ்சு ஆதிக்கமாக்க் கருதிய சில தலைவர்கள் எதிர்த்தாலும், மற்றவர்கள் இது எழுத்துவழிக் கலவி பரவலுக்கு எளிய கருவியாகக் கருதி வரவேற்றனர். 1945 இல் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதும், ஓ சி மின் அவர்களது வியட்மின் தற்காலிக அரசு சூ குவோசு இங்கூ எழுத்துவழி கல்வியைப் பரப்பும் கொள்கையை ஏற்றது. இம்முயற்சி பெருவெற்றி பெற்றதும், எழுத்தறிதல் வீதம் வேகமாக விண்ணளாவ வளர்ந்தது. தொடக்கநிலையில் எழுத்துமுறையில் பல வேறுபடுகளும் சிக்கல்களும் இருந்தன. சில சொற்களை எழுதுவதில் பொதுக் கருத்தேற்பு ஏற்படவில்லை. இதற்காக பல கருத்தரங்குகள் நிகழ்த்தப்பட்டன. இக்கருத்தரங்குகளில் அனைத்து சிக்கல்களும் பெரும்பாலும் தீர்க்கப்பட்டன.என்றாலும் சில சிக்கல்கள் இன்னமும் தீர்க்கபடாமலே உள்ளன. 20 ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் அனைத்து வியட்நாமிய இலக்கியங்களும் சூ குவோசு இங்கூ எழுத்திலேயே உருவாகின. பல முதைய எழுத்துகளில் எழுதப்பட்ட இலக்கியங்களும் இக்கால வியட்நாமியர்களுக்குப் புரிய, இப்புது எழுத்தில் ஒலிபெயர்க்கப்பட்டன. வரலாற்று மேற்கோள்களுக்கு மட்டுமே நிகழ்காலத்தில் பழைய எழுத்துகள் பயன்படுகின்றன. புத்தியல் வியட்நாம் மொழியில் பின்வரும் இலக்கிய எழுத்துக்கள் அடங்கும்:
இலக்கிய வகையினங்கள்நாட்டுப்புற இலக்கியம்எழுத்துவழி இலக்கியங்கள் மட்டுமன்றி, வாய்மொழி இலக்கியங்களும் இன்றைய வியட்நாமில் இயற்றப்படுகின்றன. இவை மக்களுக்கும் பரவலாகக் கிடைக்கின்றன. வியட்நாமிய நாட்டுப்புற இலக்கியங்கள் பல வடிவங்கள் இடையிடைவரும் கூட்டாகும். இவை வாய்மொழி மரபோடு, மூன்று ஊடக்க் கலப்பினதாக விளங்குகிறது: அவை கரந்தநிலை (ஆசிரியன் மனதில் மட்டும் தேங்கி நிற்பது) நிலைத்தநிலை (எழுத்தில் தெறித்து நிற்பது), காட்சிநிலை (நிகழ்த்தப்படுவது). நாட்டுப்புற இலக்கியம் வாய்மொழிப் பரவலால் பல பாட வேறுபாடுகள் கொண்டது. இதை இயற்றியவர் யாரென அறியமுடியாதது. தொன்மங்களும் பழங்கதைகளும்வியட்நாமியத் தொன்மங்கள் இயற்கை கடந்த மாந்தர்கள், வீரர்கள், படைப்புக் கடவுள்கள், பற்றியவை. இவை மாந்தனின் வாழ்வைப் பற்றிய தொல் குடிகளின் கண்ணோட்டங்களைப் படம்பிடிக்கின்றன. இவற்றில் உலகப் படைப்புக் கதைகளும், இலாக் இலாங் குவான், ஔ கோ போன்ற பண்பட்டு வீரர்களும் (சோன் தின் அல்லது மலை ஆவி, துய் தின் அல்லது நீர் ஆவி) பற்றிய கதைகளும் அடங்கும். வியட்நாமியக் கவிதை (சா தோ வியட்நாம்)முதன்மைக்கட்டுரை: வியட்நாமியக் கவிதைகள் மரபு வியட்நாமியக் கவிதைகளாகிய சா தோ பெரிதும் நாட்டுப்புறக் கவிதைகள் அல்லது பாடல்கள் ஆகும். மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia