விரிந்து பரவிய புலம்பெயர் இனம்
விரிந்து பரவிய புலம்பெயர் இனம் (ஆங்: டயஸ்போரா (Diaspora ))என்கிற வார்த்தை ஒரே தேசிய மற்றும்/அல்லது இன அடையாளத்தைக் கொண்ட மக்கள் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த நிலையைக் குறிக்கிறது. அகதிகள் ஒரு புதிய புவியிடத்தில் தற்காலிக அடைக்கலமுற்றவர்கள் மட்டுமே. அதே சமயத்தில் விரிந்து பரவிய புலம்பெயர் இனம் என்கிற வார்த்தை நிரந்தரமாக கூட்டமாக இடம்பெயர்ந்த மக்களைக் குறிப்பிடுகிறது. தோற்றங்களும் வளர்ச்சியும்விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் தான் இந்த வார்த்தை முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. "esē diaspora en pasais basileias tēs gēs" என்கிற ஹீப்ரூ வாசகத்தின் மொழிபெயர்ப்பு “புவியின் அனைத்து சாம்ராஜ்யங்களிலும் சிதறிக் கிடப்பாய்” என்பதாகும். ஹீப்ரூ விவிலியம் கிரீக் மொழியில்[1] மொழிபெயர்க்கப்பட்ட போது இந்த உண்மையான அர்த்தத்தில் தான் வளர்ச்சியடையத் துவங்கியது; அதன் பின் கிமு 607 ஆம் ஆண்டில் பாபிலோனியர்களால் இஸ்ரேலில் இருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்களைக் குறிப்பதற்கும் கிபி 70 ஆம் ஆண்டில் ரோம சாம்ராஜ்யத்தால் ஜுடியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட யூதர் களைக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படத் துவங்கியது.[2] அதன்பின் இந்த இரண்டு பிரயோகங்களுக்கும் இடையே மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வார்த்தை இஸ்ரேல் இன மக்கள் விடயத்திற்கான தனித்துவமான வார்த்தையாக ஆனது. அவர்களது வரலாற்று இடம்பெயர்வுகள், அந்த மக்களின் கலாச்சார வளர்ச்சி மற்றும் அந்த மக்களைக் குறிப்பிடுவதற்கான வார்த்தையாகவும் அது ஆனது.[3] ஆங்கிலத்தில் டயஸ்போரா என்கிற வார்த்தையில் பொதுவாக தலைப்பெழுத்து பெரிய எழுத்தில் இடம்பெற்று வார்த்தை சேர்க்கை இல்லாமல் இருந்தால் (Diaspora ) இந்த வார்த்தை யூத புலம் பெயர் இனத்தை[4] மட்டும் குறிப்பதாகவும், சாதாரணமாக அந்த வார்த்தை ("diaspora") மற்ற இன அகதிகளைக் குறிப்பிடுவதற்கும் பயன்படத் துவங்கியது.[5][6] தாங்கள் வெற்றி பெற்ற பகுதியின் மக்கள் வருங்காலத்தில் அப்பிராந்தியத்திற்கு உரிமை கோருவதை மறுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அசிரியன் கொள்கையில் இந்த வார்த்தையின் விரிவான பயன்பாடு தோன்றியது.[7] புராதன கிரீஸ் நாட்டில் இந்த வார்த்தை ”சிதறிக் கிடக்கும் மக்கள்” என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது. காலனிகளில் குடியேற்றப்படும் வெற்றிபெற்ற அரசின் மக்களைக் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்பட்டது.[8] ஆங்கில மொழியைப் பொறுத்த வரை, 1876 ஆம் ஆண்டில் அயர்லாந்து பஞ்சத்தில்[9][10] பாதிக்கப்பட்ட அகதிகளைக் குறிப்பிடுவதற்கு தான் டயஸ்போரா என்கிற ஆங்கில வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950களின் மத்தியில் மற்ற நாடுகளில் வெகுகாலம் வாழ்ந்து வந்திருந்த வெளிநாட்டினர் டயஸ்போரா என்கிற வார்த்தையால் குறிப்பிடப்படும் வழக்கம் ஆங்கில மொழி வழக்கானது.[6][11][12][13] இந்த பொருளில் கல்வித் துறையில் புலம் பெயர் இன படிப்புகளும் நிறுவப்பட்டிருக்கின்றன. எந்த வழக்காயிருந்தாலும், இந்த விரிந்து பரவிய புலம்பெயர் இனம் என்பது இடப்பெயர்வைக் குறிக்கிறது. அதாவது தாயகத்தில் இருந்து ஏதோ காரணத்திற்காக இடம்பெயர்ந்த மக்களை விவரிப்பதற்காகக் குறிப்பிடுகிறது. பொதுவாக இந்த மக்கள் ஒரு சமயத்தில் தங்களது தாயகத்திற்கு திரும்பும் நம்பிக்கையை, அல்லது குறைந்தபட்சம் விருப்பத்தையேனும் கொண்டிருக்கின்றனர். அடுத்தடுத்த இடப்பெயர்வுகளை சந்தித்துக் கொண்டு இருப்பதால் இந்த விரிந்து பரவிய புலம் பெயர் இன மக்களுக்கு பல சமயங்களில் ஒற்றை வீடு மீது ஒட்டுதல் ஏற்படாது போய்விடுவதாக சில எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். பலர் பல்வேறு இடங்களில் பல்வேறு வீடுகளைக் கொண்டிருப்பர். ஒவ்வொரு வீட்டோடும் வெவ்வேறு வகையான ஒட்டுதலைக் கொண்டிருப்பர். அதனால் இந்த மக்களுக்கு என்று பெரும்பாலும் தனியொரு கலாச்சார வளர்ச்சி தோன்றுவதுண்டு. காலப்போக்கில், தொலைவில் பிரிந்து சென்று விட்ட சமூகங்கள் கலாச்சாரம், மரபுகள், மொழி மற்றும் பிற காரணிகளிலும் மாறுபடுவதைக் காணலாம். கலாச்சார ஒட்டுதலின் கடைசி சுவடுகளை பயன்பாட்டு மொழி மாறுவதற்கு அச்சமூகம் அளிக்கும் எதிர்ப்பினிலும் பாரம்பரிய மதப் பழக்கங்களை பின்பற்றுவதில் அச்சமூகத்தின் உறுதியிலும் மட்டும்தான் காண முடிகிறது. ஐரோப்பிய புலம் பெயர் நிகழ்வுகள்![]() ஐரோப்பிய வரலாற்றில் ஏராளமான புலம் பெயர் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பழங்காலத்தில் பால்கன் மற்றும் ஆசியாவில் இருந்து கிரேக்க பழங்குடியினர் மேற்கொண்ட வர்த்தக மற்றும் காலனிய நடவடிக்கைகளின் காரணமாக கிரேக்க கலாச்சாரம், மதம் மற்றும் மொழியைச் சார்ந்த மக்கள் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் பிராந்தியங்களில் பரவலாகக் குடியேறினர். சிசிலி, தெற்கு இத்தாலி, வடக்கு லிபியா, கிழக்கு ஸ்பெயின், பிரான்சின் தெற்குப் பகுதி மற்றும் கருங்கடல் கரையோரப் பகுதிகளில் கிரேக்க நகர அரசுகள் நிறுவப்பட்டன. 400க்கும் அதிகமான காலனிகளை கிரேக்கர்கள் நிறுவினர்.[14] மகா அலெக்சாண்டர் அகமனித் சாம்ராஜ்யத்தை வெற்றி கண்டது ஹெலனிய காலகட்டத்தின் துவக்கத்தைக் குறித்தது. இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் கிரேக்க காலனியாக்கத்தின் ஒரு புதிய அலையை உருவாக்கியது. எகிப்து, தென்மேற்கு ஆசியா மற்றும் வடமேற்கு இந்தியாவில் கிரேக்க ஆளும் வர்க்கங்கள் நிறுவப்பட்டன.[15] பல கட்டங்களாக நடந்த குடியேற்ற கால இடப்பெயர்வுகளும் வரலாற்றில் நிகழ்ந்த ஏராளமான இத்தகைய நிகழ்வுகளில் ஒன்று. கிபி 300 முதல் 500 ஆம் ஆண்டு வரையான குடியேற்ற காலத்தின் முதல் கட்டத்தில் கோத்துகள் (ஓஸ்ட்ரோகோத்துகள் மற்றும் விஸிகோத்துகள்), வண்டல்கள், பிராங்குகள், பல ஜெர்மானிய இன மக்கள் (பர்கண்டியர்கள், லங்கோபார்டுகள், ஏங்கிள்கள், சாக்சன்கள், சூட்டர்கள், சுவேபிகள், அலிமன்னிகள், வரான்ஜியர்கள் மற்றும் நோர்மான்கள்), ஆலன்கள் மற்றும் ஏராளமான ஸ்லேவிய பழங்குடியினரின் புலப் பெயர்வு நிகழ்ந்தது. கிபி 500 ஆம் ஆண்டு முதல் 900 ஆம் ஆண்டு வரையான இரண்டாவது கட்டத்தில், ஸ்லேவியர்கள், துருக்கியர்கள் மற்றும் பல பழங்குடியினர் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் குடியேறினர். இது அனடோலியா மற்றும் காகசஸ் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் வந்திருந்த துருக்கிய பழங்குடியினர் (அவார்கள், ஹன்கள், கசார்கள், பெசெனெக்குகள்), மற்றும் பல்கர்கள், மற்றும் மாக்கியர்களுக்கு அதிகமாய் குடியேறத் துவங்கிய ஸ்லேவியர்களுடன் உரசல் ஏற்பட்டது. குடியேற்ற காலத்தின் கடைசி கட்டத்தில் ஹங்கேரிய மாக்கியர்களும் வைகிங்குகளும் ஸ்காண்டினேவிய பகுதியில் இருந்து ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய தீவுகள், அத்துடன் கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளிலும் குடியேறினர். இத்தகைய காலனியாக்க குடியேற்றங்களை நிரந்தரமாக புலம்பெயர்ந்த இனமாகக் கருத முடியாது. மிக நெடுங் காலத்திற்குப் பிறகு குடியேறியவர்களின் தாயகமாகவே அது மாறி விடுகிறது. இன்றைய ஹங்கேரி மக்களின் ஒரு பிரிவினர் தாங்கள் ஹங்கேரிய மாக்கியர்கள் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பாக சென்ற மேற்கு சைபீரியாவைச் சேர்ந்தவர்கள் என்று கருதுவதில்லை. ஏங்கிள்கள், சாக்சன்கள் மற்றும் சூட்டர்கள் வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் மீண்டும் வடமேற்கு ஜெர்மனியுடனான தங்களது பூர்விக தொடர்பு குறித்து அறிந்து வைத்திருப்பதில்லை. 1492 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் தலைமையிலான ஸ்பெயின் நாட்டின் பயணக் குழு அமெரிக்காவை எட்டியது. அதன்பின் அங்கு ஐரோப்பியர்களின் காலனியாக்கம் துரிதமாய் அதிகரித்தது. 16 ஆம் நூற்றாண்டில் சுமார் 240,000 ஐரோப்பியர்கள் அமெரிக்க துறைமுகங்களுக்குள் நுழைந்தனர்.[16] வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க பகுதிகளில் தொடர்ந்து குடியேற்றங்கள் நிகழ்ந்தன. 19 ஆம் நூற்றாண்டில் மட்டும் 50 மில்லியன் மக்கள் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்க கண்டத்தில் குடியேறினர்.[17] 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அயர்லாந்து புலப் பெயர்வு நிகழ்வை ஒரு குறிப்பிட்ட உதாரணமாகக் கூறலாம். மகா பஞ்சத்தின் (An Gorta Mór ) காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த இடப்பெயர்வு துவங்கியது. அயர்லாந்து நாட்டின் மக்கள்தொகையில் 45% முதல் 85% வரை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் குடியேறியதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. உலகெங்கும் 80 முதல் 100 மில்லியன் மக்கள் வரை அயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இது அந்த புலப் பெயர்வின் அளவை எடுத்தியம்புவதாக உள்ளது. ஆப்பிரிக்க புலம்பெயர் இனம்நவீன காலத்தின் மிகப் பெரும் சிதறலுற்ற இனமாக ஆப்பிரிக்க புலம் பெயர் இனத்தைக் குறிப்பிடலாம். இந்நிகழ்வு 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொடங்கியது. அட்லாண்டிக் அடிமை வர்த்தக காலத்தில், மேற்கு, மேற்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் சுமார் 9.4 முதல் 12 மில்லியன் வரையான மக்கள் உயிர்பிழைத்து மேற்கு கோளத்திற்கு அடிமைகளாக சென்று சேர்ந்தனர்.[18] ஆங்கில, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மற்றும் ஸ்பேனிய புதிய உலக காலனிகளின் கலாச்சாரத்தில் இந்த மக்களும் அவர்களது வம்சாவளியினரும் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கினர். ஆசிய புலம்பெயர் இனம்முதன்முதலில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக சீன குடியேற்றம் (அல்லது சீன மக்களின் புலப் பெயர்வு[சான்று தேவை])துவங்கியது. 19 ஆம் நூற்றாண்டு தொடங்கி 1949 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பெரும் அளவிலான மக்கள் வெளியேற்றத்திற்கு சீனாவில் நிலவிய போர்கள், பசி மற்றும் அரசியல் ஊழல் முக்கிய காரணங்களாய் இருந்தன. பல குடியேற்றவாசிகள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாய் இருந்தனர். அல்லது கல்வியறிவு குறைந்த விவசாயத் தொழிலாளர்களாகவோ கூலிகளாகவோ இருந்தனர். இவர்கள் தொழிலாளர்களை வேண்டி நின்ற அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மலேயா போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர். இந்தியப் புலம் பெயர் இனம் தென்கிழக்கு ஆசியாவைத் தாண்டி மிகப் பெரிய ஆசிய புலம் பெயர் இனமாக அமைந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் இந்திய சமூகத்தின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. உலகின் எல்லா கண்டங்களிலும் ஏறக்குறைய எல்லா பகுதிகளிலும் இந்த சமூகம் பரவியுள்ளது. பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்முகப்பட்டதொரு உலக சமூகத்தை இந்திய புலம்பெயர் இனம் கொண்டுள்ளது. இந்தியா மற்றும் அதன் உட்பொதிந்த மதிப்புகள் என்னும் சிந்தனை தான் இவர்களை ஒன்றாக இணைக்கும் பொதுவான நூலாக இருக்கிறது (காணவும்: தேசி ).[சான்று தேவை] ரோமானிய மக்களின் இனமும் பரவலான புலப் பெயர்வு கொண்டது. ஐரோப்பாவில் இம்மக்கள் மிக செறிவாய் வாழ்கின்றனர். ரோமானி மக்கள் சுமார் 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவில் இருந்து வடமேற்கு நோக்கி குடியேறியவர்கள். அவர்கள் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாக மொழி மற்றும் மரபணு ஆதாரங்கள் காட்டுகின்றன.[19] வரலாற்றில் நேபாளிகளின் புலம் பெயர்வு மூன்று முறையேனும் அலை அலையாய் நிகழ்ந்ததைக் காண்கிறோம். முதல் அலை சுமார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒன்றாகும். சிறுவயது திருமணம் மற்றும் உயர்ந்த பிறப்பு விகிதங்கள் காரணமாக இந்து மத குடியேற்றம் கிழக்கு பகுதியில் நேபாளமெங்கும் நிகழ்ந்தது. அதன்பின் சிக்கிம் மற்றும் பூடான் பகுதிகளிலும் பரவியது. பூடான் நாட்டின் புத்த மதத்தினர் தங்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராகிக் கொண்டிருக்கும் அபாயத்தை 1980களில் பூடானின் அரசியல் மேற்குடியினர் கண்டு கொண்டனர். இப்போது அமெரிக்கா மூன்றாம் நாட்டு குடியேற்ற திட்டமாக பூடான் நாட்டில் இருந்து 60,000 பேருக்கும் அதிகமான பூர்வீக நேபாளிகளை அமெரிக்காவில் குடியேற்ற ஏற்பாடுகள் செய்து வருகிறது.[20] கொலைப்படை வீரர்களை 1815 ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்து வேலைக்கு எடுத்த சமயத்தில் இரண்டாம் அலை துவங்கியது. இந்த நேபாளிகள் ஓய்வுக்குப் பிறகு பிரித்தானிய தீவுகளிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் குடியமர்த்தப்பட்டனர். மூன்றாவது 1970களில் துவங்கியது. நிலப் பற்றாக்குறைகள் தீவிரமடைந்தன. கற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை நேபாளத்தில் இருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பன்மடங்காய் இருந்தது. வேலை தொடர்பாக அம்மக்கள் வேறு நாடுகளுக்குச் சென்றனர். இந்தியாவில் நேபாளிகளின் குடியிருப்புகள் தோன்றின. மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்கும் அவர்கள் இடம்பெயர்ந்தனர். நேபாளத்திற்கு வெளியே இருக்கும் நேபாளிகளின் எண்ணிக்கை இப்போது மில்லியன்கணக்கில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டு மற்றும் பிந்தைய காலம்இருபதாம் நூற்றாண்டில் பெரும் மக்கள் நகர்வுகள் நிகழ்ந்தன. சில சமயங்களில், அரசாங்க நடவடிக்கை காரணமாக பெருமளவில் மக்கள் இடம்பெயர்வது நிகழ்ந்தது. உதாரணமாக, ஸ்டாலின் கிழக்கு ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் சைபீரிய பகுதிகளுக்கு மில்லியன்கணக்கான மக்களை அனுப்பினார். இது தண்டனையாகவும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டவுமான இரண்டு நோக்கங்களுக்காகவும் மக்கள் இவ்வாறு அனுப்பப்பட்டனர். சில குடியேற்றங்கள் போர் மற்றும் மோதலைத் தவிர்ப்பதற்காக செய்யப்பட்டன. காலனியாக்கத்தின் முடிவு போன்ற அரசியல் முடிவுகளின் விளைவாகவும் பல புலம் பெயர்ந்த இனங்கள் உருவாயின. இரண்டாம் உலகப் போரும் காலனிய ஆட்சியின் முடிவும்இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் நாஜி ஜெர்மனி மில்லியன்கணக்கான யூதர்களை கொன்று குவித்தது. சில யூதர்கள் தண்டனைக்குப் பயந்து எல்லைகள் மூடப்படும் முன்னதாக ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஓடி விட்டனர். அதன்பின்னர் மற்ற கிழக்கு ஐரோப்பிய அகதிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இரும்புத் திரை ஆட்சிகள் மற்றும் சோவியத் சேர்க்கை[21] நாடுகளில் இருந்து விலகி மேற்கு நோக்கி புலம் பெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிச கட்டுப்பாட்டில் இருந்த போலந்து, ஹங்கேரி மற்றும் யூகோசுலேவியா ஆகிய நாடுகளில் இருந்து நூறாயிரக்கணக்கான ஜெர்மன் இனத்தவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்த பகுதிகளில் குடியேறியவர்கள் ஆவர். நாஜி ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக இது மேற்கொள்ளப்பட்டது. அகதிகளில் அநேகமானோர் மேற்கு ஐரோப்பாவிற்கு சென்று விட்டனர். பத்தாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியாவில் 1936 ஆம் ஆண்டு முதலான ஃபிராங்கோவின் ராணுவ ஆட்சியில் பல அரசியல் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். 1976 ஆம் ஆண்டில் ஃபிராங்கோ இறக்கும் வரை இந்த அவலம் தொடர்ந்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்து, இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் காலனிய ஆட்சிக்கு எதிரான தொடர்ச்சியான கிளர்ச்சிகளும், மத்திய கிழக்கு நாடுகள் தமது நாடுகளில் வரலாற்றுரீதியாக வாழ்ந்து வந்திருந்த 1 மில்லியன் யூத மக்கள் மீது குரோத கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள காரணமாயின. இந்த மக்களில் அநேகமானோர் புலம் பெயர்ந்து விட்டனர். பெரும்பான்மையானோர் இஸ்ரேலில் மறுகுடியேற்றம் கண்டனர். இங்கு இவர்கள் மிஸ்ராஹி யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதே சமயத்தில், 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேலை நிறுவுவதற்காக நடந்த போரின் விளைவாக உருவான பாலஸ்தீனிய புலம் பெயர்வு இன மக்களின் எண்ணிக்கை சுமார் 750,000 ஆக இருந்தது. இவர்கள் தாங்கள் முன்பு வசித்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்க்கப்பட்டனர் அல்லது வெளியேறினர். 1967 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேல் போரின் விளைவாக இந்த புலப் பெயர்வு இன்னும் விரிவடைந்தது. இன்னும் பல பாலஸ்தீனியர்கள் மத்திய கிழக்கு நாடுகள் பராமரித்து வரும் அகதி முகாம்களில் தான் வசித்து வருகிறார்கள். மற்றவர்கள் மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் மறுகுடியேற்றம் கண்டு விட்டனர். 1947 பிரிவினை காரணமாக மில்லியன்கணக்கான மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பரஸ்பரம் வெளியேற வேண்டியதானது. இந்த சமயத்தில் நிகழ்ந்த மதக் கலவரத்தில் மில்லியன்கணக்கான மக்கள் இறந்தனர். 2 மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்ட பிறகு முன்னாள் பிரித்தானிய ராச்சியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து இங்கிலாந்துக்கு சென்று விட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தும், அதிகாரப்பூர்வமாக 1910 ஆம் ஆண்டில் இருந்தும் ஜப்பான் கொரியாவை தனது காலனி நாடாக ஆக்கியது. லட்சக்கணக்கான சீனர்கள் ஜப்பான் ஆக்கிரமிப்புக்குட்படாத மேற்கு மாகாணங்களுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடம் பெயர்ந்தனர். 100,000 பேருக்கும் அதிகமான கொரிய மக்கள் ஆமுர் நதியைக் கடந்து ஜப்பானியர்களிடம் இருந்து விலகி கிழக்கு ரஷ்யாவிற்குள் (அப்போது சோவியத் ஒன்றியம்) குடியேறினர்.[சான்று தேவை] சீனாவுடனான ஜப்பானிய போர் சமயத்தில் (1937 - 1945), ஜப்பான் மஞ்சுகுவோ எனும் பல-இன கைப்பாவை அரசாக மஞ்சூரிய அரசை நிறுவியது. 1959 ஆம் ஆண்டில் சீன மக்கள் விடுதலை ராணுவம் திபெத்திற்குள் புகுந்ததை அடுத்து, 14வது தலாய் லாமாவும் அவரது அரசாங்கமும் இந்தியாவிற்குள் அடைக்கலம் புகுந்தன. இதனைத் தொடர்ந்து ஏராளமான மக்களும் தெற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். சீன தண்டனை மற்றும் சீனமயமாக்கத்திற்குத் தப்பி அவர்கள் ஆவணங்கள் இன்றி இமாலய மலைத் தொடர் வழியே வெளியேறினர். 1960களின் மத்திய காலம் வரை பெரிய அளவிலான வெளியேற்றம் நீடித்தது. அதன்பின் தொடர்ந்து வெளியேற்றம் இருந்து கொண்டு தான் உள்ளது. உலகெங்கும் 200,000 திபெத்தியர்கள் சிதறி வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பாதிக்கு மேலானோர் இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் நாடுகளில் வசிக்கின்றனர். நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் திபெத்திய அகதிகளுக்கான பச்சை புத்தகத்தை ஸ்தாபிக்கிறது. பனிப் போரும் காலனியாட்சிக்குப் பிந்தைய அரசுகளும்பனிப்போர் சமயத்திலும் அதற்குப் பிறகும் ஏராளமான அகதிகள் மோதல் பகுதிகளில் இருந்து குறிப்பாக அப்போது வளரும் நாடுகளாய் இருந்த நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான அதிகாரப் போட்டியால் விளைந்த பல கிளர்ச்சிகள் புதிய அகதி மக்களை உருவாக்கின. அவர்கள் உலகளாவிப் பரவும் புலம்பெயர் இனமாய் ஆயினர். தென்கிழக்கு ஆசியாவில், ஏராளமான வியட்நாம் மக்கள் பிரான்சிற்கு இடம்பெயர்ந்தனர். பனிப்போர் தொடர்பான வியட்நாம் யுத்தத்திற்குப் பிறகு மில்லியன்கணக்கில் வியட்நாமியர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குடியேறினர். கம்போடியாவில் போல் பாட் தலைமையின் கீழான கெமர் ரௌஜ் ஆட்சியில் பிரெஞ்சு குடியைச் சேர்ந்த 30,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.[சான்று தேவை] கம்போடியாவில் வெகு காலம் வசித்து வந்த சாம் என்னும் ஒரு சிறிய, இஸ்லாமியர் நிறைந்த குழு, ஏறக்குறைய முற்றிலுமாய் அகற்றப்பட்டது. [சான்று தேவை] வியட்நாம் மக்கள் வியட்நாமில் இருந்து பெருமளவில் வெளியேறிய சம்பவம் ‘படகு மக்கள்’ என்னும் வார்த்தை பிரயோகத்தை அறிமுகப்படுத்தியது. 1979 ஆம் ஆண்டில் முன்னாள் சோவியத் ஒன்றியம் செய்த ஆக்கிரமிப்பின் விளைவாக ஆப்கன் புலம் பெயர் இனம் உருவானது. போரினால் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு உலகில் இன்று மிகப்பெரும் அகதி மக்கள்தொகையாக உருவாகியிருப்பதை அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பதிவுகள்[சான்று தேவை] சுட்டிக் காட்டுகின்றன. 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின் ஏராளமான ஈரானியர்கள் நாடு தாண்டி ஓடினர். லெபனான் உள்நாட்டுப் போர், ஈரானில் இஸ்லாமியக் குடியரசு அதிகாரத்திற்கு வந்தது, ஈராக்கில் பாத் சர்வாதிகாரம், இன்றைய ஈராக் அமைதியின்மை ஆகிய காரணங்களால் அசிரியன் புலம் பெயர்வு விரிவடைந்து கொண்டே சென்றிருக்கிறது.[22] ஆப்பிரிக்காவில் காலனிய ஆட்சியின் முடிவைத் தொடர்ந்து தொடர்ச்சியான பல புலம் பெயர்வுகள் நிகழ்ந்தன. இந்நாடுகள் சுதந்திரம் பெற்ற போது, ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் நாடுகளுக்குச் சென்று விட்டனர். மற்றவர்கள் பல தலைமுறைகளாக தங்களது தாயகமாக ஆகியிருக்கும் மண்ணிலேயே தங்கி விட்டனர். 1972 ஆம் ஆண்டில் உகாண்டா 80,000 தெற்காசியர்களை வெளியேற்றி அவர்களது உடைமைகளையும் வணிகங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ருவாண்டாவில் 1990களில் ஹுடு மற்றும் துட்சி ஆகிய இரண்டு போட்டி இனங்களுக்கு இடையே நடந்த உள்நாட்டு யுத்தம் பெரும் அளவில் அகதிகள் எண்ணிக்கையை உருவாக்கியது. லத்தீன் அமெரிக்காவில், 1959 ஆம் ஆண்டில் கியூபப் புரட்சி நடந்து அங்கு கம்யூனிசம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கியூபாவை விட்டு வெளியேறினர்.[23] கொலம்பியா நாட்டில் வன்முறை மற்றும் உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பிக்க 1956 ஆம் ஆண்டு முத ஒரு மில்லியன் கொலம்பிய அகதிகள் கொலம்பியாவை விட்டு வெளியேறியுள்ளனர். தென் அமெரிக்காவில், 1970கள் மற்றும் 1980களில் நடந்த ராணுவ ஆட்சிக் காலங்களைத் தொடர்ந்து அர்ஜெண்டினா, சிலி மற்றும் உருகுவே நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். மத்திய அமெரிக்காவில் மோதல் மற்றும் பொருளாதார வறுமை நிலைகளின் காரணமாக நிகராகுவா, சல்வடோர், கவுதிமாலா, ஹோண்டுரான் மற்றும் பனாமா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1994 ஆம் ஆண்டில் நடந்த ருவாண்டா படுகொலை சம்பவத்தை அடுத்து நூறாயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர். ஜிம்பாப்வே நாட்டின் மோசமான நிலைமைகள் காரணமாக ஆயிரக்கணக்கான அகதிகள் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றிருக்கின்றனர். ஏராளமான நாடுகள் சம்பந்தப்பட்டிருந்த காங்கோ போரும் மில்லியன்கணக்கான அகதிகளை உருவாக்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் தங்களது நாட்டை விட்டு சென்று விட்டனர். விவாதப் பொருளாகும் புலம் பெயர் குடியேற்ற இனங்கள்பொருளாதாரரீதியாக குடியேற்றம் காண்பவர்கள் தங்கள் தாயகத்திற்கு வெளியே பெரிய எண்ணிக்கையில் குடியேறுகையில் அவர்கள் ஒரு சக்தி வாய்ந்த புலம் பெயர் இனமாய் மாறுவதாக சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.[சான்று தேவை] உதாரணமாக ஜெர்மனியில் கஸ்தார்பெய்டர் இனத்தையும், பெர்சிய வளைகுடாப் பகுதியில் தெற்கு ஆசிய மக்களையும், உலகளாவிய அளவில் பிலிப்பைன்ஸ் மக்களையும், ஜப்பானில் சீன மக்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். [[லத்தீன் அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்குள் குடியேறிய மக்கள்|லத்தீன் அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்குள் குடியேறிய மக்கள்]] ஒரு புது வளர்ச்சி கண்ட “புலம் பெயர் இனமாக” குறிப்பிடப்படுவதுண்டு. நீண்ட காலமாய் இருந்து வரும் இனங்கள் மெக்சிகன்-அமெரிக்கன், ப்யூர்டோ ரிகோ வாசிகள், கியூப-அமெரிக்கர்கள் என தங்கள் கலாச்சார அடையாளத்தை பாதுகாத்து வருகின்றன. 1970கள் முதலாக அமெரிக்காவில் நுழைந்த மெக்சிகோ குடியேற்றவாசிகளில் அநேகம் பேர் பிரதானமாக வேலைக்காக வந்த பொருளாதார அகதிகளாக இருக்கிறார்கள். பலர் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்கள் அல்லது ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே வாழ்க்கையை ஓட்டுபவர்கள். இவர்கள் சட்டப்பூர்வ அந்தஸ்தையோ அல்லது அமெரிக்க குடியுரிமையோ பெற்றதில்லை. முன்னதாக, அமெரிக்காவில் கிராமப்புறத்தில் இருந்தான இடம்பெயர்வு அமெரிக்காவில் பெருமளவில் நிகழ்ந்தது. தெற்கில் இருந்து வடக்கு, மத்திய மேற்கு மற்றும் மேற்கு மாநிலங்களை நோக்கி ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகா புலப் பெயர்வு அலை இருமுறை நிகழ்ந்தது. 1910 முதல் 1970 வரை 6.5 மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் அதிகமானோர் நகரமயமாக்கத்தில் இடம்பெயர்ந்தனர். வடக்கில் இருந்த வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை இந்த பக்கங்களில் இருந்து பெற்றனர். அத்துடன் தெற்கத்திய கிராமப்புற பகுதிகளில் இருந்த குறைந்த வாய்ப்புகள், பாகுபாடுகள், வாக்குரிமையின்மை ஆகிய காரணங்களுக்காகவும் அந்த மக்கள் வடக்கு நோக்கி நகர்ந்தனர். தூசிக் கிண்ண வருடங்களில் இன்னுமொரு பெரும் புலப் பெயர்வு நிகழ்ந்ததாய் வரலாற்றாளர்கள் அடையாளம் காட்டுகின்றனர். வறட்சியில் சிக்கிய அமெரிக்க மகா சமவெளிகள் மற்றும் 1930களில் அமெரிக்க தெற்கில் இருந்து ஓகிக்களின் இந்த புலப் பெயர்வு நிகழ்ந்தது; இந்த புலப் பெயர்வு குழுக்களில் பெரும்பான்மையானோர் கலிபோர்னியா நோக்கி நகர்ந்தனர். [சான்று தேவை] சமீபத்தில் காத்ரினா புயலால் நியூ ஆர்லியன்ஸ் மற்றும் வளைகுடா கடலோரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களையும் கூட சில பார்வையாளர்கள் புலம் பெயர்ந்த இனமாகவே[24] குறிப்பிடுகின்றனர். வெளியேற்றப்பட்டவர்களில் ஏராளமானோர் தங்களது சொந்த பகுதிக்கு திரும்ப விரும்பினாலும் கூட இன்னும் முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆனால் இத்தகைய தற்காலிக வெளியேற்றங்களை எல்லாம் பரவல் புலப் பெயர்வாக அடையாளப்படுத்தினால், அந்த வார்த்தையின் அர்த்தமே மாறிப் போகக் கூடும் என்று சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள்.[சான்று தேவை] உலகெங்கும் 20 கோடிக்கும் அதிகமான குடியேற்ற மக்கள் வசிப்பதாக சர்வதேச குடியேற்றத்திற்கான அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஐரோப்பா தான் மிக அதிக குடியேற்ற மக்களைக் கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 70.6 மில்லியன் மக்களாக இருந்தது. 45.1 மில்லியன் குடியேற்ற மக்களுடன் வட அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆசியா 25.3 மில்லியன் பேருடன் மூன்றாமிடத்தில் உள்ளது. இன்றைய குடியேற்ற தொழிலாளர்களில் அநேகமானோர் ஆசியாவில் இருந்து வருகின்றனர்.[25] வெகுஜனக் கலாச்சாரம்எதிர்காலம் குறித்த அறிவியல் புனைவுக் கதைகள் பல மனிதன் பூமியை விட்டே புலம் பெயர்ந்து “காலனி உலகங்களில்” வசிக்கும் புலப் பெயர்வு குறித்து குறிப்பிடுகின்றன. “ஒரு யூதனாக இல்லாதிருப்பது” என்கிற தலைப்பில் இஸ்மெ ஓஸல் (İsmet Özel)எழுதிய கவிதையில், பின்தொடரப்படும் ஒரு யூதரைப் போல் தான் உணர்வதாகவும், ஆயினும் தான் செல்வதற்கு இன்னொரு உலகம் இல்லை என்றும் புலம்புகிறார். அவர் எழுதுகிறார்:
வட்டு இசைக்கும் கிரஸ்ட் மற்றும் சால் வில்லியம்ஸ் வழங்கிய இசைத்தடமான கோடட் லாங்வேஜ் பாடலின் முதல் வரி புலம் பெயர்வின் வலியுடன் துவங்குகிறது. பங்க் ராக் இசைக் குழுவான ரைஸ் எகென்ஸ்ட் தி சஃபரர் & தி விட்னஸ் என்னும் தங்களது இசைத்தொகுப்பில் டயஸ்போரா என்று ஒரு பாடலுக்குப் பெயர் சூட்டினர். பின் அது அகதியின் பிரார்த்தனை என மாற்றப்பட்டது. முன்கூட்டி பெறப்பட்ட இந்த இசைத்தொகுப்பின் பிரதிகளில் பழைய தலைப்பிலேயே பாடல் அமைந்திருக்கக் காணலாம். பிங்க்நாய்ஸ் என்ற பெயரிலான பரிசோதனை ராக் குழு 2010 ஆம் ஆண்டில் தி டான்ஸ் ஆஃப் தி டயஸ்போரா என்கிற தலைப்பில் ஒரு EP இசைத்தொகுப்பை வெளியிட்டது. இது இப்போதைய இந்திய புலம் பெயர் இனத்தை இசைரீதியாகவும் புவியியல்ரீதியாகவும் அடையாளம் காட்டுவதாய் அமைந்திருந்தது. மேலும் காண்கwidth=50% valign=top வேலைன்=டாப் * புலம்பெயர் இனங்களின் பட்டியல்
width=50% valign=top வேலைன்=டாப்
width=50% valign=top வேலைன்=டாப்
|} மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia