விருபா இணையத்தளம்

விருபா என்பது தமிழ்ப் புத்தகங்களும் அரிய நூல்களும் பற்றிய தகவல் கொண்ட நூற்பட்டியல் வலைத்தளமாகும். இத்தளத்தில் புத்தகங்களின் விவரம், பதிப்பகங்களின் தொடர்பு விவரம், எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் என நூல்வாரியான பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தகங்களுக்கு ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் இத்தளத்தில் பார்வையிடலாம். சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.[1] இத்தகவல்கள் தவிர நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிகள் பற்றிய தகவல்களையும் இத்தளம் தருகிறது. விருபா தளத்தின் நிறுவனர் கணினி வல்லுநர் து. குமரேசனாவார்.[2]

விருபா செயலி

இத்தளத்துக்காக உருவாக்கப்பட்ட விருபா வளர் தமிழ் செயலியானது இத்தகைய ஏனைய தளங்களுக்கும் பயன்படுத்தக் கூடியதாகும். இச்செயலி 2014 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya