வில்லியம் லிம்ஸ்காம்ப்![]() வில்லியம் நன் லிப்ஸ்காம்ப் ஜூனியர் (William Lipscomb டிசம்பர் 9, 1919 – ஏப்ரல் 14, 2011) [1] நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கனிம மற்றும் கரிம வேதியியலாளர் ஆவார்.அணு காந்த அதிர்வு, கோட்பாட்டு வேதியியல், போரான் வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகியவற்றில் இவர் பணியாற்றினார் . சுயசரிதைகண்ணோட்டம்ஓஹியோவின் கிளீவ்லாந்தில் லிப்ஸ்காம்ப் பிறந்தார். அவரது குடும்பம் 1920 இல் கென்டகியின் லெக்சிங்டனுக்கு குடிபெயர்ந்தது,[2] 1941 இல் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெறும் வரை அவர் அங்கேயே வாழ்ந்து வந்தார். அவர் 1946 இல் கலிபோர்னியாதொழில்நுட்பக் கழகத்தில் (கால்டெக்) வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். 1946 முதல் 1959 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பணியினை மேற்கொண்டார். 1959 முதல் 1990 வரை அவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இருந்தார், அங்கு அவர் 1990 முதல் பேராசிரியராகப் பணியாற்றினார். லிப்ஸ்காம்ப் ,மேரி அடீல் சார்ஜெண்டை 1944 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினர் 1983 ஆம் ஆண்டு வரை இணைந்திருந்தனர்.[3] அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒரு குழந்தை சில மணிநேரங்கள் மட்டுமே இயுரி பிழைத்திருந்தார். பின்னர் அவர் 1983 இல் ஜீன் எவன்ஸ் என்பவரை மணந்தார்.[4] அவர்களுக்கு ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். லிப்ஸ்காம்ப் 2011 ஆம் ஆண்டில் நுரையீரல் அழற்சியினால் இறந்தார். அது வரையில் இவர் மாசசூசெட்ஸில்( கேம்பிரிட்ஜில்) வசித்து வந்தார். கல்விலிப்ஸ்காம்பின் உயர்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியரான ஃபிரடெரிக் ஜோன்ஸ், லிப்ஸ்காம்பிற்கு கரிம வேதியல், பகுப்பாய்வு வேதியல் மற்றும் பொது வேதியியல் குறித்த தனது கல்லூரி புத்தகங்களை இவருக்கு வழங்கினார். வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் சோடியம் ஃபார்மேட்டு (அல்லது சோடியம் ஆக்சலேட் ) மற்றும் சோடியம் ஐதாராக்சைடு ஆகியவற்றிலிருந்து நீரியத்தினைத் தயாரித்தல் போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் .[5] வாயு பகுப்பாய்வுகளைச் சேர்த்தல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். லிப்ஸ்காம்ப் தனது உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பிரிவில் படித்தார்.மாநில அளவில் இந்தப் பாடப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இவர் முதலிடம் பெற்றார். அவர் சிறப்புச் சார்புக் கோட்ட்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். லிப்ஸ்காம்ப் கால்டெக்கில் பட்டம் பயின்றார். இது அவருக்கு இயற்பியலில் கற்பித்தல் உதவிகளை மேற்கொள்வதற்காக அவருக்கு மாதம் 20 அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக வழங்கியது. வடமேற்கு பல்கலைக்கழகம் இவருக்கு ஆராய்ச்சி செய்வதற்காக மாதம் 150 அமெரிக்க டாலர்களை ஊக்கத் தொகையாக வழங்கியது. ஆனால் இதனைப் பெற இவர் மறுத்துவிட்டார். கொலம்பியா பல்கலைக்கழகம் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் அரால்டு இயூரி எழுதிய கடிதத்தில் லிப்ஸ்காம்பின் விண்ணப்பத்தை நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐதராசீன்,[6] நைட்ரிக் ஆக்சைடு,[7] மெட்டல்-டிதியோலீன் ,[8] மெத்தில் எத்திலீன் பாஸ்பேட்,[9] மெர்குரி அமைடுகள்,[10] (NO) 2,[11] படிக ஹைட்ரஜன் புளோரைடு [12] ஆகிய பிற முக்கியமான சேர்மங்களை லிப்ஸ்காம்ப் மற்றும் அவரது மாணவர்கள் ஆய்வு செய்தனர். விருதுஇவரின் பணியினைப் பாராட்டும் விதமாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia