விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம்
அமைவிடம்கன்னியாகுமரி (பேரூராட்சி), இந்தியா
ஆள்கூற்றுகள்8°04′41″N 77°33′20″E / 8.077955°N 77.555607°E / 8.077955; 77.555607
கட்டப்பட்டது2 செப்டம்பர் 1970; 54 ஆண்டுகள் முன்னர் (1970-09-02)
விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் 2 செப்டம்பர் 1970 அன்று அமைக்கப்பட்டது. [1]

வரலாறு

1963 ஆம் ஆண்டில் இந்திய அரசு விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க முடிவு செய்தது. இதன் பிறகு, கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒரு குழுவினர் இந்தப் பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தம் என்று சொல்லி, அவர்களால் அப்பாறையில் சிலுவைச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இதனால் சமயம் சார்ந்த புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. இதில் உண்மையைக் கண்டறிய தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் விசாரணை முடிவில், இப்பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தமில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலுவைச் சின்னம் அகற்றப்பட்டது. அதன் பிறகு இந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது. கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

8°4′12″N 77°33′0″E / 8.07000°N 77.55000°E / 8.07000; 77.55000

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya