விவேக்-மெர்வின்

விவேக் மற்றும் மெர்வின் தமிழ்த் திரைப்படங்களில் இசை அமைக்கும் மற்றும் பாடல்கள் இயற்றும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் சுதந்திர இசை தயாரிப்பாளர்கள் ஆவர். வடக்கறி (2014) , புகழ் (2016) , டோரா (2017) மற்றும் குலேபகாவலி (2018) ஆகிய படங்களில் அவர்கள் பணியாற்றியுள்ளனர்.[1]

விவேக்-மெர்வின்
மெர்வின் சாலமன் (இ) மற்றும் விவேக் சிவா (வ)
பின்னணித் தகவல்கள்
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசை அமைப்பாளர்கள், இசைத் தயாரிப்பாளர்கள் மற்றும் பாடகர்கள்
இசைத்துறையில்2013 முதல் தற்போது வரை

இசை பின்னணி

விவேக் சிவா பயிற்சி பெற்ற ஒரு பாரம்பரிய இசையமைப்பாளர் ஆவார். தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பல்வேறு இசைக் குழுக்களில் அவர் செயல் ஆற்றியுள்ளார். மெர்வின் சாலமன் இசையமைப்பாளராகவும் இசை தயாரிப்பாளராகவும் சுதந்திர இசையை உருவாக்கி வந்தார். விவேக், மெர்வின் மற்றும் அனிருத் ஆகிய மூவரும் ஃஜிங்ஸ் என்ற இசைக் குழுவிலிருந்து வந்தவர்கள். விவேக் மற்றும் மெர்வின் பின்னாளில் அனிருத் இசையமைத்த திரைப்படங்களில் பணியாற்றி வந்தனர். 2015 ஆம் ஆண்டு வெளியான வடகறி திரைப்படத்தில் இசை அமைத்ததன் மூலம் இவர்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைத்தது.[2]

மேற்கோள்கள்

  1. "விவேக் மெர்வினின் அடுத்த திரைப்படம் - டைம்ஸ் ஆஃப் இந்தியா".
  2. "விவேக் மெர்வினின் அடுத்த பெரிய ஹிட் - டைம்ஸ் ஆஃப் இந்தியா".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya