விவேக் கணபதி ராமசாமி (Vivek Ganapathy Ramaswamy)[1][2] பிறப்பு:9 ஆகத்து 1985), ஓர் ஐக்கிய அமெரிக்காவின் தொழிலதிபரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2014இல் ரோய்வண்ட் அறிவியல்கள் எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தைத் துவக்கி நடத்தினார். பிப்ரவரி 2023இல் விவேக் ராமசாமி 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.[3][4]
இளமை & கல்வி
இந்து சமயத்தைச் சேர்ந்த வி. கணபதி ராமசாமி-கீதா எனும் இந்தியப் பெற்றோருக்கு, ஐக்கிய அமெரிக்காவின்ஒகையோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரத்தில் 1985 ஆகத்து 9 அன்று விவேக் பிறந்தார்.[5][6][7][8][9]தமிழ் மொழி பேசும் இவரது பெற்றோர் கேரளாவின் பாலக்காடுஅந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[5][10][11] இவரது தந்தை வி. கணபதி ராமசாமி, கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவரது தாய் கீதா மைசூர் மருத்துவக் கல்லூரியில் மூத்தகுடி மக்களுக்கான உளவியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[12]
2014 இல் விவேக் ராமசாமி ரோய்வண்ட் அறிவியல்கள் எனும் மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தை நிறுவி பெருந்தொகை ஈட்டினார். 2017 இல் தான் நிறுவிய நிறுவனத்தை $ 175 மில்லியன் டாலர் மூலதன ஆதாயத்துடன் விற்றார்.
2023 இல் விவேக் ராமசாமி பங்குதாரர்கள் சேவை நிறுவனத்தை துவக்கினார். இதனால் விவேக் ராமசாமியின் வருமானம் $750 மில்லியன் டாலராக உயர்ந்தது.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக பிரச்சாரம் (2023–தற்போது வரை)
2022 இல் விவேக் ராமசாமி
மே 2023 இல் விவேக் ராமசாமி 2024 அமெரிக்க அதிபர் தேர்லில் போட்டியிடுவதற்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் களத்தில் செயல்படுகிறார்.[20][21]
↑Holzman, Jael; Freedman, Andrew (February 3, 2023). "The right's anti-ESG crusader". Axios. Archived from the original on March 24, 2023. Retrieved February 10, 2023.
↑"FREOPP Leadership: Vivek Ramaswamy". FREOPP. July 13, 2020. Archived from the original on November 18, 2021. Retrieved July 18, 2023. attended underfunded public schools through 8th grade
↑Schulte, Becky (July 25, 2015). "July 2015". St. Xavier High School E-news (Mailing list). St. Xavier High School. Retrieved July 26, 2015.