வி. இராமசாமி
வீராசுவாமி இராமசாமி (V. Ramaswami)(15, பிப்பிரவரி 1929-8 மார்ச்சு 2025) என்பவர் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சிறீவில்லிப்புத்தூர் இந்து மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1] இராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் குடிமையியல், கிரிமினல் சட்டம் இரண்டிலும் 13 சூலை 1953 அன்று பயிற்சி செய்து தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 31 சனவரி 1971 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 12 நவம்பர் 1987 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், அக்டோபர் 6, 1989 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பதவியிலிருந்து இவர் பிப்ரவரி 14, 1994 அன்று ஓய்வு பெற்றார்.[2] இறப்பு8 மார்ச் 2025 அன்று, இராமசாமி தனது 96 வயதில் இறந்தார்.[3] மேற்கோள் |
Portal di Ensiklopedia Dunia