வி. கோபாலகிருட்டிணன் (நடிகர்)
வெங்கட்ராமன் கோபாலகிருஷ்ணன் (Venkataraman Gopalakrishnan) (பிறப்பு:1933 - இறப்பு: 1998 ஏப்ரல் 29) இவர் ஓர் இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்த் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வந்தார். இவர் எதிர்மறை மற்றும் துணை வேடங்களில் நடித்ததில் நன்கு அறியப்பட்டவர். ஆனால் ஒரு வெற்றிகரமான கதாபாத்திர நடிகராகவும் இருந்தார். ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது வலுவான வசன உச்சரிப்பையும் ஆங்கிலத்தையும் திரையுலகம் பாராட்டியது.[1][2] ஆரம்ப கால வாழ்க்கைகோபாலகிருட்டிணன் 1933இல் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். தனது 9 வயதில், குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னைக்குச் சென்று சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலை பட்டம் பெற்றார். மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டிய இவர், தமிழ் நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தனிப்பட்ட வாழ்க்கைகோபாலகிருட்டிணன் இலலிதா என்பவரை மணந்தார்.[3] இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இவர் 1998 ஏப்ரல் 29 அன்று இறந்தார். குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia