வி. சண்முகநாதன்
வி. சண்முகநாதன் (பிறப்பு: 21 நவம்பர் 1949) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் மீனாட்சிசுந்தரத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் 1962 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்குப் பல பதவிகள் கொடுக்கப்பட்டன. தமிழில் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1] மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த சையது அகமது மரணம் அடைந்ததை அடுத்து இவர் 2015 அக்டோபர் 1 முதல் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[2][3] இவர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் திகதி தனது ஆளுநர் பதவியிலிருந்து ராஜினமா செய்தார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia