வி. சாந்தா![]() மருத்துவர் வி. சாந்தா (Dr. V. Shanta, மார்ச் 11, 1927 – சனவரி 19 , 2021) இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் மக்சேசே விருது, பத்மசிறீ, பத்ம விபூசண் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அடையாறு புற்றுநோய்க் கழகத்திலே 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். வாழ்க்கைக் குறிப்புசென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர் சாந்தா. பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949-இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார். படைப்புகள்
விருதுகள்
மறைவுமரு. வி. சாந்தா தனது 94-வது அகவையில் 2021 சனவரி 19 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.[6][7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia