வி. சாமிநாதன்
வி. சாமிநாதன் (V. Saminathan) என்பவர் புதுச்சேரிப் பகுதியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் தற்போது பாண்டிச்சேரி பாஜக தலைவராக உள்ளார். சாமிநாதன், இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு, 4 சூலை 2017 முதல் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3] வி சாமிநாதன் கடந்த 1990களிலிருந்து பாஜகவில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பாஜக புதுச்சேரியின் மூத்த உறுப்பினர் ஆவர். இவர் பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியின் முக்கிய தலைவரான இவர் செங்குந்தர் பிரிவினைச் சார்ந்தவர். புதுச்சேரி, இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் லாஸ்பேட் தொகுதியில் போட்டியிட்டு 8,891 வாக்குகள் பெற்றார்.[4] இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி தலைவராக உள்ளார்.[5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia