வி. செல்வகணேஷ்

வி. செல்வகணேஷ்
வி. செல்வகணேஷ்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு28 திசம்பர் 1966 (1966-12-28) (அகவை 58)
மதராசு,
மதராசு மாநிலம் (தற்போது சென்னை, தமிழ்நாடு), இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கஞ்சிரா, மிருதங்கம்

வி. செல்வகணேஷ் (V. Selvaganesh) என்பவர் ஒரு இந்திய தாள இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசைப் பாரம்பரிய தாளக் கருவியான கஞ்சிராவை இசைக்கும் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] இவர் "செல்லா எஸ். கணேஷ்" என்றும் அழைக்கப்படுகிறார்.

தொழில்

ஜான் மெக்லாலின் இசைக் குழுவான ரிமம்பர் சக்தியுடனான சுற்றுப்பயணங்கள் மூலம் செல்வகனேஷ் உலக புகழ் பெற்றார். இவர் தனது தந்தையான கிராமி-விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தேட்டகுடி அரிகர விநாயகரமுக்கு, அவரது சிறீ ஜேஜிடிவி பள்ளியை நடத்துவதற்கும், புதிய தலைமுறை கர்நாடக தாளவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் உதவிவருகிறார். இவர் இசைத் தொகுதிகளை உருவாக்கி தயாரித்துள்ளார். மேலும் எசுபானியாவை தளமாக கொண்ட கலைஞரான ஜோனாஸ் ஹெல்போர்க் மற்றும் அமெரிக்க கிட்டார் கலைஞரான ஷான் லேன் ஆகியோருடன் சேர்ந்து இசைத்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில், செல்வகணேஷ் போதை என்ற தமிழ் குறும்படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார்.[2] சரிகம இசை வெளியீட்டு நிறுவனத்தால் எண்ணியில் வடிவத்தில் வெளியிடப்பட்ட இசைப்பதிவுகளையும் இவர் உருவாக்கியுள்ளார்.[3]

திரைப்பட வாழ்க்கை

வி. செல்வகணேஷ் தமிழ்த் திரைப்படமான வெண்ணிலா கபடி குழு (2008) மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு

தனித் தொகுப்புகள்
  • சௌகா (2006)
  • கஞ்சர்னி (2016)
ஜோனாஸ் ஹெல்போர்க்குடன்
  • குட் பீப்பில் இன் டைம்ஸ் ஆஃப் ஈவில் (2000)
  • ஐகான்: ஒரு டிரான்ஸ் கான்டினென்டல் கேதரிங் (2003)
  • காளிஸ் சன் (2006)
  • ஆர்ட் மெட்டல் (2007)
ஜான் மெக்லாலினுடன்
  • ரிமைன்டர் சக்தி - த பிலீவர் (2000)
  • ரிமைண்டர் சக்தி - சாட்டடே நைட் இன் பாம்பே (2001)
திரைப்பட இசையமைப்பாளராக

மேற்கோள்கள்

 

  1. NavdeepSandhu (2008-08-25). "Merging music". Express India. Archived from the original on 2012-09-23. Retrieved 2012-03-09.
  2. "Raising the tempo". http://www.thehindu.com/arts/cinema/raising-the-tempo/article2957490.ece. 
  3. "Saregama album page". Retrieved 2013-05-23.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya