வீதி நாடகம்![]() ![]() ![]() வீதி நாடகம் (Street theatre) என்பது குறிப்பிட்ட பார்வையாளர்களுக்காக இல்லாமல் வெட்டவெளியில் பொது இடங்களில் நடத்தப்படும் நாடக நிகழ்ச்சியின் ஒரு வடிவமாகும். இவை வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கல்லூரி அல்லது பல்கலைக்கழக வளாகங்கள் தெரு முக்குகள் உட்பட எங்கும் நடப்பன. இவை குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பொது இடங்களில் நடத்தப்படுகின்றன.[1] வீதி நாடகங்கள் பொதுவாக எளிமையான ஆடைகளும் உபகரணங்களையும் தளவாடங்களாக கொண்டு நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் நடிகர்களின் இயல்பான குரல் மற்றும் உடல் திறனைப் பொறுத்து ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ நடகம் நடத்தப்படும். கூட்டத்தை ஈர்க்கும் விதமாக நடக நிகழ்ச்சிகள் மிகத்தெளிவாகவும், சத்தமாகவும், புரிவதற்கு எளிமையாகவும் இருப்பதாக இருக்கும். பூங்கா, தோட்டங்கள் போன்றவற்றில் நடத்தப்படும் நாடகங்கள் போன்ற, மிகவும் முறைப்படுத்தபட்ட வெளிப்புற நாடக நிகழ்ச்சிகளிலிருந்து வீதி நாடங்கள் வேறுபடுத்தப்பட்டவை ஆகும். அவை ஒதுக்கலான பகுதியில் (அல்லது கயிறுகளால் தடுக்கபட்ட) தனி இடத்தில், நுழைவுச் சீட்டு பெற்ற பார்வையாளர்களே பார்வையாளர்களைக் கொண்டிருப்பனவாகும். சில சந்தர்ப்பங்களில், வீதி நாடகக் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த உள்ளாட்சி அல்லது மாநில அரசாங்கங்களிடம் உரிமம் அல்லது அனுமதியைப் பெற வேண்டி இருக்கும். பல கலைஞர்கள் சர்வதேச அளவில் சில குறிப்பிடத்தக்க இடங்களுக்குச் செல்கின்றனர். வீதி நாடகம் என்பது தற்போதுள்ள நாடகத்தின் மிகப் பழமையான வடிவமாகும்: பெரும்பாலான பிரதான பொழுதுபோக்கு ஊடகங்கள் சமய உணர்வு நடகங்கள் உள்ளிட்ட பல வடிவங்கள் வீதி நிகழ்ச்சிகளில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிற்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பலவகையான நிகழ்ச்சி, இசை அரங்குகள், ஆடல் பாடல் விரவிய நாடகம் நிகழ்த்தி தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த கலைஞர்கள், இப்போது உலகம் முழுவதும் உள்ள பல பிரபலமான வீதி நாடக நிகழ்ச்சிப் பகுதிகளில் தொழில் ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். வீதி நாடகக் கலைஞர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய குறிப்பிடத்தக்க கலைஞர்களில் ராபின் வில்லியம்ஸ், [2] டேவிட் போவி, ஜூவல், ஹாரி ஆண்டர்சன் ஆகியோர் அடங்குவர். பாரம்பரிய நாடக அரங்குகளை அணுக முடியாதவர்களுக்கு அதை அணுக வீதி நாடகம் ஒரு வழியாக உள்ளது. வீதி நடகப் பார்வையாளர்கள் என்பவர்கள் பொதுவாகப் பார்க்க விரும்பும் அனைவரும் ஆவார். மேலும் பெரும்பாலான நிகழ்ச்சிகளானது இலவச பொது பொழுதுபோக்காக உள்ளது. வீதி நடகங்களுக்கான நடத்துவதற்கான காரணங்கள்சமூக செயல்பாட்டில் ஆர்வமுள்ள கலைஞர்கள், பொதுமக்களை நேரடியாக சந்திக்க அல்லது ஈடுபடுத்துவதற்கான ஒரு வழியாக வீதிகளை தங்கள் படைப்புகளை அரங்கேற்றத் தேர்வு செய்பவர்களாக உள்ளனர். சில கலைஞர்கள், பணம் கொடுத்து நாடகம் பார்க்கும் பொதுமக்களை, தாங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் பொதுமக்களைப் பிரதிநிதிகள் அல்லர் என்று கருதுகின்றனர். மேலும் 'தெருவில் இருப்பவருக்கு' நிகழ்ச்சி நடத்துவது மிகவும் ஜனநாயக வடிவமாகக் கருதுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia