வீரன் சுந்தரலிங்கம்
வீரன் சுந்தரலிங்கனார் (Veeran Sundaralingam, இறப்பு: 1799)[1][2] என்பவர் இந்தியாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த, வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ் படைத்தலைவராகப் பணியாற்றி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில், இறந்த ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழ்நாடு அரசு இவர் பிறந்த ஊரில் இவருக்கு நினைவுச் சின்னமும், தோரண வாயிலும் அமைத்துள்ளது.[3][4][5][6][7] மேலும், முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1997-இல், தமிழ்நாடு அரசு, இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்குப் பெயர் சூட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற சாதியினர் சாதிக்கலவரங்களைத் தூண்டியதை அடுத்து, தமிழ்நாடு முழுக்க இருந்த மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பல்வேறு தலைவர்கள் நினைவாகச் சூட்டப்பட்டிருந்த பெயர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எனப் பொதுப்பெயரிடப்பட்டது. வரலாறுவீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகள் கழிந்து அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும் கூத்துகளும் இயற்றப்பட்டன. வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை, கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.[சான்று தேவை] தற்கொலைப் படை தாக்குதல்1799 செப்டம்பர் 8 ஆம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது. வெண்கலச் சிலைசுந்தரலிங்கம் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia