வீரபாண்டியன் வாண்மங்கலம்

வீரபாண்டியன் வாண்மங்கலம் (வீரபாண்டியன் வாள்மங்கலம்) [1] என்னும் நூல் காசிக்கலியன் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்பதைத் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடும் நூல் ஆகும்.

வாள் மங்கல ஆவணப்பாடல்

பற்றலர் மண் கொள்ளும் பணிந்தார்க்கு அரசு அளிக்கும்
கொற்றம் உயர்க்கும் அறம் கூருமே [2] - விற்றடந்தோள் [3]
வில்லவனை வென்று கொண்ட வீரமாறன் செழியன்
வல்லம் எறிந்தான் ஏந்து வாள். [4]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. p. 285.
  2. மிகுமே
  3. வில் தடம் தோள்
  4. இது வெண்பா யாப்பில் அமைந்துள்ள பாடல். பொருள் நோக்கில் இங்குச் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya