வெண்டேர்ச் செழியன்

வெண்டேர்ச் செழியன் என்பவன் இறையனார் அகப்பொருள் கூறும் இடைச்சங்கம் நிறுவிய முதலாம் பாண்டியர் மன்னன் ஆவான். இவன் கபாடபுரம் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.

இடைச்சங்கம்

குறிப்பு இடைச்சங்கம்
சங்கம் இருந்த இடம் கபாடபுரம்
சங்கம் நிலவிய ஆண்டுகள் 3700 (37 பெருக்கல் 100)
சங்கத்தில் இருந்த புலவர்கள் அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார்
புலவர்களின் எண்ணிக்கை 3700
பாடிய புலவர்களின் எண்ணிக்கை 59
பாடப்பட்ட நூல்கள் பெருங்கலி, குருகு, வெண்டாழி, வியாழமாலை, அகவல், பூதபுராணம்,மாபுராணம் ஆகிய இலக்கியங்கள் தோன்றின.
சங்கம் பேணிய அரசர்கள் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை
சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை 59
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை 5
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் அகத்தியம், தொல்காப்பியம், இசைநுணுக்கம்,

புதினம்

நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் நூலில் இவரின் கதாப்பாத்திரம் வருகிறது. அதன்படி இவர் வெண்முத்துக்களை பதித்த மூவாயிரம் தேர்களை கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். அதனால் இவர் பெயர் வெண்தேர்ச் செழியன் என்றானது.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya