வெப்பம் கொள் செயல்முறைவெப்பம் கொள் செயல்முறை (Endothermic process) என்பது சூழலில் இருந்து ஆற்றலை உள்ளிழுத்துக் கொள்ளும் ஒரு செயல்முறை அல்லது வேதிவினையைக் குறிக்கும். இவ்வாறு உள்ளிழுக்கப்படும் ஆற்றல் பொதுவாக வெப்பத்தின் வடிவத்தில் இருக்கும். இவ்வகை வினை தொடர்ந்து நிகழவேண்டுமாயின் அதற்குத் தேவையான வெப்பத்தைப் புறத்தில் இருந்து தந்துகொண்டிருக்க வேண்டும். இதற்கு மாறாக, வினையின் போது வெப்பத்தை வெளியே விடும் செயல்முறை வெப்பம் உமிழ் செயல்முறை எனப்படும். இவையிரண்டும் பொதுவாக இயற்கையில் நிகழும் வினையின் இருவடிவங்களாகும். எடுத்துக்காட்டுகள்
• இலித்தியம்-7 ஐசோடோப்பிலிருந்து டிரிட்டியம் ஐசோடோப்பை, உயர் ஆற்றல் நியூட்ரான்கள் வெப்பங்கொள் வினையினால் உருவாக்க முடியும். இவ்வினையின்போது 2.466 மெகா எலக்ட்ரான்வோல்ட்டு ஆற்றல் உட்கொள்ளப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு நிகழ்ந்த காசுடல் பிராவோ அணு ஆயுத பரிசோதனையின் போது இது கண்டறியப்பட்டது [1] • மீயொளிர் விண்மீன் வெடிப்புகளில் இரும்பைக் காட்டிலும் அதிக கன உலோகங்கள் அணுக்கரு இணைவின் போது வெப்பங்கொள் வினை நிகழ்கிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia