வெல்டிங் குமார்"வெல்டிங்" குமார் என்பவர் ஒரு இந்திய குற்றவாளியாவார்.சென்னையைச் சேர்ந்த இவர் வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மீதான தாக்குதலில் ஈடுபட்டதற்காக அறியப்படுகிறார். அதற்காக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இவர் சக கைதிகளுடனான மோதலின்போது புழல் சிறைச்சாலையில் கொல்லப்பட்டார். [1] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் சென்னையில் கொருக்குப்பேட்டைக்கு அருகிலுள்ள நாவலர் தெருவில் பிறந்தார். இவர் முதலில் ஜெயகுமார் என்று அழைக்கப்பட்டார். [2] இவர் இறந்தபோது சுமார் 47 முதல் 48 வயது இருக்கும் என்று நம்பப்படுகிறது. தண்டையார்பேட்டையில் பற்றவைப்பாளராக (வெல்டர்) தனது தொழிலை தொடங்கினார். [3] சாந்தியை மணந்த இவருக்கு திவ்யா என்ற மகளும், சுஷில் குமார் என்ற மகனும் உள்ளனர். [4] குற்றவியல் வரலாறுநான்கு கொலைகள் உட்பட 25 வெவ்வேறு குற்றவியல் வழக்குகளில் இவர் குற்றம் சாட்டப்பட்டார். டெக்கான் கிரோனிகல் இவரை சில தமிழக அரசியல்வாதிகளின் அடியாள் என்று வர்ணித்தது. [5] [6] 1985 இல் இராதாகிருஷ்ணனையும் 1992 இல் லம்பா மணியையும் கொன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்ற வளாகங்களுக்குள் சேராவையும், அயோத்தி குப்பத்தைச் சேர்ந்த வீரமணியையும் தாக்கியுள்ளார். நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் விஜயனை வழியில் தாக்கியுள்ளார். ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் ஆகியோரை தாக்கியதற்காக இவர் ஆயுள் தண்டனை பெற்றார். இவர் சிறையில் இருந்தபோதும் வன்முறையில் ஈடுபட்டார். இவர் கடலூர் சிறையில் இருந்தபோது ஜான் பாண்டியனையும், சேலம் சிறையில் இருந்தபோது வ. முல்லைவேந்தனையும் தாக்கினார்.[2] [7] வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வழக்கு30 மே 1995 அன்று வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்தை தாக்கியப் பிறகு இவர் தமிழகத்தில் புகழ் பெற்றார். "வெல்டிங்" குமாரை கைது செய்ய உதவும் தகவலுக்கு சிபிஐ பணப்பரிசு வளிப்பதாக அறிவத்தது. டான்சி நிலபேர வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா மீது திமுக சார்பில் வழக்கறிஞரான ஆர். சண்முகசுந்தரம் வழக்குத் தொடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கடுமையாக காயமடைந்தார். இந்த தாக்குதல் தமிழ்நாட்டு சட்ட சமூகத்தை கோபப்படுத்தியது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடந்தன. பின்னர் குமார் அந்த வழக்கில் உள்ளூர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. [3][8][9] இறப்பு2009 சூன் அன்று, குமார் புழல் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் நடக்கும் மோசடி செயல்களை இவர் தன் கையக்குள் கொண்டுவந்ததால் ஏற்பட்ட பகையின் விளைவாக இவரது கொலை நிகழ்ந்ததாக புழல் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர், அதில் குறிப்பாக ரிமாண்ட் கைதிகள் தங்கள் செல்பேசிகளை குற்றவாளிகள் பேச கொடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தனர். [10] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia