வெள்ளச்சி
வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை சிவகங்கைச் சீமையை ஆண்ட இரண்டாவது அரசி ஆவார்.[1] இவர் முத்து வடுகநாதர் - வேலு நாச்சியார் அவர்களுக்கு 1770-ல் மகளாக பிறந்தார். வெள்ளச்சி நாச்சியார் வயிற்றில் இருக்கும் போது அவரது தந்தை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு காளையார்கோவில் கோட்டையில் வீீர மரணம் அடைந்தார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது தாயார் வேலு நாச்சியார் ஆங்கிலேய அரசிடமிருந்து மீட்ட சிவகங்கைப் பகுதியை ஆண்டு வந்தார்.[2] ஆட்சி 1790-ஆம் ஆண்டு வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை ராணியாக முடி சூட்டினார். திருமணம் அந்த ஆண்டே (1790) சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகன் வேங்கன் பெரிய உடையாத் தேவர் அவர்களுக்கு திருமணம் நடந்தது.[3] மரணம் 1791-ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. 1793-ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் மற்றும் அவரது குழந்தை மர்மமாக இறந்தனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia