வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதல் நோய் (Leukorrhea) என்பது பெண்களின் பிறப்புறுப்பு வழியே கெட்டியான மஞ்சள் கலந்து வெண்ணிறமான நீர்மம் வெளிப்படுதலாகும்.[1][2] இதனை வெள்ளைப்படுதல், வெள்ளைப்பாடு அல்லது வெட்டை எனவும் குறிப்பிடுகின்றனர்.[3] வெள்ளைப்படுதலுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் பொதுவாக ஈத்திரோசன் சமச்சீரற்ற தன்மை மற்றும் பாலியல் தொற்று காரணமாகச் சொல்லப்படுகிறது.[3] பெண்களின் கருப்பை வாய்,கருப்பை உட்புறச்சுவர், பிறப்புறுப்புத் தசைப்பகுதிகள் ஆகியவற்றில் சுரக்கும் திரவமானது பெண்களின் பிறப்புறுப்பை ஈரமாகவே வைக்கவும் உராய்வுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.[4] பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று காரணமாகவோ அல்லது பாலியல் நோய்க்காரணமாகவோ இத்திரவம் அதிகமாக வெளிப்படும். சில நேரங்களில் வெளிப்படுவதும் நிற்பதுமாக இருக்கும். சிலருக்கு துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் திரவம் பல ஆண்டுகள் தொடர்ந்தும் வெளிப்படும். இது வழக்கமாக கருப்பை வாய் வீக்கம் அல்லது புணர்புழை வீக்கம் ஏற்பட்டிருப்பதன் இரண்டாம்நிலை அறிகுறியாகும்.[5] சில நேரங்களில் வெள்ளைப்படும் பகுதியில் நமைச்சலுடன் கூடிய அரிப்பும் எரிச்சலும் இருக்கும்.[6] பிறப்பிறுப்பில் வெளிப்படும் திரவத்தில் கலந்திருக்கும் >10 இரத்த வெள்ளையணுக்களை நுண்ணோக்கிப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.[7] வெள்ளைப்படுதல் என்பது அசாதாரணமான ஒன்றல்ல. இது நோய்த்தொற்று, புற்று, சுரப்பிகளின் மாற்றம் ஆகியவற்றுக்கான முன்னறிவிப்பாகும். சிலசமயம் ஒரு பெண் முதல் மாதவிடாய்ச் சுழற்சிக்கு முன் இது போன்ற வெள்ளைப்படுதல் அவள் பருவமடைவதற்கான அறிகுறியாகக் கொள்ளப்படுகிறது. சாதாரண வெள்ளைப்படுதல்வெள்ளைப்படுதல் என்பது மிகப்பெரிய பிரச்சனையல்ல. ஆனால் மிகவிரைந்து தீர்க்கப்படவேண்டிய பிரச்சனையாகும். யோனியானது தனது வேதிச்சமநிலையைப் பராமரிக்கவும், யோனித்திசுக்களின் நெகிழ்வுத்தன்மைக்காவும் இயற்கையாக ஏற்படும் ஒரு தடுப்பு நடவடிக்கையாகும். ஈத்திரோசன் தூண்டலனினால் வெள்ளைப்படுதலே பொதுவாக உடலியல் வெள்ளைப்படுதல் என்றழைக்கப்படுகிறது.[8] கருவுற்ற காலத்திலும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நிகழும். இக்காலத்தில் ஈத்திரோசன் சுரப்பு அதிகரிப்பின் காரணமாக சற்று அதிகமான இரத்தப்போக்கு ஏற்படும். பிறந்த பெண்குழந்தைக்கும் சிறிது காலம் அதனுடைய கருப்பையின் ஈத்திரோசன் வெளிப்பாடு காரணமாக வெள்ளைப்படுதல் நிகழலாம். பாலியல் தூண்டல் காரணமாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.[9] வெள்ளைப்படுதல் அழற்சிவெள்ளைப்படுவதன் காரணமாக யோணித்தசைகளில் நெரிசல் அல்லது வீக்கம் ஏற்பட்டு அழற்சி ஏற்படலாம். இதனால் துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நீர்மம் வெளியேறுமாயின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை நாடவேண்டும். ஏனெனில் வெள்ளைப்படுதல் என்பது உள்ளுறுப்புகள் பாக்டீரியாக்களால் பாதித்தல், பால்வினை நோய்கள் போன்ற பல நோய்கள் பரவுவதன் அறிகுறி நிலையாகும்.[10] குழந்தைப் பேறுக்குப் பின் வெள்ளைப்படும் போது முதுகுவலியுடன் துர்நாற்றத்துடன் கூடிய யோனிநீர் வெளியேறும்,(இதில் இரத்தம், நஞ்சுக்கொடி திசுக்கள், சளி போன்றவை கலந்துள்ளதால் துர்நாற்றம் ஏற்படும்) வெள்ளைப்படுவதால் கருப்பையானது பேறுக்கு முன்னிருந்த நிலைக்குச் சுருங்குவதில் தடை ஏற்படலாம். இந்நிலையில் இந்நோய்க்கு கண்டறிய யோனியின் ஈரத்தன்மைச் சோதனை, கிராம் சோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, பாப் சோதனை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஒட்டுண்ணிகளால் வெள்ளைப்படுதல்ஒட்டுண்ணிகள், புரோட்டோசோவா எனப்படும் ஒருசெல்லுயிரிகளான முதலுயிரிகள் ஆகியவைகளாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். எரிச்சல், அரிப்பு, கெட்டியான நீர்ம வெளியேற்றம், கெட்டியான மஞ்சள் நிறச் சளி வெளியேறுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.[5][11] சிகிச்சைவெள்ளைப்படுதல் என்பது பால்வினைநோய்த் தொற்றினால் உருவாகக்கூடியதாகையால் இதற்கு பால்வினை நோய்ளுக்கான சிகிச்சையளிக்க வேண்டும். மெட்ரோனைடசோல் போன்ற நோய்க்கொல்லிகள் உட்கொள்ளவேண்டும். கிளிண்டாமைசின் அல்லது ட்ரினைடசோல் போன்ற நோய்க்கொல்லிகள் பால்வினை நோய்களுக்கு வழங்குவது போலவே இதற்கும் வழங்கப்படுகின்றன.[12][13] பெயரியல்லூக்கோறியா என்ற சொல் வெள்ளைப்படுதல் எனப் பொருள்தரும் லுக்கோறியா என்ற கிரேக்க மொழிச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். (leukós, “white”) + ῥοία (rhoía, “flow, flux”). ’லூக்கோ’ என்றால் வெள்ளை என்றும் ’றியா ’எனில் போக்கு அல்லது வெளியேற்றம் எனவும் பொருள்தரும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia