வெள்ளை அறிக்கைவெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது. நாடளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்ட அரசின் கொள்கையை சட்டவடிவம் ஆக்குவதற்கு முன் மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக கனடாவில் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.[1] தற்காலத்தில், புதிய பொருள் ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்யும் முன் அதன் அம்சங்கள் பற்றி விளம்பரம் செய்ய அந்நிறுவனங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிடுகின்றன. வணிக வெள்ளை அறிக்கைகள் தகவல் தொடர்பாக பயன்படுகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia