வெ. ஸ்ரீராம்வெ. ஸ்ரீராம் (பிறப்பு - 1944), செவாலியே விருது பெற்ற தமிழக மொழிபெயர்ப்பாளர் ஆவார்.[1] ஈரோட்டில் பிறந்து கரூரில் பள்ளிப்படிப்பும் திருச்சியில் பட்டப்படிப்பும் முடித்தார். 1965 - 2001 காலத்தில் சென்னையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு முக்கியமான சில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு திரையுலகம் தொடர்பான கட்டுரைகளை பல இதழ்களிலும் எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அலியன்ஸ் பிரான்சேயின் நிர்வாகக் குழுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். பிரெஞ்சு இலக்கியம், பண்பாடு முதலானவற்றைத் தமிழ்நாட்டில் பரப்பும் பணியில் பல ஆண்டுகளாக இவர் அளித்துவரும் பங்கைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு ஷெவாலியெ (Chevalier, Ordre des Palmes Académiques) விருதும், அதே ஆண்டில் ஷெவாலியெ (Chevalier, Ordre des Arts et des Lettres) விருதும் அளித்து இவரைச் சிறப்பித்தது. மொழிபெயர்ப்புக்கள்
குறுவெளியீடுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia