வேக ஈனுலை![]() ஈனுலை (breeder reactor) எனப்படும் அணு உலையில் பிளவுறு பொருளை பயன்படுத்துவதைக் காட்டிலும் கூடுதலான பிளவுறு பொருட்களை உருவாக்கப்படுகின்றன.[1] இவ்வுலைகளின் நியூத்திரன் இலாபம் மிகக் கூடியநிலையில் இருப்பதால் யுரேனியம்-238, தோரியம்-232 போன்ற தனிமங்களிலிலிருந்து பிளவுறு பொருட்களை ஈனுவதால் இவை ஈனுலைகள் எனப்படுகின்றன. மென்னீர் அணு உலைகளை விட கூடிய எரிபொருள் திறனைக் கொண்டிருந்ததால் இவை துவக்கத்தில் மேம்பட்ட தொழில்நுட்பமாக கருதப்பட்டது. 1960களில் யுரேனியம் மிகுந்த அளவில் கிடைக்கத்தொடங்கியதாலும் புதிய யுரேனியச் செறிவு முறைகள் கண்டுபியடிக்கப்பட்டமையாலும் எரிபொருட் செலவு குறையத் தொடங்கிய பிறகு இவ்வகை அணு உலைகளில் ஆர்வம் குறையத் தொடங்கியது. ஈனுலைகள் கொள்கையளவில் யுரேனியத்திலிருந்தோ தோரியத்திலிருந்தோ முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனால் வழமையான அணு உலைகளை விட இரு மடங்களவில் எரிபொருளைச் சேமிக்க இயலும். கடலிலிருந்து பிரிக்கப்படும் யுரேனியத்தின் அளவைக் கருத்தில் கொண்டால் சூரியன் உள்ளளவும் தொடர்ந்து ஈனுலைகளை இயக்கத் தேவையான எரிபொருள் புவியில் உள்ளது. எனவே ஈனுலைகள் மூலம் பெறப்படும் ஆற்றலானது சூரிய சக்தி அல்லது காற்றுச் சக்திக்கிணையாக பேணத்தக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக விளங்குகிறது.[2][3] அணுக் கழிவுகளைக் குறித்த கவலைகள் 1990களில் ஏற்படலாயிற்று. இதனைத் தொடர்ந்து எரிபொருளை சேமிக்கும் ஈனுலைகளில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக ஈனுலைகளில் எரிபொருள் சுழற்சிகளால் புளுடோனியம் போன்ற அக்டினைடுகளின் கழிவுகளைக் குறைக்கக்கூடிய வாய்ப்பு கவனத்தைக் கவர்ந்தது.[4] ஓர் மென்னீர் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளின் கழிவுகளில் இருக்கும் நிலையற்ற யுரேனியம்சார் தனிமங்கள் அடுத்த 10,000 ஆண்டுகள் வரையிலான கதிரியக்கத்தில் முதன்மை வகிக்கும். எனவே இத்தகைய நீண்ட வாழ்நாள் கதிரியக்க கழிவுகளை இல்லாமலாக்குவது பெரும் பயனளிக்கும்.[5] கருதுகோளின்படி ஓர் ஈனுலை மீண்டும் மீண்டும் எரிபொருளைப் பயன்படுத்தி அனைத்து அக்டினைடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.[2] ஈனுலை சுழற்சிகள் இருவகைப்படுகின்றன; இரண்டுமே அக்டினைடு கழிவுகளை குறைக்கின்றன:
வேக ஈனுலை![]() 2006 ஆண்டு நிலவரப்படி, பெரிய அளவில் இயங்கும் அனைத்து வேக ஈனுலைகளுமே நீர்மநிலை சோடியத்தால் குளிர்விக்கப்படும் நீர்ம உலோக வேக ஈனுலைகளாக (LMFBR) உள்ளன. இவற்றின் வடிவமைப்பு இரண்டு வகைகளாக உள்ளன:[1]
இதையும் காண்கசான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia