வேப்பிலை ஆடைப் பிரதட்சணம்

வேப்பிலை ஆடைப் பிரதட்சணம் என்பது அம்மனை வழிபடும் சாக்த சமயக் கூறின் ஒரு வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாட்டிற்காக வேப்பிலையால் செய்த ஆடையை அணிந்த ஆண்களும் பெண்களும் அம்மனை கோவிலை வலம்வருகிறார்கள்.

புராணக் கதை

ஜமதக்னி முனிவரை கார்த்தவீரியனின் பிள்ளைகள் கொன்றுவிட்டதால், அவருடைய மனைவியான ரேணுகா தேவி தானும் இறந்துபோக தீயில் இறங்கினாள். ஆனால் அவளைக் காப்பாற்றும் பொருட்டு தேவர்களின் அரசான இந்திரன் மழையை பொழியவைத்து காப்பாற்றிவிட்டார். இருப்பினும் தீயினால் ஆடை இழந்து, அவளுடைய உடல் முழுவதும் தீக்கொப்புளங்களாக இருந்தன. அவள் வேப்பிலையை ஆடையாக அணிந்து கொண்டு ஊருக்குள் வந்தாள். அவளை முத்துமாரி என்ற அம்மனாக வழிபடுகின்றனர். [1]

ஆதாரங்கள்

  1. பக்தி கதைகள் - தினமலர் கோவில்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya