வேர்த் தண்டு![]() வேர்த் தண்டு (English: Geophytes) தாவரங்கள் என்பவை நிலத்திற்கு அடியில் வளரக் கூடிய சதைப்பற்றுள்ள பாகங்களைக் கொண்ட தாவர இனங்கள் ஆகும். இவற்றுக்கு புவிவளரிகள், தரைக்கீழ்த் தாவரங்கள் என வேறு பெயர்களும் இருக்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே. தண்டுக்கிழங்குகள், கிழங்குகள், முகிழுருவான தண்டுகள், முகிழுருவான வேர்கள் என வேர்த் தண்டுகள் பலவகைகளாக பிரிக்கப்படுகின்றன.[1][2] இத் தாவரங்களின் வேர்த் தண்டுப் பாகங்கள் கடுங்குளிர், கடும் வெயில், வறட்சிக் காலங்களில் மண்ணோடு மண்ணாக இருந்து ஏதுவான காலநிலை வரும்போது முளைத்து வளரக் கூடிய ஆற்றல் கொண்டவை. கேரட், முள்ளங்கி, பீட்டுரூட்டு, இஞ்சி போன்றவை இவ் வகைத் தாவரங்களைச் சேர்ந்த சில முக்கியமான கிழங்கு வகைகள் ஆகும்.[3].
சேமிப்பு வேர்கள்இந்த வேர்த் தண்டு தாவர வகைகளில் முக்கியமான பாகம் அதன் சேமிப்பு வேர்கள். அத் தாவரங்களுக்குத் தேவையான உணவை வேர்களில் சேமித்து வைப்பதனால் அதன் வேர்கள் பருத்து சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. இவற்றை வேர்க் கிழங்குகள் எனவும் சொல்வார்கள். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia