வேளாங்கண்ணி தொடருந்து நிலையம்
வேளாங்கண்ணி தொடருந்து நிலையம் (Velankanni railway station, நிலையக் குறியீடு:VLNK) இந்தியாவின், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி நகரிலுள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். அதிகார எல்லைதமிழ்நாட்டிலுள்ள, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள இந்நிலையம், தெற்கு இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டதாகும்.[1] அமைவிடம்நாகப்பட்டினம், வேளாங்கண்ணி அகலப்பாதையில் 10 கிலோமீட்டர் முடிவில் இந்நிலையம் அமைந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு இரயில் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 48 கோடி ரூபாய் செலவில், 2010 ஆம் ஆண்டில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன.[2] தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் வேளாங்கண்ணி தொடருந்து நிலையம் இயங்குகிறது. சிறப்பு தொடருந்துகள்வேளாங்கண்ணி நகரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னைை திருத்தலம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாங்கண்ணி திருவிழாவிற்காக தென்னக இரயில்வே சிறப்பு தொடருந்துகளை வேளாங்கண்ணிக்கு இயக்குகிறது.[3][4]. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia