வைப்புத்தொகை (தேர்தல்)வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காக போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது. ஒரு வேட்பாளர் இவ்வாறு வைப்புத் தொகை இழப்பது பெருந்தோல்வியின் அடையாளமாகவும், அவமானகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்தியக் குடியரசில் மக்களவைக்குப் போட்டியிடுபவர்கள் ₹25,000 வைப்புத்தொகையாகக் கட்டவேண்டும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ₹12,500 ஆகும்.[1] மாநில சட்டமன்றங்களுக்குப் போட்டியிடுவோர் ₹10,000 கட்ட வேண்டும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ₹5,000 ஆகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (16.7%) பெறத் தவறினால், தங்கள் வைத்தொகையை இழப்பர்.[2][3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia