வொர்த் கோட்டை (Fort Worth) ஐக்கிய அமெரிக்காவின் பதினாறாவது மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் உள்ளது.[8] டெக்சாஸ் மாநிலத்தின் வட மத்தியில் டெக்சாஸ் பானஹாண்டிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கத்திய பண்பாட்டிற்கு வாயிலாக விளங்குகிறது. டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு கௌண்டிகளில் 300 சதுர மைல்கள் (780 km2) பரவியுள்ள இந்த நகரம் டாரெண்ட் கௌண்டியின் தலைநகராகவும் உள்ளது. 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி, வொர்த் கோட்டையின் மக்கள்தொகை 741,206.[5][9][10] 2030ஆம் ஆண்டில் 1,211,665 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டல்லாஸ்–வொர்த் கோட்டை- ஆர்லிங்டன் பெருகரப் பகுதியில் இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகிறது.
டிரினிட்டி ஆற்றங்கரையில் 1849ஆம் ஆண்டு ஓர் படைத்துறை தொலைக் குடியேற்றமாக நிறுவப்பட்ட வொர்த் கோட்டை இன்றும் தனது அமெரிக்க மேற்கு கலாசாரத்தைப் பேணியும் பழமையான கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பை வளர்த்தும் வருகிறது.[11]