ஷான் மசூத்ஷான் மசூத் (Shan Masood Khan (பிறப்பு: அக்டோபர் 14 ,1989) இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இடது-கை மட்டையாளரான இவர் வலது-கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் துர்ஹாம் எம்சிசியு, ஃபெடரல் ஏரியாஸ், கராச்சி ஒயிட்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பாக்கித்தான் அ அணி, 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[1][2] ஆரம்பகால வாழ்க்கைஷான் மசூத் அக்டோபர் 14, 1989இல் குவைத்தில் பிறந்தார். அவரின் தந்தை வங்கியில் வேலை பார்த்து வந்தார். குவைத் தாக்குதலுக்குப் பிறகு இவரின் குடும்பம் தனது சொந்த நாடான பாக்கித்தானுக்குச் சென்றது.[3] உள்ளூர்ப் போட்டிகள்2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். அந்தத் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கராச்சி அணிக்காக விளையாடிய இவர் 54 ஓட்டங்கள் எடுத்தார். இவர் துவக்க வீரரான அசாத் சபிக்குடன் இணைந்து முதல் இணைக்கு 154 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் இவர் தர்ஹாம் பல்கலைக்கழக அணிக்காக மூன்று முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது இவர் பாக்கித்தான் தேசிய வங்கி அணிக்காக விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டில் குவைத் -இ-அசாம் வாகையாளர் கோப்பைத் தொடரில் ஐதராபாத் அணிக்காக இவர் விளையாடினார். அந்தத் தொடரில் அந்த அணி கோப்பையை வென்றது. 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் கோப்பைத் தொடரில் கைபர் பக்துன்குவா அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் இவர் துணைத் தலைவராக இருந்தார்.[4][5] சர்வதேச போட்டிகள்மசூத் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் 75 ஓட்டங்கள் எடுத்தார். தனது பிறந்த நாள் அன்று தனது முதல் போட்டியில் இவர் விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 14 இல் அபுதாபியில் நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பின் மட்டையாட்டத்தில் 140 பந்துகளை சந்தித்த இவர் 75 ஓட்டங்களை எடுத்து ஜே பி டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் மட்டையாட்டத்தில் 2 பந்துகளை சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் பிலாண்டரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இழப்புகளால் வெற்றி பெற்றது.தான் விளையாடிய முதல் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார். இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். யூனிசு கானுடன் இணைந்து பாக்கித்தான் அணி 7 இலக்குகளால் வெற்றி பெற உதவி புரிந்தார். 2016 ஆம் ஆண்டில் ஓல்ட் டிரபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக பந்து வீசினார். தனது முதல் பந்தினை நோபாலாக வீசினார்.[6] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கிண்ணம் 2018 போட்டித் தொடரில் பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.[7] சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia