ஸ்கோடா ஆட்டோ
ஸ்கோடா என்று பெரும்பாலும் அழைக்கப்படுவதான ஸ்கோடா ஆட்டோ செக் குடியரசில் மூலதளம் கொண்டுள்ள ஒரு ஊர்தி உற்பத்தி நிறுவனமாகும். 1991ஆம் ஆண்டு ஸ்கோடா வோக்ஸ்வாகன் குழுமத்தின் துணை நிறுவனமானது. 2009ஆம் ஆண்டு அதன் மகிழுந்து விற்பனை 684,226 என்னும் நிலைக்கு உயர்ந்தது. வரலாறு1859ஆம் ஆண்டு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதற்காக ஸ்கோடா வொர்க்ஸ் நிறுவப்பட்டது. ஆனால், அது ஊர்திகளைத் தயாரிக்கவில்லை. ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தோற்றுவாய், பல்லாண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் பல இதர மகிழுந்து உற்பத்தியாளர்கள் போன்று, 1890ஆம் ஆண்டுகளின் மிதிவண்டி உற்பத்தி நிறுவனமாகத் தடமறியப்படுகிறது. 1894ஆம் ஆண்டில், அன்றைய ஆஸ்திரிய ஹங்கேரியப் பகுதியாக இருந்த, இன்றைய செக் குடியரசின் மிலாடா போலெஸ்லேவ் பகுதியில் புத்தக விற்பனையாளராக இருந்த , 26 வயதேயான வாக்லவ் கிளெமெண்ட் என்பவருக்கு ஜெர்மானியத் தயாரிப்பான அவரது மிதிவண்டியை மராமத்து செய்வதற்கான உதிரி பாகங்கள் கிடைக்கப் பெறவில்லை. கிளெமெண்ட் தனது மிதி வண்டியை அதன் உற்பத்தியாளர்களான செய்டெல் அண்ட் நௌமான் நிறுவனத்திடம் திரும்பக் கொடுத்து, மராமத்து செய்யுமாறு ஒரு கடிதமும் அளித்தார். ஆனால், இதற்கு ஜெர்மன் மொழியில் இவ்வாறான பதில் கிடைத்தது: "உங்கள் கேள்விக்குப் பதில் வேண்டும் என்றால், எங்களுக்குப் புரிவதான ஒரு மொழியில் எழுத முயற்சி செய்யவும்." இதனால் வெறுப்படைந்த கிளெமென்ட், தாம் தொழில் நுட்ப அனுபவம் ஏதும் கொண்டிராதபோதும், மிதிவண்டி மராமத்து செய்வதற்கான ஒரு கடையினைத் திறக்க முடிவு செய்தார். 1895ஆம் ஆண்டு அவரும் வாக்லெவ் லௌரின் என்பவரும் மிலாடா போலெஸ்லேவ் என்னும் பகுதியில் ஒரு கடையினை நிறுவினர். கிளெமெண்ட்டுடன் வர்த்தகக் கூட்டுறவு வைத்துக் கொள்வதற்கு முன்பாக, அருகிலுள்ள டுர்னோவ் என்னும் சிறு நகரில் லௌரின் மிதிவண்டி உற்பத்தியாளராக பெயர் பெற்றிருந்தார். ![]() 1898ஆம் ஆண்டு புதியதாகக் கட்டமைக்கப்பட்ட தங்களது தொழிற்சாலைக்குச் சென்ற பின்னால், இந்தச் சோடி ஃபிரெஞ்சு நாட்டு வெர்னர் சகோதரர்கள் கட்டமைத்த ஒரு வெர்னர் விசையுந்து பொறி இயந்திரத்தினை[nb 1] வாங்கியது. லௌரின் மற்றும் கிளெமெண்ட்டின் முதலாம் உந்துப் பொறி இயந்திரம் கைப்பிடிகளின் மீது பொருத்தப்பட்டு, முன்சக்கரங்கள் கொண்டு ஓடுவதாக அபாயகரமானதாகவும், நம்பகத்தன்மை இன்றியும் இருந்தது. இதை ஓட்டிய முதல் நிகழ்வினில் தனது முன்பல் ஒன்றினை லௌரின் இழந்தார். பொறி இயந்திரத்தைச் சுற்றிலும் பாதுகாப்பான இயந்திரம் ஒன்றினை வடிவமிக்க, இந்தச் சோடி ஜெர்மானிய எரிபற்றல் நிபுணரான ராபர்ட் போஸ்ஷ் என்பவரிடம் பல்வேறு வகையான மின் காந்த அமைப்புகளைப் பற்றி அறிவுரை கேட்டது.இந்தச் சோடியின் புதிய ஸ்லேவியா விசையுந்து 1899ஆம் ஆண்டு அறிமுகமானது. 1900ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் 32 பணியாளர்கள் இருந்தனர். ஸ்லேவியா ஏற்றுமதியாகத் துவங்கியது. லண்டன் நகரில் உள்ள ஹெயுட்சன் நிறுவனத்திற்கு 150 இயந்திரங்கள் கப்பலேற்றப்பட்டன. இதன் பின்னர் விரைவிலேயே முதல் விசையுந்துத் தயாரிப்பாளர்கள் என பத்திரிகையாளர்கள் இவர்களுக்குப் புகழாரம் சூட்டினர்.[2] வாய்ச்சுரெட்ட என்னும் முதற் மாதிரி வெற்றி அடையவே ஆஸ்திரிய- ஹங்கேரியில் மட்டும் அல்லாது சர்வதேச அளவிலும் இந்நிறுவனம் புகழடைந்தது. 1905ஆம் வருட வாக்கில் இந்நிறுவனம் ஊர்திகளைத் தயாரிக்கலானது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், லௌரின்-கிளெமெண்ட் நிறுவனம் பாரவண்டிகளைத் தயாரிக்கத் துவங்கியது. ஆனால், 1924ஆம் ஆண்டு தீ விபத்து ஒன்றின் காரணமாக பிரச்சினைகள் உண்டானதும் ஒரு கூட்டாளியை இந்நிறுவனம் தேடலானது. ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டிருந்து பின்னர் பல்பொருள் உற்பத்தியாளராக வளர்ந்து விட்டிருந்த ஸ்கோடா வொர்க்ஸ் நிறுவனம் இதைக் கையகப்படுத்தவே செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் மாபெரும் தொழில் நிறுவனமாக இது மாறியது. பிற்காலத்திய தயாரிப்புகளில் பெரும்பான்மையானவை ஸ்கோடாவின் பெயரினையே கொண்டிருந்தன. பொருளாதாரத் தாழ்நிலையின்போது உண்டான ஒரு இறங்கு முகத்திற்குப் பின்னர், ஸ்கோடா நிறுவனம் பாப்புலர் போன்ற மாதிரிகளை 1930ஆம் ஆண்டுகளின் இறுதியில் உற்பத்தி செய்து மீண்டும் வெற்றி அடையலானது. இரண்டாம் உலகப் போர் நிகழும் காலத்தில் செக்கோஸ்லோவாக்கியா ஆக்கிரமிப்பின் காரணமாக, ஸ்கோடா வொர்க்ஸ் ஹெர்மன் கோரிங் வொர்க்கெ என்பதன் பகுதியாக மாறி, இரண்டாம் உலகப்போர் நிகழ்வில் ஜெர்மனி நாட்டின் முயற்சிகளுக்குத் துணை புரியலானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்![]() ![]() ![]() 1945ஆம் ஆண்டு மிலாடா போலெஸ்லேவ் தொழிற்சாலை மீண்டும் கட்டமைக்கப்பட்டபோது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னதான ஸ்கோடாவின் முதல் மகிழுந்தான 1101 தொடரின் உற்பத்தி துவங்கி விட்டது. இது இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஸ்கோடா பாப்புலர் ஊர்தியின் இற்றைப்படுத்திய பதிப்பேயாகும். 1945ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தில் (இதர அனைத்து பெரும் உற்பத்தியாளர்களுடனும்) ஸ்கோடா திட்டமிட்ட பொருளாதாரம் என்பதில் பங்கேற்றது. அதாவது, அது தனது தாய் நிறுவனமான ஸ்கோடாவிலிருந்து பிரிந்தது.[தெளிவுபடுத்துக] அரசியல் சூழல் சாதகமாக இல்லாதிருப்பினும் மற்றும் பொதுவுடமை அரசு இல்லாத நாடுகளின் தொடர்பு அற்றுப் போய்விடினும், ஸ்கோடா 440, ஸ்பார்டக், 445 ஆக்டேவியா, ஃபெலிசியா மற்றும் ஸ்கோடா 1000 எம்பி போன்ற மாதிரிகளைத் தயாரித்ததன் மூலம் 1960ஆம் ஆண்டுகள் வரையிலும் ஸ்கோடா தனது நன்மதிப்பைத் தக்க வைத்தே இருந்தது. 1980ஆம் ஆண்டுகளின் இறுதியிலும் ஸ்கோடா (அப்போது அதன் பெயர் ஆட்டோமொபிலவ் ஜாவோடி நரோட்னி போட்னிக், மிலாடா போலெஸ்லேவ் என்றாக மாறி விட்டிருந்தது) கருத்துருவில் 1960ஆம் ஆண்டுகளைப் பொறுத்தவையாக இருந்த மகிழுந்துகளையே தயாரித்து வந்தது. 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் ஆர்ஏசி திரளணிப் பந்தயங்களில், இதனை விட மேலும் நவீனமாக இருந்த பந்தய மகிழுந்துகளை விடவும் எஸ்டெல் மற்றும் ரேபிட் போன்ற ஸ்கோடா 105/ 120 பின்புறப் பொறியியந்திர மாதிரிகள் நல்ல முறையில் விற்பனையாயின. ஆர்ஏசி திரளணியில் 17 வருடங்கள் ஓடியமைக்காக அவை உயர் நிலை பெற்றன. அவை 130 brake horsepower (97 kW), 1,289 cubic centimetres (78.7 cu in) பொறி இயந்திரம் கொண்டு இயக்கப்படலாயின. பழங்காலத் தோற்றம் கொண்டு, நகைச்சுவைக்குப் பாத்திரமாக இருப்பினும், ஐக்கிய ராச்சியம் மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகியவற்றில் 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகள் வரையிலும் கூட ஸ்கோடா சாலைகளில் வழமையாகத் தென்படுவதாகத்தான் இருந்தது. எஸ்டெல் மற்றும் அதற்கு முந்தைய மாதிரிகளின் விளையாட்டு உந்திப் பதிப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றிற்கு 'ரேபிட்' என்னும் பெயர் வழங்கப்படலானது. மென் மேற்புறப் பதிப்புகளும் கிடைக்கப் பெறலாயின. 'ஏழையின் போர்ஷ்' என்று ரேபிட் ஊர்தி வர்ணிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டுகளில் இதன் விற்பனை ஐக்கிய இராச்சியத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.[3]
1987ஆம் ஆண்டு ஃபேவரிட் என்னும் மாதிரி அறிமுகமானது. இதன் தோற்றத்தினை இத்தாலிய நிறுவனமான பெர்ட்டோன் வடிவமைத்தது. மேற்கு ஐரோப்பாவிலிருந்து விசையுந்து தொழில் நுட்பம் சிறிதே உரிமம் பெறப்பட்டு, இன்னமும் ஸ்கோடா-வடிவமைபில் 1289 சிசி பொறி இயந்திரங்களைப் பயன்படுத்தி, ஸ்கோடா பொறியாளர்கள் மேற்கத்திய உற்பத்திக்கு ஈடானதொரு மகிழுந்தை வடிவமைத்தனர். தொழில் நுட்ப ரீதியாக இடைவெளி இருக்கத்தான் செய்தது; ஆயினும், அது விரைவாகக் குறைந்து வரலானது. செக்கோஸ்லோவாக்கியா மற்றும் இதர கிழக்குப் பகுதி நாடுகளிலும் ஃபேவரிட் மிகுந்த அளவில் பிரபலமானது. மேற்கு ஐரோப்பாவிலும் இவை கணிசமாக விற்பனை ஆயின. குறிப்பாக ஐக்கிய இராச்சியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் இவை திண்மம் பொருந்தியதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும், மிகுந்த மதிப்பு கொண்டதாகவும் கருதப்பட்டன. இவற்றின் சீரளவுகள் தொடர்ந்து மேம்பட்டு வரவும், 1994ஆம் ஆண்டு ஃபெலிசியா அறிமுகமாகும் வரை, இவை விற்பனையில் இருந்து வந்தன. வோக்ஸ்வாகன் குழுமத்தின் துணை நிறுவனம்பொதுவுடமை வீழ்ச்சி மற்றும் மென்பட்டுப் புரட்சி ஆகியவை செக்கோஸ்லோவாக்கியாவில் பெரும் மாறுதல்களை உருவாக்கின. பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் தனியார் மயம் என்பதற்கு உள்ளாயின. ஸ்கோடா ஆட்டோமொபைலைப் பொறுத்த வரையில், அரசு வலிமையான ஒரு வெளிநாட்டுக் கூட்டாளியைக் கொணர்ந்தது. 1990ஆம் வருடம் வோக்ஸ்வாகன் தேர்வானது. 1991ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஸ்கோடா வோக்ஸ்வாகன் குழுமத்தின் நான்காவது வர்த்தகக் குறியீடானது. ஃபிரெஞ்சு மகிழுந்து நிறுவனமான ரெனால்ட், வோக்ஸ்வாகனுக்குப் போட்டியாக இருப்பினும், அதன் வினைத்திறத் திட்டம் செக் தொழிற்சாலைகளில் உயர் மதிப்பு மாதிரிகளை உட்கொள்ளாமையினால் தோல்வியுற்றது. ஸ்கோடா தொழிற்சாலைகளில் ரெனால்ட் டுவிங்கோ நகர மகிழுந்து தயாரிக்கும் திட்டத்தை அது முன் வைத்திருந்தது. இதன் மீதான் முடிவு எடுக்கப்படும் வேளையில், ஒரு ஜெர்மானிய நிறுவனத்திற்குத் தனியார் துறையில் தாரைவார்க்கப்படுவது என்பது சர்ச்சைக்குள்ளானது. லடா, ஆட்டோவாஜ் மற்றும், ஒரு காலத்தில் ஸ்கோடா ஆட்டோ வின் தாய் நிறுவனமாக இருந்த, ஸ்கோடா வொர்க்ஸ் போன்ற கிழக்குப் பகுதி ஊர்தி உற்பத்தியாளர்கள் இதைத் தொடர்ந்து பெற்ற நல்வாய்ப்புகள் காரணமாக, இது மோசமான முடிவு அல்ல என்றே கருதப்பட்டது.[சான்று தேவை] வோக்ஸ்வாகன் குழுமத்தின் திறப்பாடு மற்றும் முதலீடு ஆகியவற்றின் துணையுடன் பாணி மற்றும் பொறியியல் ஆகிய இரண்டிலுமே ஸ்கோடாவின் வடிவமைப்பு பெரிதும் மேம்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டின் மாதிரியான ஃபெலிசியா இன்னமும் ஃபேவரிட் மாதிரியின் அடிப்படையிலான கீழ்த்தட்டு கொண்டே இருந்தது. ஆயினும், தர மேம்பாடுகள் உதவின. செக் குடியரசில் இந்த மகிழுந்து பணத்திற்கேற்ற மதிப்பு அளிப்பதாக மிகவும் பிரபலமானது. வோக்ஸ்வாகன் ஏஜி தலைவரான ஃபெர்டினாண்ட் பியச் தனிப்பட்ட முறையில் டிர்க் வான் பிராக்கெல் என்பவரை வடிவமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார். அடுத்து வந்த ஆக்டேவியா மற்றும் ஃபேபியா ஆகியவை மிகுந்த அளவில் எதிர்பார்ப்புகள் உடையதான ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளில் நுழையலாயின. இவை பொதுவான வோக்ஸ்வாகன் குழும கீழ்த்தட்டு முறைமையிலேயே கட்டமைக்கப்படுகின்றன. வோக்ஸ்வாகன் ஏஓ கீழ்த்தட்டின் அடிப்படையில் கட்டமைத்த போலோவிற்கு ஒரு வருடம் முன்னரே ஃபேபியா வெளிவந்திருப்பினும், அண்மைய ஆக்டேவியா கோல்ஃப் எம்கே5 கீழ்த்தட்டு மற்றும் ஃபேபியா ஏஓ கீழ்த்தட்டு அடிப்படையிலும் அமைந்துள்ளன. 1980ஆம் ஆண்டுகளில் ஊர்தி உலகத்தின் "நகைச்சுவைப் பாத்திரம்" என்று வர்ணிக்கப்பட்ட நிலை மாறி, வோக்ஸ்வாகன் குழுமத்தில் இணைந்த பிறகு, ஸ்கோடாவைப் பற்றிய பார்வை மேற்கு ஐரோப்பாவில் முழுமையாக மாறிவிட்டது.[4][5][6] தொழில் நுட்ப மேம்பாடு வளர்ச்சி அடைந்து கவர்ச்சியான புதிய மாதிரிகளும் சந்தைக்கு வந்தாலும், ஸ்கோடாவின் பிம்பம் மெள்ளவே உயர்ந்தது. 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் தொடங்கிய "அது ஒரு ஸ்கோடா, நேர்மையானது " என்னும் விளம்பரம் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்கோடாவின் பிம்பத்தினைப் உயர்த்த பெருமளவில் வழி வகுத்தது. 2003ஆம் ஆண்டு பிரித்தானிய தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் உற்பத்திப் பிரிவில் ஒரு பணியாளர் மகிழுந்தின் மேற்புறத் தட்டுகளின் மீது ஸ்கோடா அணிவில்லைகளைப் பொருத்துகிறார். கவர்ச்சியான சில மகிழுந்துகள் வருகையில் அவர் பின்னால் நகர்ந்து சென்று நிற்கிறார். அவற்றின் மீது அவர் அணிவில்லைகளைப் பொருத்துவதில்லை. காரணம், அவை மிகவும் அழகாக இருப்பதனால் அவை ஸ்கோடாவாக இருக்க முடியாது .[7] ஸ்கோடாவின் பிம்பப் பிரச்சினையை எதிர்கொள்வதற்காகத் துவக்கிய இந்த விளம்பர உத்தி, சந்தைப்படுத்துதல் நிபுணர்கள் மிகவும் ஆபத்தாகக் கருதுவதான 'தலை கீழ் உத்தி' என்பதன் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்த விளம்பரப் பிரசாரம் தோன்றுவதற்கு முன்பாக, பிராட்டிஸ்லாவாவில் சுற்றுலா வழிகாட்டிகள் ஸ்கோடாவைப் பற்றி[சான்று தேவை] இவ்வாறு நகைச்சுவை செய்து வந்தனர்: "ஸ்கோடாவின் மதிப்பை எப்படி இரட்டிப்பாக்குவது? அதன் எரிபொருள் கிடங்கை நிரப்பி விடுங்கள்!" ஃபேபியாவும் ஆக்டேவியாவும் மட்டும் சிறந்த மகிழுந்துகள் என்ற நிலையிலிருந்து சிறிதேனும் குறைந்திருப்பின், இந்தப் பிரசார உத்தி எதிர்மறையான பலனை அளித்திருக்கும். 2005ஆம் வருட வாக்கில் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்கோடா வருடத்திற்கு 30,000 மகிழுந்துகளை விற்கலானது. சந்தையில் இதன் பங்கு ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமானது. தனது ஐக்கிய இராச்சிய வரலாற்றில் முதன் முறையாக, வழங்கீடுகளுக்கான ஒரு காத்திருப்புப் பட்டியலை ஸ்கோடா தயாரித்தது. 2000 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய ஜே.டி.பவர் வாடிக்கையாளர் திருப்தி மதிப்பாய்வில், ஸ்கோடா ஊர்தியின் உரிமையாளர்கள் அதனை மேல் இடத்தில் அல்லது அதற்கு மிக அருகிலேயே தொடர்ந்து வைத்திருந்தனர். As of 2010[update] ஸ்கோடா பல பாக இணைப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் சரஜீவோ போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினா ஆகியவற்றில் உள்ள தொழிற்சாலையும் அடங்கும். ஔரங்காபாத் நகரிலும் ஸ்கோடா ஒரு தொழிற்சாலையினைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மேற்கு மாநிலமான மஹாராஷ்டிராவில் 2001ஆம் ஆண்டு ஸ்கோடா இந்தியா பிரைவேட் லிமிடட் என்னும் பெயரில் நிறுவப்பட்டதாகும். 2006ஆம் ஆண்டு ஸ்கோடா புத்தம் புதிய ரூம்ஸ்டர் மாதிரியை அறிமுகப்படுத்தியது. 2007ஆம் ஆண்டு சிறிய ஃபேபியா அறிமுகமானது. 2008ஆம் ஆண்டின் பிற்பகுதியில், புதிய முன் விளக்குகள், முன் அளியடைப்பு மற்றும் காப்புத் தண்டு ஆகியவற்றுடன் சற்றே புதிய பாணியிலான பின் மற்றும் உட்தோற்றம் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியாவின் முதல் புகைப்படங்களை ஸ்கோடா வெளியிட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த மகிழுந்து 1.4 டிஎஃப்எஸ்ஐ மற்றும் புதிய புதிய பொது இருப்புப்பாதை டீசல் பொறி இயந்திரம் ஆகியவற்றையும் உள்ளிட்ட பொறி இயந்திரங்களின் புதிய தேர்வினை உள்ளடக்கியுள்ளது. 2006ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பாரிஸ் ஊர்தி கண்காட்சியில் ஒரு புதிய கருத்துரு மகிழுந்து அறிமுகமானது. இக்கருத்துருவை ஜாய்ஸ்டர் என அழைத்தனர். முக்கதவு கொண்ட கச்சிதமான இந்த மகிழுந்து, குறிப்பாக, இளைய தலைமுறைக்கெனவே அமைந்திருந்தது. வோக்ஸ்வாகனின் ஆஸ்திரேலிய நிறுவனமான வோக்ஸ்வாகன் குழுமம் ஆஸ்திரேலியா (விஜிஏ) அண்மையில், 1983ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் விற்று வந்த ஸ்கோடாவிற்குத் தாங்கள் திரும்புவதாக அறிவித்தன. ஆஸ்திரேலியாவில், ஆக்டேவியா, ரூம்ஸ்டர் மற்றும் சுபர்ப் ஆகியவை கிடைக்கப் பெறுகின்றன.As of 2010[update] வோக்ஸ்வோகன் போலோ மகிழுந்தின் விலைக்குக் கீழாக வைக்க முடிந்தால் மட்டுமே ஃபேபியோவை ஆஸ்திரேலிய சந்தைக்குக் கொணர இருப்பதாக விஜிஏ அறிவித்துள்ளது. மலிவு விலை கையடக்கமான பிரேசிலிய வோக்ஸ்வாஜென் கோல் என்எஃப் என்பதே ஐரோப்பாவில் ஸ்கோடாவிற்கான புதிய மாதிரியின் அடிப்படையாக இருக்கும் என்று வதந்தி நிலவுகிறது.[சான்று தேவை] விற்பனை வரலாறு
விசையுந்து பந்தயம்![]() ![]() பொறி இயந்திர விளையாட்டின் கீழ் நிலைகளில் முதல் தர வெற்றிகளின் நீண்ட வரலாற்றினைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டின் பருவத்தில் எஃப்ஐஏ என்னும் உலகத் திரளணிப் போட்டியில், ஸ்கோடா ஆக்டேவியா]]வின் உலக திரளணி மகிழுந்து மாதிரிகள் கொண்டு ஸ்கோடா பங்கேற்றது. ஆக்டேவியா டபிள்யூஆர்சியுடனான ஸ்கோடாவின் மிகச் சிறந்த வெற்றி 2001ஆம் ஆண்டு ஆர்மின் ஸ்கோவார்ஜ் சஃபாரி திரளணியில் மூன்றாவது இடத்தைப் பெற்றதாகும். 2003ஆம் ஆண்டின் இடைப்பகுதி துவங்கி, ஆக்டேவியாவின் இடத்தைச் சிறியதான ஸ்கோடா ஃபேபியா பிடித்தது. தனது மகிழுந்தை மேலும் மேம்படுத்த 2004ஆம் ஆண்டின் பருவத்தை ஸ்கோடா பயன்படுத்திக் கொண்டது. ஆனால், இதை அடுத்து வந்த பருவத்தில் அது வெற்றியை ஈட்டவில்லை. இருப்பினும், அந்தப் பருவத்தின் இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா திரளணி போட்டியில், 1995ஆம் ஆண்டின் உலக வாகையன் கோலின் மெக்ரே, தாம் ஓய்வு பெறுவதற்கு முந்தைய நிகழ்வாக, இரண்டாம் இடம் பெற்றார். பின்னர் ஸ்கோடா தொடரிலிருந்து விலகியது. 2006ஆம் வருடப் பருவத்தில் ஓரளவு-தனியார் சார்ந்த ரெட் புல் ஸ்கோடா குழுவின் பிரதிநிதியாகப் பங்கேற்றது. காடலூனா திரளணி போட்டியில் ஜேன் கோபெக்கி ஃபேபியா டபிள்யூஆர்சி ஊர்தியை ஐந்தாம் இடத்திற்கு ஓட்டிச் சென்றார். 2007 ராலே டச்லேண்ட் போட்டியிலும் கூட கோபெக்கேயின் கரங்களில், ஃபேபியா ஐந்தாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. முந்தைய ஃபோர்ட் மற்றும் சிட்ரோயன் ஓட்டுனரான ஃபிராங்கோயிஸ் துவால் என்பவரும் ஒரு ஃபேபியா டபிள்யூஆர்சி ஊர்தியை முதன் முதலாகத் தனியார் பொறி இயந்திரக் குழுவிற்காக ஓட்டினார். காடலூன்யா திரளணிப் போட்டியில் அவர் ஆறாவது இடம் பெற்றார். கண்டங்களுக்கு இடையிலான திரளணிப் போட்டி2008ஆம் ஆண்டு கண்டங்களுக்கு இடையிலான திரளணிப் போட்டியில் ஸ்கோடா தனது ஃபேபியா எஸ்2000 ஊர்தியைப் பயன்படுத்தி கலந்து கொண்டது. இந்தப் பருவம் முடிவடையும் வரையிலும் அவை நல்ல முறையில் செல்லலாயின. பிரேசில் நாட்டில் நிகழ்ந்த போட்டியில் ஸ்கோடா ஐக்கிய இராச்சியக் குழுவிற்காக கை விக்ஸ் இரண்டாம் இடம் பெற்றார். மாதிரிகள்தற்போதைய மாதிரிகள்
கருத்துரு மகிழுந்துகள்![]()
முந்தைய மாதிரிகள்1900ஆம் ஆண்டுகள்
1910ஆம் ஆண்டுகள்
1920ஆம் ஆண்டுகள்
1930ஆம் ஆண்டுகள்
1940ஆம் ஆண்டுகள்
1950ஆம் ஆண்டுகள்
1960ஆம் ஆண்டுகள்
1970ஆம் ஆண்டுகள்
1980ஆம் ஆண்டுகள்
1990ஆம் ஆண்டுகள்
2000 ஆம் ஆண்டுகள்
பிம்பக் காட்சியகம்
உற்பத்தியில் இல்லாதவை
தற்போது உற்பத்தியில் உள்ளவை
நூல் விவரத் தொகுப்பு
குறிப்புதவிகள்
வெளிப்புற இணைப்புகள்அதிகாரபூர்வமான வலைத்தளம்
இணைப்பற்ற வலைத்தளங்கள்
|
Portal di Ensiklopedia Dunia