ஸ்பார்ட்டகஸ் (திரைப்படம்)
ஸ்பார்ட்டகஸ் என்பது 1960 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க வரலாற்று நாடக காவிய திரைப்படமாகும். இதை ஸ்டான்லி குப்ரிக் இயக்கினார். இது ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய 1951 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பார்ட்டகஸ் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதற்கு திரைக்கதையை டால்டன் ட்ரம்போ என்பவர் எழுதினார். பண்டைய காலத்தில் நடைபெற்ற ஒரு அடிமை புரட்சியின் தலைவரான ஸ்பார்ட்டகஸின் வரலாற்று கதை மற்றும் மூன்றாம் செர்வில் யுத்தத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவற்றை தூண்டுகோலாக கொண்டு இந்த திரைப்படம் கதையமைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஸ்பார்ட்டகஸாக கிர்க் டக்ளஸும், ரோமானிய தளபதி மற்றும் அரசியல்வாதி மார்க்கஸ் லிசினியஸ் கிராசஸாக லாரன்ஸ் ஆலிவரும், லெண்டுலஸ் படியாடஸ் என்ற அடிமை வியாபாரியாக துணை நடிகருக்கான அகாதமி விருது பெற்ற பீட்டர் உஸ்டினோவும், ஜூலியஸ் சீசராக ஜான் கேவினும், வரினியாவாக ஜீன் சிம்மன்ஸும் மற்றும் செம்ப்ரோனியஸ் கிராச்சஸாக சார்லஸ் லாட்டனும் மற்றும் அன்டோனினசாக டோனி கர்டிஸும் நடித்திருந்தனர். உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia