ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம்
ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் என்பது தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இதன் பரப்பளவு 1030.85 km² ஆகும். இது தனித்துவமான, அருகிய வன வகைகளைக் கொண்டுள்ள பகுதியாகும்.[2][3] நிலவியல்ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 1030.85 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. ஆந்திர மாநில வனத்துறையால் பாதுகாக்கப்படும் பகுதியாகும்.[2] இது தனித்துவமான மற்றும் அருகிய வன வகைகளைக் கொண்டுள்ளது. வறண்ட பசுமையான காடுகள் இங்குள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயம் மலைப்பாங்கான சரிவுகள், படரும் காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் ஆனது. தாவரங்கள்பசுமைமாறா காடு காணப்படும் இச்சரணாலயத்தில் அகேசியா, கேசியாசு, புங்கை, கரிஸ்ஸா மரங்கள் காணப்படுகின்றன.[சான்று தேவை] விலங்குகள்பெரும் பூனை, புள்ளிமான், நீலான், நாற்கொம்பு மான், தேன் கரடி, குள்ள நரி, காட்டுப்பன்றி, ஏராளமான ஊர்வன மற்றும் பறவை இனங்கள் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகின்றன.[சான்று தேவை] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia