ஸ்ரீ ராமதாஸு (திரைப்படம்)

ஸ்ரீ ராமதாஸு
பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்கோவெலமுடி ராகவேந்திர ராவ்
தயாரிப்புகொண்டா கிருஷ்ணம் ராஜு
கதைஜே. கே. பைரவி
திரைக்கதைகோவெலமுடி ராகவேந்திர ராவ்
இசைமரகதமணி
நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ்
அக்கினேனி நாகார்ஜுனா
ஒளிப்பதிவுஎஸ். கோபால் ரெட்டி
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்ஆதித்யா மூவிஸ்
வெளியீடு30 மார்ச் 2006 (2006-03-30)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு18 கோடி[1]
மொத்த வருவாய்₹14 கோடி[2]

ஸ்ரீ ராமதாசு (Sri Ramadasu) 2006 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இது இசைக்கலைஞரும் துறவியுமான பத்ராச்சல இராமதாசுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 1964-இல் சித்தூர் வி. நாகையாவின் இயக்கத்தில் வெளியான ராமதாசு என்ற பெயரில் வெளியான படத்தின் மறு பதிப்பாகும். இந்தப் படத்தை கோவெலமுடி ராகவேந்திர ராவ் எழுதி இயக்கியிருந்தார். கோண்டா கிருஷ்ணம் ராஜு தயாரித்த இப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அக்கினேனி நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தன. படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை எஸ். கோபால் ரெட்டியும் படத்தொகுப்பை ஏ. ஸ்ரீகர் பிரசாத்தும் கையாண்டுள்ளனர்.

தயாரிப்பு

நடிகர் நாகார்ஜுனா ஆதித்யா மூவிஸ் பதாகையின் கீழ் கொண்டா கிருஷ்ணம் ராஜு தயாரிப்பில் கே. ராகவேந்திர ராவ் இயக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜோதிகா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார., ஆனால் அவரது திருமண ஏற்பாடுகள் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.[3] பின்னர் அவருக்குப் பதிலாக சினேகா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இசையமைப்பு

படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வெட்டூரி, சந்திரபோஸ், சுத்தலா அசோக் தேஜா, ஸ்ரீ வேதவியாசா, ஜே.கே.பாரவி மற்றும் சிவசக்தி தத்தா எழுதியுள்ளனர், பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, சங்கர் மகாதேவன், மரகதமணி, விஜய் யேசுதாஸ், தேவி ஸ்ரீ பிரசாத், எஸ். பி. பி. சரண், மது பாலகிருஷ்ணன், ஹரிஹரன், சுனிதா, பிரணவி மற்றும் மாளவிகா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். ஆதித்யா மியூசிக் நிறுவனம் இசையை வெளிட்டது.

மேற்கோள்கள்

  1. "Friday Review Hyderabad : A few hits and many flops". தி இந்து. 2006-12-29. Archived from the original on 3 November 2013. Retrieved 2012-08-04.
  2. "Tollywood Top 10 Box Office Collection Movies In 2006". T2BLive (in ஆங்கிலம்). 19 February 2019. Retrieved 12 May 2025.
  3. "Telugu Movies". Archived from the original on 7 April 2020. Retrieved 30 May 2017.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya