ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hamad International Airport) கத்தாரில் உள்ள ஒரே பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். கத்தாரின் தேசிய விமானசேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸின் தாயகம் ஆகும். அதன் தலைநகரான தோஹாவின் தெற்கே இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. விமான சேவை துவக்கம்இவ்விமான நிலையம் துவங்குவதற்கு முன் தோஹா சர்வதேச விமான நிலையம் கத்தாரின் முதன்மை விமான நிலையமாக இருந்தது. முன்னர் நியூ தோஹா சர்வதேச விமான நிலையம் (NDIA) என அறியப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதலில் 2008 இல் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான தாமதங்களுக்குப் பிறகு, இறுதியாக 30 ஏப்ரல் 2014 அன்று சம்பிரதாயமான கத்தார் ஏர்வேஸ் விமானம் அருகிலுள்ள தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்து தரையிறங்கியது. பெயர் சூட்டல்கத்தார் ஏர்வேஸ் மற்றும் அனைத்து பிற விமான நிறுவனங்களும் 27 மே 2014 அன்று புதிய விமான நிலையத்திற்கு முறையாக இடம் பெயர்ந்தன. இந்த விமான நிலையத்திற்கு கத்தாரின் முந்தைய அமீரான ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் பெயர் சூட்டப்பட்டது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia