ஹம்பி விரைவு வண்டி

ஹம்பி விரைவு வண்டி (Hampi Express) பெங்களூரு சந்திப்பிற்கும், ஹூப்லி சந்திப்பிற்கும் இடையே ஓடும் இந்திய தென் மேற்கு இரயில்வேயின் விரைவு வண்டியாகும். 16591/16592 எண்கள் கொண்ட இவ்வண்டியின் முக்கிய பராம்பரிப்பு நிலையம் ஹூப்லியாகும். தென் மேற்கு இரயில்வே மண்டலம் மற்றும் தென் மத்திய இரயில்வே மண்டலம் என கர்நாடகம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் தினந்தோறும் பயணம் செய்கிறது. விஜயநகர பேரரசின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பி நகரின் பெயரே இவ்வண்டிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பயணம்

16591 எண் கொண்ட வண்டி ஹூப்லியிலிருந்து பெங்களூருவுக்கும், 16592 எண் கொண்ட வண்டி பெங்களூரிலிருந்து, ஹூப்லிக்கும் தினமும் ஒடுகிறது. ஹூப்லி, கடக், ஹொஸ்பேட், பெல்லாரி, குண்டக்கல், தர்மாவரம், பேணுகுண்டா, யெலஹங்கா ஆகியவை முக்கிய சந்திப்புகளாகும்

விபத்து

22 மே 2012 அன்று 16591 எண் கொண்ட ஹம்பி விரைவு வண்டி ஹூப்லியிருந்து வந்துகொண்டிருந்தபோது பேணுகுண்டா அருகே நின்றுகொண்டிருந்த ஒரு சரக்குவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 74 மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. "ஹம்பி எக்ஸ்பிரஸ்". Retrieved 2012-05-23.

வெளியிணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya