ஹல்டிகாட் போர்
ஹல்டிகாட் போர் (Battle of Haldighati) 18/21 சூன் 1576 அன்று மேவார் இராசபுத்திர குல மன்னர் மகாராணா பிரதாப்பின் படைகளுக்கும், மான் சிங் தலைமையிலான அக்பரின் முகலாயப் படைகளுக்கும் இடையே ஹல்டிகாட் எனுமிடத்தில் நடந்த போர் நான்கு மணி நேரம் மட்டும் நீடித்தது. [3] இப்போர் எவ்வணிக்கும் வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்றது. போரின் போது மகாராணா பிரதாப்பின் சேத்தக் போர்க் குதிரை மடிந்தது. மகாரானா பிரதாப்பின் படைகள்மகாராணா பிரதாப் படையின் தலைமைப் படைத்தலைவராக செயல்பட்ட குவாலியரின் ராம் சிங் தன்வர் தனது அனைத்து மகன்களுடனும்[4] கலந்து கொண்டனர். மேலும் ஆப்கான் படைவீரர்களுக்கு ஹக்கீம் கான் சூர் தலைமை தாங்கினார். 400 முதல் 500 எண்ணிக்கையில் பில் வீரர்கள் ராவ் பூஞ்சா தலைமையில் போரில் கலந்து கொண்டனர். போரின் முடிவுமுகலாயப் பேரரசுக்கு அடங்காத மேவார் நாட்டு மன்னர் மகாராணா பிரதாப்பை கைது செய்து தில்லிக்கு அழைத்து செல்லும் அக்பரின் கனவு நிறைவேறவில்லை. ஹல்டிகாட் போரில் பின் வாங்கிய மகாராணா பிரதாப், மேலும் சில படைகளைத் திரட்டிக் கொண்டு திவார் எனுமிடத்தில், 18 சூன் 1576-இல் அக்பரின் முகலாயப் படைகளை துரத்தி அடித்தார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia