ஹுபல்
ஹுபல் (அரபு: هُبَل), இசுலாத்துக்கு முந்திய அரேபியாவின் ஒரு ஆண் கடவுளாகக் கருதப்படுகிறார். இக்கடவுள் குறி கூறுதல், மழை மற்றும் போருக்கானது. இக்கடவுளின் கை தங்க நிறத்தாலும்[2][3] , கையில் உள்ள அம்புகளாலும் அறியப்படுகிறது. இக்கடவுளின் துணைவி மனாத் பெண் கடவுள் ஆகும். அமீர் இப்னு லுகாய் எனும் அரேபிய வணிகர் இக்கடவுள் சிலையை மெசொப்பொத்தேமியா பகுதியிலிருந்து அரேபியாவின் மக்கா நகரத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அரபுப் பழங்குடி குறைசி மக்கள் ஹுபல் கடவுளை தலைமைக் கடவுளாக வழிபட்டனர்.[4] ஹுபல் கடவுள் வழிபாட்டாளர்களான குறைசி மக்கள் கிபி 624ல் முகமது நபியின் படைகளுக்கு எதிராகப் பத்ருப் போரிட்டனர்.[5] கிபி 630ல் குறைசிகளை வெற்றி கொண்ட முகமது நபி மக்காவில் நுழைந்து, கஃபாவில் இருந்த கடவுள் ஹுபல் சிலையையும், மனாத், அல்-லாத், அல்-உஸ்ஸா உள்ளிட்ட, ஆண்டின் 360 நாட்களைக் குறிக்கும்[2]360 சிலைகளையும் உடைத்து அழித்தார்..[6] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia