ஹோம்ஸ் ஆளுநரகம்
ஹோம்ஸ் கவர்னரேட் (Homs Governorate, அரபி: مُحافظة حمص ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது மத்திய சிரியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 40,940 km2 (15,807 sq mi) [1] முதல் 42,223 km2 (16,302 sq mi) [2] வரை என பல்வேறு தரவுகளில் வேறுபடுகிறது. இது புவியியல் ரீதியாக சிரியாவின் மிகப்பெரிய ஆளுநரகமாகும். ஹோம்ஸ் கவர்னரேட்டின் மக்கள் தொகை 1,763,000 (2010 மதிப்பீடு) ஆகும். ஹோம்ஸ் ஆளுநரகம் 6 நிர்வாக மாவட்டங்களாக ( மந்திகா ) பிரிக்கப்பட்டுள்ளது. ஹோம்ஸ் நகரம் ஒரு தனி மாவட்டமாக உள்ளது. ஹோம்ஸ் மாவட்டத்தின் தலைநகரம் ஹோம்ஸ் ஆகும். இதன் ஆளுநர் தலால் அல் பராஸி என்பவராவார். [3] உதுமானிய சிரியாவின் ஒரு பகுதியாக ஹோம்ஸ் ஆளுநரகம் இருந்தது. இது ஹோம்ஸின் சஞ்சாக் என்றும் அழைக்கப்பட்டது. மாவட்டங்கள்![]() ஆளுநரகம் பத்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 25 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:
* - 2010 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், முன்பு ஹோம்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது மக்கள் வகைப்பாடுஅல்-முகர்ரம் மாவட்டத்தில் பெரும்பாலும் அலவைட்டுகள் வசிக்கின்றனர். தால்டோ, டக்கலாக், ஹோம்ஸ் மற்றும் அல்-குசெய்ர் மாவட்டங்களில் அலவைட், சுன்னி முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்கள் போன்றோர் கலந்து வாழ்கின்றனர். அல்-குசெய்ர் மாவட்டத்தில் ஏராளமான ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia