ஹௌ ஐ மெட் யுவர் மதர்
ஹௌ ஐ மெட் யுவர் மதர் (How I Met Your Mother - நான் எப்படி உன் அம்மாவை சந்தித்தேன்) என்பது ஒரு எம்மி விருது வென்ற அமெரிக்க சிட்காம் (சூழல் நகைச்சுவை) (situation comedy) நிகழ்ச்சியாகும், அந்நிகழ்ச்சியின் முதல் காட்சி சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சியில் செப்டம்பர் 19, 2005 முதல் ஒளிபரப்பானது. இந்த தொடர்காட்சியை கிரேக் தாமஸ் மற்றும் கார்ட்டர் பேய்ஸ் இருவரும் சேர்ந்து உருவாக்கினர். ஒரு படத்தை மாட்டும் சட்டக்கருவியாக, அதன் முக்கிய பாத்திரமான, டெட் மொஸ்பி (ஜோஷ் ரட்னோர்), 2030 ஆம் ஆண்டில் தனது மகன் மற்றும் மகளிடம் அவர்களுடைய அம்மாவை அவர் சந்திப்பதற்கு காரணமாக இருந்த நிகழ்வுகளைப் பற்றி திரும்பவும் நினைவு கூருகிறார், அதனால் இந்த தலைப்பு மற்றும் இக்கதையில் கடந்த கால நிகழ்வு குறித்த விரித்துரைப்பு. ஹௌ ஐ மெட் யுவர் மதர் (How I Met Your Mother) என்ற படத்தின் இதர முக்கிய பாத்திரங்கள் மார்ஷல் எரிக்சென் (ஜாசன் செகெல்), ராபின்ஸ் செர்பட்ஸ்கி (கோபி ஸ்மல்டர்ஸ்), பார்னி ஸ்டின்சன் (நீல் பாட்ரிக் ஹாரிஸ்), மற்றும் லில்லி அல்ட்ரின் (அலிசன் ஹன்னிகன்). தயாரிப்பு"நாம் நம் நண்பர்களைப்பற்றியும் நியூயார்க் நகரத்தில் நாம் செய்த முட்டாள் தனத்தைப்பற்றியும் கூறுவோம்," [2] என்ற அவர்களுடைய யோசனை ஹௌ ஐ மெட் யுவர் மதர் (How I Met Your Mother) என்ற பேய்ஸ் மற்றும் தாமஸ்ஸின் நிகழ்ச்சிக்கு உந்துகோலாக அமைந்தது. இருவரும் அவர்களுடைய நட்பை உவமையாக வைத்து பாத்திரங்களை உருவாக்கினர், அதில் டெட் லேசாக பேய்ஸ் சாயலிலும், மார்ஷல் மற்றும் லில்லி லேசாக தாமஸ் மற்றும் அவரது மனைவின் சாயலிலும் சித்தரித்தனர்.[1] இத்தொடர்நிகழ்ச்சியை 20யத் செஞ்சுரி போக்ஸ் (20th Century Fox Television) டெலிவிசன் நிறுவனம் தயாரித்தது. முதல் சீசனில் (ஓராண்டுகாலம்) இதன் தொடர்நிகழ்வுகள் (Episodes) துவக்கத்தில் பெயர்களைக்கொண்டு பொதுவாக தொடங்கியது. இரண்டாவது சீசனில் இருந்து காட்சிகள் ஒரு குளிர்ந்த துவக்கத்துடன் வருகின்றன. அப்போது பார்வையாளர்கள் சில நேரங்களில் டெட்டின் குழந்தைகள் ஒரு படுக்கையில் படுத்துக்கொண்டும், மற்றும் அவர் அவருடைய குழந்தைகளுடன் பேசுவதையும் கேட்கலாம், அவர்களிடம் அவர் எப்படி அவர்களுடைய அம்மாவை சந்தித்தார் என்ற கதையை கூறிவருவார். ஒன்று அடுத்து ஒன்றாக, அதற்கு முன் நடந்த காட்சிகளில் இருந்தோ அல்லது நியூயார்க் நகரத்தின் சில படங்களையோ திரையிடுகையில், டெட் மேலேயிருந்து கதை சொல்லிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். தாமஸ் மிகவும் வெளிப்படையாக இனிவரும் காலங்களில் டெட் ஒரு நம்பமுடியாத கதை சொல்பவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.[2] தலைப்புக்கான பாடல் "ஹே பியூட்டிபுல்" என்ற தி சோலிட்ஸ் என்பவர்களுடைய குழுவின் பாடலின் ஒரு பாகமாகும், பேய்ஸ் மற்றும் தாமஸ் அதன் அங்கத்தினர்கள் ஆகும். "மக்லறேன்ஸ்" என்ற பெயர் கொண்ட அருந்தகத்தில், தொடரின் சில காட்சிகள் படமாக்கினார்கள், அவை நியூயார்க் நகரத்தில் உள்ள மக்கீஸ் அருந்தகத்தை அடிப்படையாக கொண்டதாகும்.[3] அந்த இடம் அழகான கலைப்பணிகள் கொண்டதாக விளங்கியதால் கார்ட்டர் பேய்ஸ் மற்றும் கிரேக் தாமஸ் இருவருக்கும் அது மிகவும் பிடித்துப் போனது, அதனை தமது நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள நினைத்தனர்.[4] அதன் பெயர் கார்ட்டர் பேய்ஸ் அவர்களுடைய உதவியாளர் கார்ல் மக்லறேன் என்ற பெயரைத் தழுவியதாகும், இந்த நிகழ்ச்சியில் அருந்தகத்தின் உதவியாளரின் பெயரும் கார்ல் ஆகும்.[5] இரண்டாவது சீசனின் துவக்கத்தில், டெட்டின் வருங்கால குழைந்தைகள் சார்ந்த மற்றும் நேராக அம்மாவை அடையாளம் காட்டும் ஒரு காட்சி, இந்த படப்பிடிப்பின் இறுதித்தொடருக்காக படமாக்கினார்கள்.[6] 2007-2008 ஆண்டு நடந்த ரைடேர்ஸ் கில்ட் ஒப் அமெரிக்காவின் பணிமுடக்கத்தின் போது, ஹௌ ஐ மெட் யுவர் மதர் படத்தயாரிப்பும் முடங்கியது, ஆனால் பணிமுடக்கம் முடிவுக்கு வந்தவுடன் இத்தொடர் காட்சி மார்ச் 17, 2008, முதல் மற்றும் 9 புதிய தொடர்நிகழ்ச்சிகளுடன் மீண்டும் தொடங்கியது.[7] நிகழ்ச்சி நிரலின் ஒளிபரப்பாகும் நேரமும் மாறுதல் அடைந்தது, அதாவது 8:30 ET/7:30 CT, அதாவது கோடைக்காலத்தில் தி பிக் பேங் தியரி என்ற படத்திற்கான நிகழ்ச்சி நிரலை கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் நிகழ்ந்தது.[8] மே 14, 2008, அன்று [9] சிபிஎஸ் (CBS) நிறுவனம் நான்காவது சீசனுக்கான இந்த தொடர்காட்சியை புதுப்பித்தது, மற்றும் அந்நிகழ்ச்சி முதல் முறையாக செப்டம்பர் 22, 2008 அன்று ஒளிபரப்பானது.[10] செப்டம்பர் 2008 ஆம் ஆண்டில், ஹௌ ஐ மெட் யுவர் மதர் மறுமுறை ஒலிபரப்பு செய்வதற்கான உரிமைகளை, லைப்டைம் டெலிவிசன் (Lifetime Television) என்ற நிறுவனம், ஒவ்வொரு உட்கதை நிகழ்விற்கும் $725,000 என்ற கணக்கில் விலைகொடுத்து வாங்குவதாக தெரிவித்தது.[11] இந்த ஆட்சிக்குழு ஒப்பந்தத்தின்படி, நான்கு வருடத்திற்கான ஒப்பந்தத்திற்காக ஒளிப்பட நிலையம் 110 அரை-மணி நேர உட்கதை நிகழ்வுகளை தயாரித்து 2010 ஆண்டிற்குள் அளிக்கவேண்டும். நான்காவது சீசனின் முடிவில் இது வரை 88 உட்கதை நிகழ்வுகளே தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால், ஒப்பந்தத்தின்படி, ஒளிப்பட நிலையம் மேலும் 22 உட்கதை நிகழ்வுகளை தயாரித்துக்கொடுக்க வேண்டும், அப்போது தான் ஐந்தாவது ஓராண்டுகாலத்திற்கான பணிகளை உறுதிசெய்ய இயலும்.[12] மே 19, 2009 அன்று, ஐந்தாவது சீசனுக்கு ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டது.[13] நவம்பர் 26, 2008 அன்று, டிவி கைடு ( TV Guide) கோபி ஸ்முல்டேர்ஸ் (Cobie Smulders) (ராபின்(Robin)) மற்றும் போய்-பிரண்ட் (நண்பன்) தரண் கில்லம் (Taran Killam) அவர்களுடைய முதல் குழந்தையை 2009 இளவேனிற் பருவத்தில் எதிர்பார்ப்பதாக அறிவித்தது.[14] ஸ்முல்டேர்ஸ் (Smulders) அவர்களின் அறிவிப்பு அவரது சகநடிகையான ஏய்சன் ஹன்னிகன் (Alyson Hannigan) என்பவர் தான் கருவுற்று இருப்பதைப்பற்றி தெரிவித்த ஒரு மாதத்திற்கு பிறகே வெளிவந்தது.[15][16] மே 20, 2009 அன்று, சிபிஎஸ் (CBS) நிறுவனம் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொடர் மீண்டும் இரவு 8 மணி முதல் (8pm) ஒளிபரப்பாகும் என்றும், அது ஆக்ஸிடென்டல்லி ஓன் பர்பஸ் (Accidentally on Purpose) என்ற நகைச்சுவை காட்சிக்கு வழிவகுக்கும் என்றும் அறிவித்தது. நடிகர்கள்முக்கிய பாத்திரங்கள்
வழக்கமாகத் தோன்றும் கதாப்பாத்திரங்கள்
லின்ட்சி போன்செகா மற்றும் டேவிட் ஹென்றி ஆகியோர் துவக்க காட்சியில் இருந்து வந்து கொண்டிருந்தாலும், நாம் எங்கே இருந்தோம்? (Where Were We?) படப்பிடிப்புக்குப்பிறகு அவர்களுடன் கூடிய படம் எடுக்கப்படவில்லை. ஆவணக்கிடங்கின் அடியளவுகளை பயன்படுத்துகையில் அவர்களுடைய பெயர்களும் அதில் வரவுசெய்யப்படுகின்றன. ஜோஸ் வீடொன் (Joss Whedon) அவர்களுடைய திட்டத்தை சார்ந்த பல நடிகர்கள் இப்படத்தில் காட்சி தந்துள்ளார்கள், எடுத்துக்காட்டாக தொடரில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அலிசன் ஹன்னிகன் மற்றும் நீல் பாட்ரிக் ஹாரிஸ், மேலும் அமி அக்கர், டோம் லென்க், ஹாரி க்ரோயெனர், மொரீனா பாக்கரின், மற்றும் அலெக்ஸிஸ் டேனிசொப் (ஹன்னிகன் அவர்களுடைய கணவர்). டேனிசொப் அல்லாமல், ஸ்முல்டேர்ஸ் அவர்களுடைய மணவாளன் தரன் கில்லம் மற்றும் ஹாரிஸ் அவர்களுடைய பங்காளர் டேவிட் பர்த்கா ஆகியோரும் படத்தில் வருகின்றனர் (மூவரும் மூன்று தொடர்நிகழ்வுகளில் காட்சியளிக்கின்றனர்). மேலும், ஜாசன் செகெல்லின் அறிமுக தொடரான பிரீக்ஸ் அண்ட் ஜீக்ஸ் ஸில் நடித்தவர்களும் இத்தொடரில் காட்சியளித்துள்ளனர், எடுத்துக்காட்டாக ஸாம் லெவின் , மார்டின் ஸ்டார், மற்றும் பிஸி பிலிப்ஸ். சீசன் சுருக்கங்கள்சீசன் ஒன்று2030ம் ஆண்டில் டெட் மோஸ்பி (குரல் கொடுத்தவர் பாப் ஸகெட்) தனது மகளையும் மகனையும் அமர வைத்து அவர்களது அம்மாவை தான் எப்படி சந்தித்தோம் என்ற கதையை கூறுகிறான். கதை 2005ம் ஆண்டில் துவங்குகிறது. டெட் (ஜோஷ் ராட்னர்) ஒரு 27 வயது திருமணமாகாத கட்டிட கலைஞன்; தனது நெருங்கிய கல்லூரித் தோழர்களான சட்டக் கல்லூரி மாணவன் மார்ஷல் எரிக்ஸன் (ஜேஸன் ஸெகெல்) மற்றும் பள்ளிக்கூட ஆசிரியை லில்லி ஆல்ட்ரின் (அலிஸன் ஹன்னிகன்) உடன் நியூ யார்க் நகரத்தில் வசித்து வருகிறான். லில்லியும் மார்ஷல்லும் ஒன்பது ஆண்டுகளாக காதலிக்கின்றனர். மார்ஷல் லில்லியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறான். அவர்களது நிச்சயம் டெட்டையும் தனக்கு ஒரு வாழ்கைத் துணையைத் தேடிக்கொள்ள ஊக்குவிக்கிறது - அவனது சிறந்த நண்பன் என்று சொல்லிக்கொள்ளும், நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரு கழிவறையில் சந்தித்த பார்னி ஸ்டின்ஸன் (நீல் பாட்ரிக் ஹாரிஸ்) எரிச்சலைக் கிளப்பிவிட. பார்னி ஒரு பெண்கள் பித்தன். ஏரளாமான ஏமாத்து வேலைகள் செய்து - மாறு வேடங்கள், மாற்று அடையாளங்கள் உட்பட - பெண்களை அனுபவித்து உடனே அவர்களைக் கழட்டிவிடுவான். இந்த தேடலில் டெட் கனடாவிலிருந்து வந்த உயர்ந்த இலக்குகள் கொண்ட நிருபரான ராபின் ஷெர்பாட்ஸ்கியை (கோபி ஸ்மல்டர்ஸ்) சந்திக்கிறான்; உடனே காதல் கொள்கிறான். ஆனால் ராபின் இவ்வளவு வேகமாக உறவு கொள்ள விரும்பாது, இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். வருங்கால டெட் ராபின்னை அத்தை என்று அழைப்பதன்மூலம் அவள் அம்மா இல்லை என்று தெரியப் படுத்துகிறான். டெட், விக்டோரியா (ஆஷ்லீ வில்லியம்ஸ்) என்னும் அடுமனை உரிமையாளரை ஒரு திருமணத்தில் சந்திக்க, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். இதனைக் கண்டு ராபின் பொறாமைக் கொள்கிறாள்; டெட் மீது தமக்கும் காதல் உள்ளது என்று அறிகிறாள். விக்டோரியாவுக்கு ஜெர்மனியில் சமையல் கலை படிக்க வாய்ப்பு வருகிறது; ஜெர்மனிக்கு செல்கிறாள்; டெட்டுடன் தொலைதொடர்பு உறவு வைத்துக்கொள்ள முயல்கிறாள். ராபின்னி�ன் உணர்ச்சிகளைப் பற்றி டெட் அறிய, விக்டோரியாவிடமிருந்து பிரிந்ததாக ராபின்னிடம் பொய் சொல்கிறான்; இருவரும் உடலுறவு கொள்ள தொடங்குகின்றனர். ஆனால் விக்டோரியா டெட்டை அலைபேசியில் அழைக்கும்பொழுது தவறாக ராபின் எடுக்கிறாள், உண்மை அறிகிறாள். டெட்டும் விக்டோரியாவும் பிரிகிறார்கள். கோபம் கொண்ட ராபின் சில நாட்களாக டெட்டிடம் விலகுகிறாள். ஆனால் சில நாட்கள் கழித்து சமரசம் செய்கின்றனர், காதலர்களாக இணைகின்றனர். இதற்கிடையில் லில்லி மார்ஷல்லுடன் கொண்ட உறவினால் வாய்ப்புகள் ஏதாவது தவரிவிட்டாளோ என்று நினைக்கத் தொடங்குகிறாள். மார்ஷல்லுடன் உறவை துண்டித்துக்கொண்டு கவின் கலை படிப்பு படிக்க ஸான் ஃ பிரான்ஸேஸ்கோ நகரத்துக்கு செல்கிறாள். டெட் ராபின்னுடன் இரவைக்கழிதுவிட்டு மறுநாள் அவனது குடியிருப்புக்குத் திரும்ப, மார்ஷல் மனமுடைந்து லில்லியின் நிச்சயதார்த்த மோதிரத்தை கையில் வைத்தபடி மழையில் அமர்ந்திருப்பதைக் காண்பதாக இப்பருவம் முடிகிறது. சீசன் இரண்டுடெட் மற்றும் ராபின் கடைசியாக தம்பதிகள் ஆகிவிட்டனர். ஒரு இதயம் உடைந்த மார்ஷல் இப்போது லில்லி இல்லாத ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும், மேலும் அவன் மனதில்லாமல் இதர மக்களுடன் டேடிங் செல்ல (சந்திக்க) தொடங்குகிறான். தான் ஒரு படைப்பாளி அல்ல என்பதை உணர்ந்துகொண்ட லில்லி, நியூயார்க் கிற்கு திரும்பிவருகிறார். அவள் மீண்டும் மார்ஷல்லுடன் இணைகிறாள், மற்றும் அவர்களுடைய திருமணத்துடன் சீசன் முடிவடைகிறது. பார்னி "கன்னத்தில் அறைவிடும் ஒரு பந்தயத்தில்" தோற்றுப்போனதால், அதன்படி மார்ஷல் அவள் கன்னத்தில் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும், அவர் நினைக்கும் போது, ஐந்து முறை அறையலாம், இந்த சீசன் நடக்கும் போது அதை இருமுறை அறைந்து பயன்படுத்தி விட்டார். பார்னிக்கு ஒரு ஓரினச்சேர்க்கைக்குரிய, கருப்பு சகோதரன் இருப்பது தெரியவருகிறது.(வேய்ன் ப்ராடி). மேலும், பார்னி கலிபோர்னியாவில் இந்த விலை சரியானதே என்ற ஒரு போட்டியில் கலந்துகொள்ள செல்கிறார், ஒரு பங்காக, ஏன் என்றால் போப் பார்கர் என்பவர் அவருடைய தந்தை என அவர் நம்புவதால், ஆனால் அதை அவர் வெளிப்படுத்துவதில்லை. கடைசியாக அவர்கள் ராபின் ஒரு கனடிய நாட்டு இளவயது போப் ஸ்டார் ஆக முந்தைய 90 களில் இருந்ததை கண்டுபிடித்து விடுகிறார்கள், மேலும் குறிப்பாக, "லெட்ஸ் கோ டு தி மால்" என்ற பாடலை பாடியவர் என்பதை அறிந்து கொள்கிறார்கள். இந்த இசை வீடியோ நிகழ்ச்சியை பார்னி பல நூறு முறைகள் பார்த்து ரசித்தார் மேலும், நிகழ்வுகளின் போது, ஒரு பொதுவான கேலிக்கூத்தாக மாறிவிடுவது வாடிக்கையாகி விட்டது. சீசனுடைய முடிவில், தொடர்ந்து பல பழம்நினைவுகள் மூலமாக, டெட் மற்றும் ராபினிடமிருந்து, மார்ஷல் மற்றும் லில்லியின் திருமணத்திற்கு முன்னதாகவே, கொஞ்ச நேரத்திற்கு பிரிந்து இருந்ததை, பார்னி தெரிந்துகொள்கிறார். இதைப்பற்றி அவர்கள் இதற்கு முன் யாரிடமும் கூறவில்லை, ஏன் என்றால் மார்ஷல் மற்றும் லில்லியிடம் அவர்கள் கொண்டிருந்த அன்புடன் கூடிய கவனத்தை அவர்களிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை. டெட் மணந்து கொள்ள விரும்பினாலும் ராபின் அதை ஏற்காததால், டெட் மற்றும் ராபின் நண்பர்களாக இருக்க ஒப்புக்கொள்கின்றனர். இப்படியாக மீண்டும் டெட்டும் பார்னியும் நகரத்தில் தொடர்ந்து ஒற்றையர்களாக வளையவருவார்கள் என்ற குதூகலத்தில் பார்னி திளைக்க சீசன் இவ்வாறு முடிவடைகிறது. சீசன் மூன்றுராபின் அர்ஜென்டினாவுக்கு சென்று திரும்பி வருகிறார் மற்றும் டெட் அவளுடன் வாழ்க்கையில் வெறும் நண்பனாக மட்டும் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். மார்ஷல் மற்றும் லில்லி அவர்களாகவே அந்த இடத்தை விட்டு வெளியேற முடிவு செய்கின்றனர், அவர்களுக்கு அந்த இடம் பிடித்திருந்தாலும் அவர்களால் அந்த இடத்திற்கான செலவுகளுக்கு ஈடு கொடுக்க இயலவில்லை. லில்லி கண்ணை மூடிக்கொண்டு பொருட்களை வாங்குவதால், அவளுடைய கடன் பெறுவதற்கான வரையளவு குறைந்திருப்பதை மார்ஷல் அறிந்துகொள்கிறார். இப்படியெல்லாம் இருந்தும்கூட, அவர்கள் கனவில் கண்டுவந்த குடியிருப்பு ஒன்றில் குடிபுகுவதில் அவர்கள் வெற்றி கண்டனர், ஆனால் அது அமைந்த இடத்தின் சூழல் சரிப்பட்டு வரவில்லை மேலும் அந்த குடியிருப்பு மோசமான நிலையில் இருந்தது. நன்றி தெரிவித்தல் நாள் அன்று பார்னிக்கு மூன்றாம் முறையாக கன்னத்தில் அறை விழுகிறது, அதனை மார்ஷல் "அறைகள் வழங்கும்" நாளாக மாற்றி விடுகிறார். டெட் "அவர்களுடைய அம்மாவை" பார்த்த விதம் அவள் ஒரு மஞ்சள் நிறக்குடையுடன் அமைந்த ஒரு நேரத்தில் என்று தெரியவருகிறது, அந்தக் குடையை அவர் ஒரு மன்றத்தில் கண்டெடுக்கிறார் மேலும் அதை "நாளை இல்லை" என்று சமாதானம் செய்துகொண்டு வீட்டிற்கு எடுத்து செல்கிறார். டெட் ஸ்டெல்லா (சாராஹ் சல்கே) என்ற ஒரு தோல் மருத்துவரை தன் வசம் கவர்ந்திழுக்கப்பார்க்கிறார், அவர் உடம்பில் அசிங்கமாக பச்சை குத்தியிருந்ததை நீக்குவதற்காக அவர் அவரிடம் சென்றார். இந்த நிகழ்வு ஒரு மறக்க இயலாத "இரு-நிமிட சந்திப்பாக" திகழ்கிறது, அவற்றில் சிறு கிசு கிசு, இரவு உணவு, ஒரு படம், காப்பி, இரு வாடகை கார் பயணங்கள், மற்றும் ஒரு நல்ல நல்லிரவு முத்தம் ஆகியவை அடங்குகிறது, மேலும் இவை அனைத்தும் இவ்விரு நிமிடங்களில் முடிவுறுகிறது. அதற்குள், ஒரு ஊர் பெயர் தெரியாத ஒரு பெண் பார்னியுடைய தொடர்பு வைத்துக்கொள்ளும் முயற்சிகளை முறியடித்துவிடுகிறாள். ராபின் மற்றும் பார்னி ஒரு தகராறுக்குப்பிறகு பிரிய முற்படுகிறார்கள் ஆனால் பார்னி அவளை சமாதானப்படுத்துகிறார் மேலும் இரவு இருவரும் சேர்ந்து கழிக்கின்றனர், இந்நிகழ்ச்சியை டெட் ஏற்க மறுக்கிறார், ஏன் என்றால் அவர்கள் இடையே நிலவிய "ப்ரோ கோடு" (சகோதரர்களுக்கிடையே ஆன உடன்பாடு) மீறப்பட்டதால். இதன் விளைவாக டெட் பார்னியுடன் கூடிய நட்பை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுக்கிறார். பார்னியுடன் நாச வேலை செய்தது அப்பியாகும் என தெரிய வருகிறது, (பிரிட்னி ஸ்பியர்ஸ் ), அவர் ஸ்டெல்லாவின் வரவேற்பாளர், அவர்கள் இருவரும் உறவு கொண்ட பிறகு அவர் அவளை அழைக்காததால் அவள் அவரிடம் தனது பழியை இவ்வாறு தீர்த்துக்கொள்கிறார். கடைசி தொடர் நிகழ்வில், "மிரகிள்ஸ்", டெட் மற்றும் பார்னி இருவரும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர் மற்றும் தமது நட்பை புதுப்பித்துக்கொள்கின்றனர். (டெட் ஒரு வாடகைக்கார் விபத்தில் மாட்டிக்கொண்டு, ஒரு கீறல் கூட உடம்பில் படாமல் தப்பித்துக் கொள்கிறார். பார்னி டெட் சரியாக இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக விரையும் போது அவர்மீது ஒரு பேருந்து ஏறிவிடுகிறது). இத்தொடர் நிகழ்வின் முடிவில், டெட் தன்னை மணக்கும் படி ஸ்டெல்லாவிடம் கேட்டுக்கொள்கிறார்.[17] "டென் செசன்ஸ்" என்ற தொடர்நிகழ்வில், ஸ்டெல்லா செயின்ட் பாட்ரிக்ஸ் டே அன்று விருந்தில் கலந்துகொண்டு பின்னர் திரும்பிவந்ததாகவும், மேலும் அதே நிகழ்ச்சியில் டெட்டும் கலந்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிய வருகிறது. டெட் அவருடைய குழந்தைகளிடம் அவர்களுடைய வருங்கால அம்மா அந்த விருந்தில் கலந்து கொண்டாள் என்றும், ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.[18] பார்னிக்கு ரோபினிடம் அளவில்லா உணர்ச்சிகள் இருந்ததாகவும் உட்கிடையாகிறது. " தி கோட்" என்ற தொடர்நிகழ்வில், அதற்கு பின் வந்த வருடத்தில், (அதாவது டெட் 31 வயதினனாக ஆகும்போது) ராபின் டெட்டின் குடியிருப்பில் வசிப்பதாக தெரிய வருகிறது.[39] இது "நாட் எ பாதெர்ஸ் டே" என்ற தொடர் நிகழ்வில் உறுதி செய்யப்படுகிறது. சீசன் நான்குஸ்டெல்லா டெட்டின் கேள்விக்கு "ஆம்" என்கிறாள், ஆனால் அவனை திருமண மண்டபத்தில் தனிமையில் விட்டு விட்டு, அவளுடைய மகளின் தந்தையுடன் சேர்ந்து மற்றும் இணைந்து வாழ, டோனியுடன் சென்று விடுகிறாள். சில நாட்களுக்குப்பிறகு, டெட் முடிவில் அவர்களுடன் சமரசம் செய்துகொள்கிறான். பார்னி ரோபின் மேல் கொண்ட உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தவிக்கிறான். பார்னியின் நிறுவனம் அவனை ஒரு புதியதாக கையகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் உறுப்பினராக மாற்றியமைக்கிறது, அதாவது கோலியாத் நேஷனல் பேங்க் (GNB), மற்றும் பார்னி தனது சார்பில் மார்ஷல்லை அந்த வங்கியில் ஒரு அறிவுரை வழங்குபவராக பணியில் அமர்த்துகிறார் மேலும் டெட்டின் நிறுவனத்துடன் GNB வங்கியில் தலைமை செயலக கட்டிட வடிவமைப்பு அமைக்க ஒப்பந்தம் செய்துகொள்கிறார். மார்ஷல் மற்றும் லில்லி இறுதியாக அவர்களுடைய புதிய குடியிருப்பிற்கு குடி பெயருகின்றனர் மற்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு தயாரா என்ற கேள்விக்கு பதிலறியாமல் மன்றாடுகின்றனர். ராபின் ஜப்பானில் ஒரு புதிய வேலையில் சேருகிறார், ஆனால் உடனுக்குடன் அதை ராஜினாமா செய்து விடுகிறார் ஏன் என்றால் அந்த வேலை 'மெட்ரோ நியூஸ் ஒன்' ஐ விட மோசமாக இருப்பதாலும் மேலும் டெட்டின் திருமணத்தில் கலந்துகொள்ள நியூ யார்க்கிற்கு திரும்பிவருகிறார். அதற்குப்பிறகு, ராபின் மற்றும் டெட் ஒரே வீட்டில் வசிக்கின்றனர் மற்றும் இறுதியாக விடியற்காலை 4:00 A.M. செய்தி ஒளிபரப்பில் ஒரு செய்தி தொகுப்பாளராக வேலை கிடைக்கப்பெறுகிறார், அதற்காக பார்னி அவளுடைய வீடியோ சுயவிவரத்தை பல ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தார். டெட்டிற்கு பார்னி ராபினிடம் கொண்டிருக்கும் அன்பைப்பற்றி தெரிய வருகிறது, டெட் மற்றும் ராபின் எப்போதும் கூட இருந்து சேர்ந்து உறங்கும் போது, அதனால் அவர்கள் இருவரும் அவர்களுடைய கெட்ட பழக்கங்களுக்காக சண்டை போட்டுக்கொள்வதை நிறுத்திக்கொண்டார்கள். பார்னி மற்றும் ராபினுக்கு இடையேயான உறவுமுறை பிரச்சினைகள் வலுக்கின்றன. லில்லி அவளுடைய அனுமதியில்லாத அவருடைய அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டதை டெட் அறிந்துகொள்கிறார் மற்றும் அதன் காரணமாக ராபினுடன் கூடிய உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறார். ராபின் மற்றும் டெட் இறுதியில் அதைப்பற்றி பேசுகின்றனர், அதனால் அவர்களுக்கிடையே நிலவிய உறவுமுறை நிலையான தன்மையை அடைகின்றது. டெட் தனது GNB வடிவமைப்பு வேலையை இழக்க நேரிடுகிறது, அதன் காரணமாக அவர் தனக்கே சொந்தமான "மொஸ்பியஸ் டிசைன்ஸ்" என்ற நிறுவனத்தை நிறுவுகிறார். அவருடைய பிறந்த நாள் நெருங்க நெருங்க, டெட் வயது முதிர்வதைப்பற்றி எதிர்பார்க்கிறார் ஆனால் இந்த பயணமும் விளையட்டுக்குணம் நிறைந்ததாக இருக்கும் என்பதையும், முடிவும் அது போலவே இருக்கும் என்பதையும் நன்றாக புரிந்து கொள்கிறார். அதைப்போலவே, பார்னி கடைசியில் தனது 200 ஆவது பெண்ணுடன் இரவை கழிக்கிறார், மேலும் இதற்கெல்லாம் காரணமாக இருந்து தன்னை தனது சிறிய வயதில் சீண்டிய முரட்டுப்பிள்ளையை நினைவு கூருகிறார், மேலும் இனிமேல் அவரது வாழ்க்கை எப்படி அமையும் என்பதை நினைத்துப்பார்க்கிறார், அவைகள் யாவும் அவர் ரோபினிடம் கொண்ட உணர்ச்சிகளை மேலும் உறுதிபடுத்துவதை காண்கிறார். டெட், மஞ்சள் நிறக்குடையுடன் போகும் போது, ஸ்டெல்லா மற்றும் டோனியை எதிர்கொள்கிறார். டோனி பிறகு அவரை பார்க்க வருகிறார், அவர் டெட் தன்னால் ஸ்டெல்லாவை இழந்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறார். டோனி அவருக்கு கட்டிடக்கலை பேராசிரியராக ஒரு வேலையை அளிக்க முன்வருகிறார், ஆனால் அதை டெட் மறுத்துவிடுகிறார், ஏன் என்றால் அவர் ஸ்டெல்லா இல்லாமல் போனதற்காக வருத்தமடையவில்லை என்றும், மேலும் அவள் அவனை ஏமாற்றியதற்காக அவளை திரும்ப அடையவும் விரும்பவில்லை என்பதையும் கூறுகிறார். இதன் காரணமாக டோனி ஸ்டெல்லாவிடம் இருந்து பிரிந்து விடுகிறார், ஆனால் ஸ்டெல்லா டெட்டிடம் அந்த ஜோடியை சேர்த்துவைக்குமாறு நம்பவைக்கிறாள், மேலும் அதற்குப் பின் அவர்கள் கலிபோர்னியாவிற்கு சென்று விடுகின்றனர். அவர் ஸ்டெல்லாவிடம் கூறிய இறுதி வார்க்த்தைகளில், டெட் கூறுவது என்ன என்றால், டோனி மற்றும் ஸ்டெல்லா, மேலும் லில்லி மற்றும் மார்ஷல் இடையே ஒருவருக்கு ஒருவர் இருப்பதைப்போலவே தனக்கும் அமையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். அதற்கு ஸ்டெல்லா அவனுடைய பெண் மிகவும் விரைவில் அவனிடம் வந்து கொண்டிருப்பதாக அவனிடம் கூறுகிறார். லில்லி பார்னியிடம் இருந்து ஒரு கெட்ட நகைச்சுவையை கேட்டு கோபித்துக் கொண்டதால், அவர் (லில்லி) மன்றத்தை விட்டு போய்விடுகிறார் மற்றும் நான்கு வாரங்களுக்கு தலை மறைவாகிறார் (ஹன்னிகனுக்கு குழந்தை பிறப்பதாக இருந்ததால் அவள் படத்தில் வராமல் இருப்பதற்காக திட்டமிட்டு செயல்படுத்திய 'சதித் திட்டம்.')[சான்று தேவை]. சீசனின் முடிவில், ராபின் கடைசியாக பார்னி தன்னிடம்கொண்ட காதலைப்பற்றி உணருகிறார், மேலும் அவரும் அதற்கு எதிருரை கூறுகிறார். டெட் இதுவரை கட்டிடக்கலைஞராக இருந்தது போதும் என்று எண்ணுகிறார் மேலும் கட்டிடக்கலையை கற்பிக்கும் ஆசிரியராக மாற முடிவெடுக்கிறார். இறுதிக்காட்சியானது டெட்டின் குழந்தைகளின் அம்மா அவருடைய வகுப்பில் இருப்பதாக கூறும் சீண்டலுடன் முடிவடைகிறது. சீசன் ஐந்துஇந்த சீசன் டெட் முதன் முதலாக ஒரு விரிவுரையாளராக முதல் நாளில் துவங்கும் காட்சியுடன் தொடங்குகிறது, அவர் வகுப்பின் நடுவில் நின்றுகொண்டு இருக்கிறார் - அம்மா அங்கு இருந்தாலும், அது அவர் நடத்த வேண்டிய கட்டிடக்கலை வகுப்பாக இல்லாமல், மாறாக அது பொருளாதார வகுப்பாக இருக்கிறது. பார்னி மற்றும் ராபின்இருவரும் கோடை காலம் முழுவதும் உறவு கொண்டிருந்ததாக தெரிய வருகிறது. லில்லி அவர்கள் இருவரையும் ஒரு அறையில் அடைத்து விடுகிறார், இருவரையும் ' பேச வைப்பதற்கு', இருவரும் இறுதியாக அவர்களுடைய உறவுகளை உணர்ந்துகொள்கின்றனர். ஒரு சுமாரான ஒட்டுதலுக்குப் பிறகு அவர்கள் பிரிந்து செல்ல முடிவெடுக்கின்றனர். ராபின் அதனை "இரு நண்பர்கள் மீண்டும் திரும்பி சேர்வதாக " கூறி விளக்குகிறார். தொடர் நிகழ்வுகள் அல்லது நிகழ்ச்சிகள்
உள்கட்டுகள்
விமர்சன வரவேற்புஇந்த தொடர் காட்சிக்கு மக்களிடம் இருந்து நல்ல விமரிசனம் கிடைத்துள்ளது மற்றும் (metacritic.com) என்ற வலைத்தளத்தில் 69/100 மதிப்பீட்டெண்கள் கிடைத்துள்ளது.[21]
இந்த காட்சியை சராசரியாக 9.72 மில்லியன் பார்வையாளர்கள் 4 ஆம் சீசனில் பார்த்தார்கள், மற்றும் 12 ஆவது தொடர்நிகழ்வின் பொது மிகவும் அதிகமாக 11.85 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தார்கள், சீசன் 1 (பெப்ரவரி 2006) தொடங்கியதில் இருந்து இதுவே மிகவும் மிகையான பார்வையாளர்கள் கொண்டதாகும். தொடர்நிகழ்வு 18, அது நிகழ்ச்சி நிரலின் 8:30 மணிக்கு பதிலாக 8:00 மணி நிரலில் தொடங்கியது, சீசனின் மிகவும் குறைவான 7.40 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. இது மட்டும் தான் ஹௌ ஐ மெட் யுவர் மதர் தொடரின் மிகக்குறைவாக பார்வையாளர்கள் கொண்ட தொடர் நிகழ்வாகும், "திட்ட வெளிப்படைத் தெரிவிப்பு" தொடர்நிகழ்விற்கு பின்னால் வந்த தொடர்நிகழ்வு. விருதுகள்2006
2007
2008
2009
டிவிடி வெளியீடுகள்சீசன் வெளியீடுகள் வட்டாரம் 1
குறிப்புகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஹௌ ஐ மெட் யுவர் மதர்
|
Portal di Ensiklopedia Dunia