1-மெத்தில்நாப்தலீன்
1-மெத்தில்நாப்தலீன் (1-Methylnaphthalene) என்பது C11H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு ப.அ.நீ. ஆகும். இச்சேர்மத்தினுடைய சிடேன் எண் பூச்சியம் ஆகும். முன்னதாக மிகக் குறைந்த சிடேன் எண் கொண்ட சேர்மத்திற்கு உதாரணமாக 1-மெத்தில்நாப்தலீன் சொல்லப்பட்டு வந்தது. எனினும் விலை உயர்வு மற்றும் கையாளுமை சிரமங்களை முன்னிட்டு இச்சேர்மத்தின் இடத்தை ஐசோசிடேன் பிடித்துக் கொண்டது. இதனுடைய சிடேன் எண் 15 ஆகும்[2]. அண்டத்தில் 1-மெத்தில்நாப்தலீன் உள்ளிட்ட பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களை கண்டறியவும் கண்காணிக்கவும் தேவையான நன்கு மேம்படுத்தப்பட்டத் தரவுகளை[3][4] நாசா 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 இல் வெளியிட்டது. அண்டத்தில் காணப்படும் கார்பனில் 20 சதவீதத்திற்கும் மேலான கார்பன் அநேகமாக பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்று நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவையே பூமியில் வாழ்க்கை உருவாதலுக்கான[3] வாய்ப்புள்ள தொடக்க வேதிப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பெரு வெடிப்புக்கு சற்றுப் பின்னர் பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்கள் உருவாகியிருக்க வேண்டும். அதனால்தான் இவை அண்டத்தில் பெருமளவில் காணக்கிடைக்கின்றன[5][6][7]. மேலும், இவை புதிய விண்மீன்கள் மற்றும் புறக்கோள்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன[3]. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia