1-எத்தினைல்வளையயெக்சனால்
1-எத்தினைல்வளையயெக்சனால் (1-Ethynylcyclohexanol) C8H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஆல்கைனைல் ஆல்ககால் வழிப்பெறுதியாகும். இவை இரண்டும் செயற்கை முன்னோடி சேர்மங்களாகும். அமைதிப்படுத்தும் மருந்தான எத்தினமேட்டை உடல் வளர்சிதைமாற்றம் செய்த பிறகு அம்மருந்தின் செயல் வடிவமாக அமைதிப்படுத்தல், வலிப்பு தடுத்தல், தசை தளர்வை அளித்தல் போன்ற செயல்பாடுகளை இது மேற்கொள்கிறது. அசல் மருந்தின் மருந்தியல் விளைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் முதன் முதலில் ஐக்கிய ராச்சியத்தில் இது அடையாளம் காணப்பட்டது.[1][2][3][4] தயாரிப்பு![]() நீர்ம அமோனியாவிலுள்ள சோடியம் அசிட்டலைடுடன் வளையயெக்சனோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து அமிலச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தினால் 1-எத்தினைல்வளையயெக்சனால் உருவாகிறது.[5] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia