1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல்(1-Diazidocarbamoyl-5-azidotetrazole) என்பது C2N14[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு பல்லினவளைய கனிம வேதியியல்சேர்மமாகும். டெரெக் லோவி[2]) என்ற மருத்துவ வேதியியலர் மற்றும் வேதியியல் வலைப்பதிவர் இச்சேர்மத்தை அசைடோசைடு அசைடு என்ற செல்லப்பெயரால் குறிப்பிடுகிறார். ஐசோசயனோசன்டெட்ரா அசைடின் மாற்றியமாகவும் மிகவும் அபாயகரமான வெடிபொருளாகவும் இது கருதப்படுகிறது.
தயாரிப்பு
டிரையமினோகுவானிடியம் குளோரைடுடன் நீரில் கரைக்கப்பட்ட சோடியம் நைட்ரைட்டைச் சேர்த்து ஈரசோனியமாக்கல் மூலம் 1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல் உற்பத்தி செய்யப்படுகிறது[1].
தீங்குகள்
எந்தவொரு சிறு தூண்டுதலும் 1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல் சேர்மத்தை வெடிக்கச் செய்யும்[4]. இராமன் நிறமாலையியலைப் பயன்படுத்தி இதனுடைய அகச்சிவப்பு நிறமாலை வீச்சை பட்டியலிட முயன்றபோதே இது வெடித்தது[2].
↑Klapötke, Thomas M.; Krumm, Burkhard; Martin, Franz A.; Stierstorfer, Jörg (2 January 2012). "New Azidotetrazoles: Structurally Interesting and Extremely Sensitive". Chemistry - an Asian Journal7 (1): 214–224. doi:10.1002/asia.201100632.