1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு
1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு (1-Butyl-3-methylimidazolium tetrachloroferrate) என்பது C8H15Cl4FeN2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். இரும்பின் இந்த அணைவுச் சேர்மம் காந்தப்பண்பு கொண்ட அயனித் திரவமாகும் 1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் குளோரைடுடன் இரும்பு(III) குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. தண்ணீரில் மிகக் குறைந்த கரைதிறன் கொண்டிருக்கும்.[1][2] அதிக சுழல் FeCl4 எதிர்மின்னயனி இருப்பதால், இத்திரவமானது பாரா காந்தமாகவும் மற்றும் 40.6 × 10−6 மின்காந்த அலகு கிராம்−1 காந்த உணர்திறனும் கொண்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. ஒரு சோதனைக் குழாயில் 1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு திரவத்தை ஈர்க்க ஓர் எளிய சிறிய நியோடிமியம் காந்தம் போதுமானதாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia