1556 சென்சி நிலநடுக்கம்
1556 சென்சி நிலநடுக்கம் சீனா நாட்டின் சென்சி பகுதியில் ஏற்பட்ட ஒரு மாபெரும் பேரழிவுகரமான நிலநடுக்கம் ஆகும். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவுகளை மற்றும் அதிக அளவிலான மரணங்களை ஏற்படுத்திய நிலநடுக்கமாகும். சீனாவில் இந்நிலநடுக்கத்தால் சுமார் 830,000 மக்கள் கொல்லப்பட்டனர். மிங் வம்சத்தின் காலத்தில், சென்சி மாகாணத்தில் 1556 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. சென்சி, ஷான்சி, ஹெனான், கான்சு, ஹெபேய், ஷாண்டோங், ஹூபிய், ஹுனான், ஜியாங்ஷு மற்றும் அன்ஹூயி மாகாணங்களில் 97 க்கும் அதிகமான சிறு - மாவட்டங்கள் பாதிக்கப்பிற்கு உள்ளாகின. பெய்ஜிங், செங்டூ மற்றும் ஷாங்காய் நகரங்களில் பல கட்டிடங்கள் சிறிது சேதமடைந்தன. சுமார் 840 கிலோமீட்டர் நீளமுள்ள (520 மைல்) பகுதிகள் இந்த நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்டன. சில சிறு - மாவட்டங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நிலநடுக்கத்தால் பலி ஆகினர்.[1] இந்நிலநடுக்கம் ஏற்பட்ட காலகட்டத்தில் பல மக்கள் "யாஓடாங்க்" எனப்படும் குகை வீடுகளிலும், சாம்பல்-மஞ்சள் நிற வண்டல் மண் மற்றும் பாறைகளால் செய்யப்பட்ட செயற்கை குகைகளில் வாழ்ந்து வந்தனர். இவற்றில் பல நிலநடுக்கத்தின் சக்தியை தாங்க இயலாமல் சரிந்து விழுந்து உயிர் பலிகளை அதிகரித்தது. 1556 சென்சி நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 8.0 என பதிவாகியுள்ளது. நிலவியல்சென்சியில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது சென்சி மாகாணத்தில் உள்ள வேய் ஆற்றின் பள்ளத்தாக்கில் ஹூவாக்சீன், வேய்னான் மற்றும் ஹூவாயின் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. ஹூவாக்சீன் பகுதியில் ஒவ்வொரு கட்டடமும் வீடும் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிலநடுக்கத்திற்கு பலியாகினர். வேய்னான் மற்றும் ஹூவாயின் பகுதிகளிலும் ஹூவாக்சீனின் நிலைமை தான் இருந்தது. சில பகுதிகளில், பூமியில் 20 மீட்டர் (66 அடி) ஆழமான பிளவுகள் வெடித்தன. அழிவு மற்றும் இறப்பு எல்லா இடங்களிலும் இருந்தன. நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து 500 கிலோமீட்டர் (310 மைல்) வரை பல இடங்களை இந்நிலநடுக்கம் பாதித்தது. இந்நிலநடுக்கம் நிலச்சரிவுகளைத் தூண்டியது, இது மேலும் பெரிய இறப்பு எண்ணிக்கைக்கு பங்களித்தது. சென்சி நிலநடுக்கம் மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்டது. எனவே, சீன வரலாற்று பதிவில், இந்த பூகம்பம் பெரும்பாலும் ஜியாஜிங் மாபெரும் நிலநடுக்கம் என குறிப்பிடப்படுகிறது.[2] புவியியல் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நவீன மதிப்பீடுகள் சென்சி நிலநடுக்கம் ஏறத்தாழ ரிக்டர் அளவுக் கோளில் 8.0 அளவாக கணிக்கப் பட்டுள்ளது. பலி எண்ணிக்கையின் அடிப்படையில் மிகவும் அழிவுகரமான நிலந்டுக்கமாக சென்சி நிலநடுக்கம் உள்ளது. அனைத்து இயற்கை பேரழிவுகளில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள பேரழிவுகளும் சீனாவில் ஏற்பட்டவையே. சென்சி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளின் காரணாமாக சீயான் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புத்தக் கோவில் ஒன்றின் மூன்று மாடிகள் சிதைந்து அதன் உயரமும் குறைந்தது. 46 மீட்டர் அளவில் உயரமாக இருந்த கோவில் 43 மீட்டர் உயரமாக குறைந்தது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia