1952 எகிப்தியப் புரட்சி1952ஆம் ஆண்டு நடைபெற்ற எகிப்தியப் புரட்சி (அரபி: ثورة 23 يوليو 1952), சூலை 23 புரட்சி எனவும் அறியப்படுவது, முகம்மது நஜீப் மற்றும் ஜமால் அப்துல் நாசரால் முன்னெடுக்கப்பட்டு, "சுதந்திர அதிகாரிகள் இயக்கம்" (Free Officers Movement) என்று தம்மை அழைத்துக்கொண்ட இளம் படைத்துறை அதிகாரிகளின் குழுவொன்று சூலை 23,1952 அன்று நடத்திய இராணுவப் புரட்சியாகும். இந்த புரட்சியின் முதல் நோக்கமாக எகிப்திய மன்னர் ஃபரூக்கை வீழ்த்துவதாக இருந்தது.[1] பின்னர் எழுந்த அரசியல் வேட்கைகளுக்கு இணங்க முடியாட்சியை முடிவிற்கு கொண்டு வந்து குடியரசை நிறுவுவதையும் எகிப்திலுள்ள பிரித்தானிய ஆளுமைப்பகுதிகளையும் சூடானையும் விடுவிப்பதையும் நோக்கங்களாக் கொண்டது. இந்தப்புரட்சியின் வெற்றி பல அரபு மற்றும் ஆப்பிரிக்கநாடுகளில் இதனைப்போன்று ஊழல் மலிந்த ஆட்சியாளர்களைப் பதவியிறக்க மேற்கொண்ட இயக்கங்களுக்கு ஊக்கமளித்தது. வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia