Error: All values must be integers(help) – மார்ச்சு 1974 (மார்ச்சு 1974)
வேறு பெயர்கள்
அராபிய எண்ணெய் வணிகத்தடை
1973 எண்ணெய் நெருக்கடி (1973 oil crisis) பாறை எண்ணெய் ஏற்றுமதிசெய் அரபு நாடுகளின் அமைப்பு அல்லது ஓயெப்பெக் நாடுகள் அக்டோபர் 1973இல் எண்ணெய் ஏற்றுமதிக்கு வணிகத்தடை செயல்படுத்தியதால் ஏற்பட்டது. இது யோம் கிப்பூர் போர்|யோம் கிப்பூர் போரின்போது "ஐக்கிய அமெரிக்கா இசுரேலிய படைகளுக்கு திரும்பவும் ஆயுதங்களை வழங்கும் முடிவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது.[1][2] அமெரிக்க செயல்பாடுகளே வணிகத்தடையை தூண்டியதாகக் கருதப்பட்டதாலும் உயர்ந்த எண்ணெய் விலைகள் நெடுநாள் நீடிக்கக்கூடிய வாய்ப்பு, வழங்கலில் தடங்கல், பொருளாதாரத் தேக்கம் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் ஆகிய காரணங்களாலும் நேட்டோ அமைப்பில் பலத்த பிளவு ஏற்பட்டது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் சப்பானும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டன. அரபு எண்ணெய் தயாரிப்பாளர்களும் அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதியை மீட்கும் வரை தங்கள் வணிகத்தடை தொடரும் என உறுதியாக இருந்தது நிலைமையை சிக்கலாக்கியது. இவற்றை சமாளிப்பதற்காக நிக்சன் நிர்வாகம் அரபு எண்ணெய் தயாரிப்பாளர்களிடம் வணிகத்தடையை நீக்கக் கோரியும் எகிப்து, சிரியா,இசுரேல் நாடுகளுடன் சண்டையை நிறுத்தி இசுரேலை சினாய் மற்றும் கோலன் ஹைட்ஸ் பகுதிகளிலிருந்து பின்வாங்கச் செய்யவும் தனித்தனியே பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது. சனவரி 18, 1974 அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிசிஞ்சர் சினாய்ப் பகுதிகளிலிருந்து இசுரேல் பின்வாங்க உடன்படச் செய்தார். இசுரேலுக்கும் சிரியாவிற்கும் உடன்பாடு காண வாய்ப்புள்ளது என்பதே அரபு எண்ணெய் நாடுகள் தங்கள் வணிகத்தடையை மார்ச்சு சு 1974இல் நீக்கிக்கொள்ள வழி வகுத்தது. மேயில் இசுரேல் கோலன் ஹைட்சின் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கியது.[2]
தனியாக, ஓயெப்பெக் உறுப்பினர்கள் உலக பெட்ரோலிய விலைகளை தீர்மானிக்கும் முறைமையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து உலக எண்ணெய் விலைகளை உயர்த்தினர். பல ஆண்டுகளாக தங்கள் எண்ணெய் வளங்களுக்காக குறைந்த வருமானமே பெற்று வந்த நாடுகள் இந்த வளங்களை கண்டறிந்து செயற்படுத்திய மேற்கத்திய நிறுவனங்களுடனான உடன்படிக்கைகளை மீளாய்வு செய்து தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டன.
1861–2007 காலகட்டத்தில் விளங்கிய எண்ணெய் விலைகளின் வரைபடம். 1973இல் திடீரென்ற உயர்வினைக் காணலாம். மற்றொன்றை 1979ஆம் ஆண்டு ஆற்றல் நெருக்கடியின்போது காணலாம். இளஞ்சிவப்பு கோடு பணவீக்கத்தை கணக்கெடுத்த உண்மை மதிப்பில் காட்டப்பட்டுள்ளது.
தொழில் முன்னேற்றமடைந்த நாடுகள் பாறை எண்ணெயை சார்ந்து இருந்தனர்; அவர்களது முதன்மை வழங்குனராக ஓயெப்பெக் இருந்தது. திடீரென உயர்ந்த விலையேற்றத்தால் இந்த நாடுகளில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. (சிலர் இந்தத் தொடர்பினை மறுத்துள்ளனர்.[3]) எண்ணெயின் கடும் விலையேற்றத்திற்கு எதிர்வினையாக இந்த நாடுகள் தங்கள் எண்ணெய் சார்பைக் குறைக்க மாற்று எரிபொருள் வளங்களை ஆராயத் துவங்கினர். பெரும் பொருளியல் வீழ்ச்சிக்குப் பின்னதாக தொடர்ந்த பொருளியல் தாக்கத்தை இந்த 1973 "எண்ணெய் விலை அதிர்ச்சியும் ", 1973-1974 ஆண்டுகளில் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சியும் ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.[4]
உடனடி பொருளாதார தாக்கங்கள்
இத்தடையின் மூலம் உடனடியாக பலவகையில் பொருளாதார தாக்கங்கள் இருந்தன.ஓபெக் (OPEC) அமைப்பின் நடவடிக்கைகள் மூலம் எண்ணெய் நிறுவனங்களை கடுமையான விலை ஏற்றத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.இதனால் 1974 ஆம் ஆண்டு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $12 அமெரிக்க டாலர் என்ற வகையில் அதன் முந்தய விலையை போல மூலம் நான்கு மடங்கு அதிகரித்தது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பெரும் செல்வம் குவிந்தது மேலும் உலக பொருளாதாரமானது மறைமுகமாக மத்திய கிழக்கு நாடுகளின் வசம் வந்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் பெரும் பெருளாதார சரிவை சந்தித்தது.
இந்த காரணகளால் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான்காவது அரேபிய-இஸ்ரேலிய போரில் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பிரிட்டன்,கனடா,ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய மற்ற தொழில்துறை அரசுகள் இஸ்ரேலுக்கு அதிக அழுத்தம் கொடுத்தது.அரபு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தடைசெய்ததன் மூலம் போரினை முடிவுக்கு கொண்டு வந்தததால் இது "எண்ணெய் ஆயுதம்" என்று அறியப்பட்டது.
அதற்கு அடுத்து வரும் காலங்களில் அரபு எண்ணெய் ஏற்றுமதி துண்டிப்பு அச்சுறுத்தலை நீக்க இஸ்ரேல் பற்றிய தங்களது வெளிநாட்டு கொள்கைகளை அரப்பு நாடுகளுக்கு ஆதரவாய் மாற்றியமைத்தது.
இது நெருக்கடி களங்களில் இதனால் அதிகமாக பஹிக்கப்பட்டது அமெரிக்க நாடாகும் இது அங்கு பெரிய அளவில் பொருளாதார பிரச்சினைகளையும், பொருளாதார பணவீக்க தாக்கங்களையும் கொண்டிருந்தது.இந்த சூழலில் பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் எண்ணெய் படுகைகளை கண்டறிந்து உற்பத்தி செய்யும் ஆய்வுகளில் இறங்கினர்.
நெருக்கடி காலங்களுக்கு பிறகு அரபு நாடுகளின் கூட்டமைப்புக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்ததால் பல வளர்ச்சி திட்டங்களை இயற்றியது,இதன் காரணமாக பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின.
இதன் காரணமாக பல நாடுகளில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் அமெரிக்காவில் அந்த வருடம் கிறிஸ்மஸ் விளக்குகளை எரிய விட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.மேலும் வார இறுதி நாட்களில் பெட்ரோல் விநியூகத்திர்க்கு தடை விதிக்கப்பட்டது.
1973-74 ஆண்டுகளில் குளிர்காலத்தில் பிரிட்டனில் ஒரு பெரிய ஆற்றல் நெருக்கடியால் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மற்றும் இரயில் தொழிலாளர்கள் அதிகாக பாதிக்கப்பட்டனர்.மேலும் இங்கிலாந்து , ஜெர்மனி , இத்தாலி , சுவிச்சர்லாந்து , நார்வே போன்ற நாடுகளில் ஞாயிறு அன்று பறத்தல்,ஓட்டுதல் மற்றும் படகு சவாரி ஆகியவை தடை செய்யப்பட்டது.செவிடன் நாடானது எண்ணெய் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் போது விநியோக முறையை அறிமுகபடுத்தியது.நெதர்லாந்து நாட்டில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவை விட அதிகமாக எரிபொருட்களை பயன்படுத்தர்க்கு சிறை தண்டை கூட விதிக்கப்பட்டது.
ஒரு சில மாதங்கள் கழித்து மார்ச்சு 1974 இல் வாஷிங்டன் எண்ணெய் கூட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டது.எனினும் இதன் விளைவுகள் 1970 களில் உலக சந்தையில் டாலரின் முக்கியதுவத்தை குறைத்தது.
Accornero, Guya (2016). The revolution before the revolution: late authoritarianism and student protest in Portugal. Protest, culture and society. New York ; Oxford: Berghahn. ISBN978-1-78533-114-5.
Byrne, Christopher; Randall, Nick; Theakson, Keven (2021) [2020]. "Edward Heath: Leadership Competence and Capability". In Roe-Crines, Andrew S.; Heppell, Timothy (eds.). Policies and politics under Prime Minister Edward Heath. Palgrave studies in political leadership. Cham, Switzerland: Palgrave Macmillan. pp. 317–354. ISBN978-3-030-53673-2.
Eckstein, Otto (1978). The great recession, with a postscript on stagflation. Data resources series ; v. 3. Amsterdam ; New York : New York: North-Holland Pub. Co. ; distributors for the U.S. and Canada, Elsevier/North Holland. ISBN978-0-444-85204-5.
Garavini, Giuliano (2019). The rise and fall of OPEC in the twentieth century (1st ed.). Oxford, United Kingdom: Oxford University Press. ISBN978-0-19-883283-6.
Hermele, Kenneth; Odén, Bertil (1988). Sanction dilemmas: some implications of economic sanctions against South Africa. Uppsala: Scandinavian Institute of African Studies [Nordiska Afrikainstitutet]. ISBN978-91-7106-286-4.
Masouros, Pavlos E. (2013). Masouros, Pavlos E. (ed.). Corporate law and economic stagnation: how shareholder value and short-termism contribute to the decline of the Western economies. Dovenschmidt monographs. The Hague: Eleven Internat. Publ. ISBN978-94-90947-82-8.
Silverwood, James (2021) [2020]. "Competition and Credit Control, Monetary Performance, and the Perception of Macroeconomic Failure: The Heath Government and the Road to Brexit". In Roe-Crines, Andrew S.; Heppell, Timothy (eds.). Policies and politics under Prime Minister Edward Heath. Palgrave studies in political leadership. Cham, Switzerland: Palgrave Macmillan. pp. 87–114. ISBN978-3-0305-3673-2. OL36280331M.
Skinner, Rob (2017). Modern South Africa in world history: beyond imperialism. London Oxford New York New Delhi Sydney: Bloomsbury Academic, an imprint of Bloomsbury Publishing Plc. ISBN978-1-4411-6476-6.
Morgan, Oliver; Islam, Faisal (2001). Saudi dove in the oil slick, The Guardian. Sheikh Ahmed Zaki Yamani, former oil minister of Saudi Arabia, gives his personal account of the 1973 energy crisis.